வெறும் ரூ.1.30 லட்சத்தில் எலக்ட்ரிக் பைக்கை வழங்க பெரிய மனசு வேணும்! உருவாக்குறது யார்னு தெரியுமா?

கோமகி (Komaki), இந்தியாவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனம். குறிப்பாக, எலக்ட்ரிக் பைக்குகளை (Electric Bikes) விற்பனை செய்யும் மிகவும் சில நிறுவனங்களுள் ஒன்று. ரேஞ்சர் என்கிற பெயரில் எலக்ட்ரிக் பைக்கை இந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், கோமகி நிறுவனத்தில் இருந்து புதியதாக ரேஞ்சர் புரோ (Ranger Pro) மற்றும் ரேஞ்சர் புரோ+ (Ranger Pro+) என்கிற எலக்ட்ரிக் பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இவை இரண்டுமே தாழ்வான உடலமைப்பை கொண்ட க்ரூஸர் (Cruiser) ரக எலக்ட்ரிக் பைக்குகள் ஆகும். இதில் ரேஞ்சர் புரோ எலக்ட்ரிக் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 999 ஆகவும், ரேஞ்சர் புரோ+ எலக்ட்ரிக் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்து 999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

komaki ranger pro electric bikes

இவற்றுடன் ரூ.12 ஆயிரத்து 500 மதிப்பிலான ஆக்ஸஸரீகளையும் பெறலாம். ரேஞ்சர் புரோ மற்றும் புரோ+ எலக்ட்ரிக் பைக்குகள் இரண்டும் ஸ்டைலிஷான தோற்றத்துடன், அதி செயல்திறன்மிக்கதாக உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த வகையில் இந்த இரு ரேஞ்சர் எலக்ட்ரிக் பைக்குகளிலும் 4.2 கிலோவாட்ஸ் திறன் கொண்ட லித்தியம்-இரும்பு-பாஸ்பேட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

இந்த பேட்டரி மூலமாக இயங்கும் எலக்ட்ரிக் மோட்டார் அதிகப்பட்சமாக 6.7 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த இரு பைக்குகளிலும் பொருத்தப்படும் பேட்டரி ஒரே மாதிரியாக இருப்பினும், ரேஞ்சர் புரோ எலக்ட்ரிக் பைக்கில் 160-இல் இருந்து 220கிமீ ரேஞ்சையும், ரேஞ்சர் புரோ+ எலக்ட்ரிக் பைக்கில் 180கிமீ-இல் இருந்து 240கிமீ வரையிலான ரேஞ்சையும் பெறலாம் என கோமகி தெரிவித்துள்ளது.

komaki ranger pro electric bikes

சிறப்பான பயண சவுகரியத்திற்காக புதிய ரேஞ்சர் புரோ மற்றும் புரோ+ பைக்குகளில் டெலெஸ்கோபிக் சஸ்பென்ஷன் (Telescopic Suspension), ட்யூயல் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் சவுகரியமான பொசிஷனில் இருக்கை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன், முழு-வண்ணத்தில் டேஸ்போர்டு, ப்ளூடூத் சவுண்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ரிவர்ஸில் பைக்கை பார்க் செய்யும் வசதி உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த புதிய ரேஞ்சர் எலக்ட்ரிக் பைக்குகளின் சிறப்பம்சங்கள் இத்தோடு நிற்கவில்லை... மொபைல் போனை சார்ஜ் செய்யும் வசதி, டர்போ மோட் (Turbo Mode) மற்றும் கூடுதலாக 50-லிட்டர்கள் கொள்ளளவில் ஸ்டோரேஜ் பகுதி போன்றவையும் இடம்பெற்றுள்ளன. பைக்கை பார்க் செய்வதற்கு (ரிவர்ஸிலும்) உதவியையும் இந்த பைக்குகளில் ஹேண்டில்பாருக்கு மத்தியில் வழங்கப்பட்டுள்ள திரையில் காணலாம்.

இந்த பைக்குகளுக்கு பின்பக்கத்தில் டெயில்லேம்ப்களை பாதுகாக்கும் விதமாகவும், உராய்வு மற்றும் டொக்குகளில் இருந்து பைக்கை பாதுகாக்கும் விதமாகவும் பாதுகாப்பான்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பின் இருக்கையில் அமர்பவருக்கு முதுகு தலையணையும் வழங்கப்பட்டுள்ளதை பைக்கின் படங்களில் காணலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கோமகி நிறுவனத்தின் ரேஞ்சர் எலக்ட்ரிக் பைக்கிற்கு ஏற்கனவே மக்கள் மத்தியில் ஓரளவிற்கு வரவேற்பு உள்ளது. அப்படியிருக்க, புதியதாக புரோ மற்றும் புரோ+ மாடல்களை அறிமுகம் செய்து இந்த எலக்ட்ரிக் பைக்கிற்கான மார்க்கெட்டை மேலும் விரிவுப்படுத்த கோமகி நிறுவனம் முயற்சித்துள்ளது. இது பலனளிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 17, 2025, 20:59 [IST]
English summary
Komaki ranger pro and pro plus electric bikes launched check price features all details here
மேலும்... #electric bike #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+