வெறும் ரூ29,999 எலெக்ட்ரிக் வண்டியா? கிராமத்துல வீட்டுக்கு வீடு இதை வாங்க போறாங்க!
கோமகி எலெக்ட்ரிக் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான எக்ஸ்ஆர்1 எலெக்ட்ரிக் மொபட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுவும் மிக குறைவான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. வெறும் ரூ29,999 என்ற விலையில் இந்த மொபட் விற்பனக்கு வந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கோமகி நிறுவனம் இந்தியாவில் சிறிய ரக எலெக்ட்ரிக் டூவீலர்கள், சரக்குகளை ஏற்றி செல்லும் வகையில் இந்த வாகனங்கள் வடிவமைக்கப்படுகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் புதிய எக்ஸ்ஆர் 1 எலெக்ட்ரிக் மொபட்டை அறிமுகப்படுத்தியள்ளது. இது சிட்டி ரைடிற்கு ஏற்றதாகவும், சுற்றுசூழல் நட்பு கொண்டதாகவும், கிராமப்புற பயன்பாட்டிற்கு ஏற்றதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த எக்ஸ்ஆர்1 மொபட்டில் ரீஜெனரேட்டிவ் கைனடிக் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த வாகனத்தில் உள்ள பேட்டரி முற்றிலுமாக தீர்ந்து போய் விட்டால் தொடர்ந்து பெடல் போட்டுக்கொண்டே வாகனத்தில் பயணிக்க முடியும். இப்படியாக பெடல் போடும் போது வாகனமும் சார்ஜ் ஏறிவிடும்.
சிலர் நடுவழியில் வாகனம் நின்று விட்டால் என்ன செய்வது என குழப்பத்தில் இருப்பவர்களுக்கு ஒரு நல்ல தீர்வாகவும், எலெக்ட்ரிக் வாகன உலகில் ஒரு புதுமையான முயற்சியாகவுமே இது பார்க்கப்படுகிறது. விஐபி படத்தில் தனுஷ் சொல்வது போல பெடல் போட்டுக்கொண்டே வீட்டிற்கு போய்விடலாம்.

இந்த எக்ஸ்ஆர்1 எலெக்ட்ரிக் மொபட்டை சார்ஜ் செய்தால் 70-80 கி.மீ வரை ரேஞ்ச் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கிராமப்புற ஆஃப்ரோடு பயணம், சரக்குகளை ஏற்றி செல்வதற்கும், அதே நேரம் சுற்றுசூழல் கொண்ட கரிசனம் உள்ள வாகடிக்கையாளர்களுக்கு இந்த வாகனம் சிறந்த தேர்வாக இருக்கும். இதில் ஸ்லீக்கான ஃபிரேம், மார்டன் ஃபினிஷ், ஸ்டைலிஷான டிசைன் உள்ளிட்ட அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தில் ஷாக் அப்சர்பிங் சன்பென்சன், அனைத்து சாலைகளிலும் சிறப்பாக செல்லும் வகையில் அதிக டிராக்ஷன் கொண்ட டயர்கள், டுயல் எர்கோனாமிக் சீட்டுகள், அதிக இடவசதி கொண்ட பாஸ்கெட் உள்ளிட்ட பல வசதிகள் இதில் இருக்கிறது. இந்த வாகனம் வெறும் ரூ29,999 என்ற விலையில் தான் விற்பனைக்கு வருகிறது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும்.

இந்த வாகனம் சிட்டி பகுதியை விட கிராம பகுதிகளுக்க தான் ஏற்றதாக இருக்கும். இது ஒரு முறை சார்ஜ் போட்டால் 70-80 கி.மீ ரேஞ்ச் கிடைக்கும் என்பதால் மக்கள் இந்த விரும்பி வாங்குவார்கள். கிராமப்புற மக்களுக்கு இதுநிச்சயம்ஏற்றது. வழியில் சார்ஜ் இல்லாமல் நின்றால் கூட பெடல் போட்டு சார்ஜ் ஏற்ற முடியும்என்பது கூடுதல் வசதி.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிறிய ரக எலெக்ட்ரிக் வாகனங்கள் நிச்சயம் மக்கள் விரும்பும் வகையில் இருக்கம். அதன்படி கோமகி நிறவனத்தின் இந்த வாகனம் மக்களை நிச்சயம் கவரும் இதன் குறைவான விலை மற்றும் சிறந்த அம்சங்கள் இந்த வாகனத்தின் விற்பனையை அதிகமாக்ககூட வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









