புள்ளிங்கோ பைக்கில் வந்த புதிய அப்டேட்! இதை தான் எல்லாரும் எதிர்பார்த்தாங்க!

கேடிஎம் நிறவனம் தனது 160 டியூக் பைக்கில் புதிய வேரியன்டை வெளியிட்டுள்ளது.இந்த வேரயின்டில் 5 இன்ச் முழு கலர் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளுது.இந்த பைக்கின் விலை மற்றும் பிற அம்சங்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கேடிஎம் நிறுவனம்இன்றைய இளைஞர்கள் மத்தியில் பிரபலமான நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் குறைந்த விலை செக்மெண்ட் என 160 செக்மெண்டில் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் கேடிஎம் 160 டியூக் பைக்கில் புதிய டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இது ரூ1,78,536 என்ற விலைய விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

KTM 160 Duke

வழக்கமான ஸ்டாண்டர்டு மாடல் ரூ1,70,545 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது. அந்த மாடலில் 5 இன்ச் எல்சிடி டிஸ்பிளே தான் இருக்கிறது. ஆனால் புதிய வேரியன்டில் டிஎஃப்டி டிஸ்பிளே இருக்கிறது. இந்த இருண்டு வேரயின்டிற்கும் விலை ரூ8000 வரை வித்தியாசம் வருகிறது.

இந்த பைக்கில் கேடிஎம் 3290 டியூக் பைக்கில் உள்ள அதே டிஎஃப்டி டிஸ்பிளே தான் உள்ளது. மேலும் இதில் சிறப்பான கிளியாரிட்டிகாக பவுண்டட் கிளாஸ் வழங்கப்ப்டடுள்ளது. மேலும் இந்த பைக்கில் 4 வழிகளில் கண்ட்ரோல் செய்யும் ஸ்விட்ச் கவழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். இதை ஹேண்டில் பாரில் இணைத்துள்ளனர்.

இந்த டிஸ்பிளேவில் பயணத்தின் போது கவன சிதறல்களை குறைக்க எளிமையான வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் உங்கள் போனை கனெக்ட் செய்து கொள்ள முடியும். செல்போனில் கேடிஎம் மை ரைடு ஆப்பை பயன்படுத்தி செல்போனிலேயே தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த டிஎஃப்டி ஸ்கிரீன் டர்ன் பை டர்ன் நேவிகேஷன்களை வழங்குகிறது. மேலும் இதில் காலர் அலர்ட், மியூசிக் கண்ட்ரோல், நேவிகேஷன் ப்ராம்ப்ட்கள் ஆகியவை தெளிவாக தெரியும். இதனால் டிரைவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய ரூட்டை செல்போனை எடுத்து எடுத்து பார்க்கவோ அல்லது செல்போன் மவுண்ட்களை பயன்படுத்தவோ தேவையில்லை.

காலிங் அம்சங்களை பொருத்தவரை வரும் கால்களை எடுக்கவோ அல்லது கட் செய்யவோ முடியும். பைக் ரைடிங் செய்யும் போது கான்டேக்ட் நம்பர்களை தேட முடியாது. பைக்கை நிறுத்தினால் மட்டுமே அந்த ஆப்ஷன் வரும். மேலும் மியூசிக் சிஸ்டத்தையும் கண்ட்ரோல் செய்ய முடியும். இதை ப்ளூடூத் மூலம் ஹெல்மெட் ஹெட்செட் உடன் கூட இணைக்க முடியும்.

இது போக ரைடர்கள் ஹேண்டில் பாரிலிருந்து கையை எடுக்காமலேயே ஆடியோ சிஸ்டத்தை கண்ட்ரோல் செய்ய முடியும். மேலும் இதில் சூப்பர்மோட்டோ ஏபிஎஸ் சிஸ்டம் உள்ளது. இதை கண்டரோல் செய்யலாம். மேலும் ஏபிஎஸ் கஸ்டமைசேஸை செய்து கொள்ளலாம். ஆர்பிஎம் ஸ்விஃப்ட், ஆர்பிஎம் லிமிட் செட்டிங்களை செய்ய முடியம். மேலும் இந்த ஸ்கிரீன் டார்க் மற்றும் கேடிஎம் ஆர்ஞ்ச் தீம்களில் மாற்ற முடியும்.

இந்த கேடிஎம் 160 டியூக் பைக்கில் 164.2 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்யூட் கூல்டு ஃப்யூயல் இன்ஜெக்டட்ட இன்ஜின் வழங்கப்பட்டுள்ளுது. இது 19 பிஎஸ் பவரையும், 15.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இந்த கார் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்பிளிட் டெரில் ஃபிரேம்வழங்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கேடிஎம் பைக்குகளுக்கு தனி மார்கெட் இருக்கிறது. இதில் தற்போது வந்துள்ள அப்டேட் நீண்ட காலாமாக அதை வாங்க நினைத்தவர்கள் எதிர்பார்த்த அப்டேட் தான். இதனால்இந்த பைக்கின் விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கலாம். விலை அதிகரித்தது. பெரியஅளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, December 19, 2025, 13:30 [IST]
English summary
Ktm 160 duke new 5 inch tft variant price 1 78 lakh
மேலும்... #ktm #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+