வெறும் ரூ15க்கு 200 கி.மீ போகலாம்! வந்தாச்சு கோமகி எம்எக்ஸ் 16 ப்ரோ பைக்!
கோமகி நிறவனம் இந்தியாவில் தனது எம்எக்ஸ் 16 ப்ரோ என்ற க்ரூஸர் பைக்கை களம் இறக்கியுள்ளது இந்த பைக் ரூ1.69 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.இந்த பைக் முழு சார்ஜில் 220 கி.மீ பயணிக்கும் இதற்கு வெறும் ரூ15 தான் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
எலெக்ட்ரிக் டூவீலர் மார்கெட் பெரியதாக விரிவடைந்து வரும் நிலையில் கோமகி எலெக்ட்ரிக் நிறுவனம் தனது புதிய க்ரூஸர் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி இந்தபைக்கிற்கு கோமகி எம்எக்ஸ் 16 ப்ரோ என பெயர் வைத்துள்ளது. இந்த பைக் ரூ1,69,999 என்ற விலையில் விற்பனவைக்கு வருகிறது. இந்த பைக் ஸ்டைல், ஃபெர்ஃபார்மென்ஸ், குறைந்த செலவு ஆகியவற்றை வழங்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

கோமகி நிறுவனம் இந்த எம்எக்ஸ் 16 ப்ரோ பைக்கை முழுமையாக மெட்டல் பாடியை வைத்து உருவாக்கியுள்ளனர். இது நீடித்த உழைப்பை வழங்குகிறது. ஸ்டெபிளான ரைடிங்கிற்கு நீளமான ஃபிரேம் வழங்கப்பட்டுள்ளது. இது போக சொகுசான சீட்டுகள், குறைந்த வைப்ரேஷன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்ப்டடுள்ளது. இது கிளாசிக் க்ரூஸர் பைக்காக சாலைகளில் கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 2 விதமான கலர் ஆப்ஷன்கள் உள்ளன. இது ஸ்டைலை மேம்படுத்துகிறது.
இந்த பைக்கின் பெர்ஃபார்மென்ஸை பொருத்தவரை 5KW மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக் அதிகபட்சம் 80 கி.மீ வேகம் வரை பயணிக்கும் திறன் கொண்டது. இதற்காக 4.5KWH பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இது முழு சார்ஜில் 160-220 கி.மீ வரை பயணிக்கும் திரன் கொண்டது.
இந்த பைக்கை முழுமையாக சார்ஜ் செய்ய ரூ15-20 தான் செலவாகும். இவ்வளவு செலவில் நீங்கள் 200 கி.மீ வரை பயணிக்க முடியும். இதுவே நீங்கள் பெட்ரோல் பைக்கில் பயணிக்க வேண்டும் என்றால் ரூ700 வரை கூட செலவாகும். இந்த பைக்கில் 3 டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்ப்டடுள்ளது. இது ஹைவே மற்றும் சிட்டி கண்டிஷன்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சஸ்பென்சன் செட்டப் க்ரூஸர் ஸ்டைலில் கம்ஃபோர்ட்டான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் முக்கியமாக பல அம்சங்கள் இருக்கிறது. அதிக அம்சங்கள் கொண்ட ஒரு எலெக்ட்ரிக் கரூஸர் பைக்காக இது இருக்கிறது. முக்கியமாக முழு கலர் டிஎஃப்டி டிஸ்பிளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி, க்ரூஸ் கண்ட்ரோல், ரிவர்ஸ் அசிஸ்ட், ரீஜனெரேட்டிவ் பிரேக்கிங், ஆட்டோ ரிப்பேர் ஸ்விட்ச், பார்க் அசிஸ்ட் ஆகிய அம்சங்கள் உள்ளது.
நவீன கால பைக்குகளில் உள்ள பெரும்பாலான அம்சங்கள் இருக்கிறது.இதனால் இந்தபைக் சிறப்பாக விற்பனையாக வாய்ப்புள்ளது. எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் கோமகி நிறுவனம் நல்ல அனுபவத்தையும் பெற்றுள்ளதால் தரமான தயாரிப்பை அந்நிறுவனத்தால் வழங்க முடியும். மேலும் விலையும் ரூ1.69 லட்சம் தான் என்பதால் விற்பனை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்று எலெக்ட்ரிக் டூவீலலர் மார்கெட் சிறப்பாக வளர்ந்து வருகிறது. முக்கியமாக ஸ்கூட்டர் செக்மெண்ட் நன்கு வளர்ந்தாலும் அடுத்த இடத்தில் பைக் தான் இருப்பதால் அதை குறிவைத்து கோமகி நிறுவனம் இந்தியாவில் இந்த வாகனத்தை களம் இறக்கியுள்ளது.நிச்சயம் இது மிகப்பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








