இந்த ஒரு டெக்னாலஜிக்காகவே இந்த புதிய கேடிஎம் பைக்கை தைரியமாக வாங்கலாம்! ஷோரூமுக்கு போனால் இனி பார்க்கலாம்!

கேடிஎம் (KTM), ஆஸ்திரியாவை சேர்ந்த உலகளவில் பிரபலமான பைக் நிறுவனம் என்பதை நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். இந்தியாவில் பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டுவரும் கேடிஎம் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் அதன் பைக்குகளை அப்டேட் செய்வதை மறப்பது இல்லை. அந்த வகையில், அடுத்ததாக மேம்படுத்தப்பட்ட 2025 கேடிஎம் 390 ட்யூக் (390 Duke) பைக் மிக விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஷோரூம்களுக்கு வர துவங்கியுள்ள புதிய 390 ட்யூக்கின் விற்பனை ஒரு சில கேடிஎம் டீலர்ஷிப் ஷோரூம்களில் ஏற்கனவே துவங்கப்பட்டு விட்டதாக கூட கூறப்படுகிறது.

ஆனால், புதிய 2025 ட்யூக் பைக்கின் அறிமுகம் குறித்த எந்தவொரு அறிவிப்பையும் கேடிஎம் இதுவரையில் வெளியிடவில்லை. பழைய 390 ட்யூக் பைக்கிற்கும், புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 390 ட்யூக் பைக்கிற்கும் இடையே தொழிற்நுட்ப ரீதியாக சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமானது க்ரூஸ் கண்ட்ரோல் (Cruise Control) ஆகும்.

ktm 390 duke launch soon

க்ரூஸ் கண்ட்ரோலின் பயன் என்னவென்றால், குறிப்பிட்ட தொலைவிற்கு ஒரே சீரான வேகத்தில் பைக்கை இயங்க வைக்கும். தேவையான அந்த சீரான வேகத்தை ரைடர் செட் செய்ய வேண்டியிருக்கும். க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது பயன்படுத்தலாம். போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியை இதனை ஆக்டிவேட் செய்தால், பைக்கின் கண்ட்ரோலை இழக்க நேரிடும்.

அதேபோல், க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை ஈரமான சாலைகளில் பயன்படுத்த கூடாது. நெடுஞ்சாலையாக இருப்பினும், சாலை ஈரப்பதம் இல்லாமல் இருந்தால்தான் சரியாக இருக்கும். இத்தகைய க்ரூஸ் கண்ட்ரோல் தொழிற்நுட்ப வசதியை பல பைக் நிறுவனங்கள் தங்களது மாடர்ன் பைக்குகளில் வழங்க ஆரம்பித்துள்ளன. கேடிஎம் நிறுவனமும் சமீபத்தில் 390 அட்வென்ச்சர் (390 Adventure) பைக்கில் க்ரூஸ் கண்ட்ரோலை வழங்கி இருந்தது.

ktm 390 duke launch soon

அதனை தொடர்ந்து தற்போது, புதிய 390 ட்யூக் பைக்கிலும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், புதிய 390 அட்வென்ச்சர் பைக்கை போன்று, புதிய 390 ட்யூக் பைக்கிலும் 'கன்மெட்டல் கிரே' (Gunmetal Grey) என்கிற புதிய கலர் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கலர் ஆப்ஷனில், பெட்ரோல் டேங்கில் வழக்கமான கேடிஎம் கிராஃபிக்ஸ் உடன் பைக்கின் ஃபெண்டர், பின்பக்க இறுதிமுனை உள்ளிட்டவை கிரே நிறத்தில் கிடைக்கும்.

இவற்றை தவிர்த்து, பழைய 390 ட்யூக்கிற்கும், புதிய 390 ட்யூக்கிற்கும் இடையே எந்த மாற்றமும் கிடையாது. கேடிஎம் 390 ட்யூக் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.2.95 லட்சமாக உள்ளது. புதிய 2025 390 ட்யூக் பைக்கின் விலைகள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. 390 ட்யூக் பைக்கில் 399சிசி லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் பொருத்தப்படுகிறது.

ktm 390 duke launch soon

இந்த கியர்பாக்ஸ் அமைப்பில் பை-டைரக்‌ஷ்னல் குயிக் ஷிஃப்டர் டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது. இந்த பைக்கின் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 46 எச்பி மற்றும் 39 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. ஸ்பிளிட்-ட்ரெல்லிஸ் ஃப்ரேமில் உருவாக்கப்படும் 390 ட்யூக் பைக்குகளில் முன்பக்கத்தில் அட்ஜெஸ் செய்யக்கூடிய அபெக்ஸ் யுஎஸ்டி ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் அட்ஜெஸ் செய்யக்கூடிய அபெக்ஸ் மோனோஷாக்கும் வழங்கப்படுகின்றன.

தொழிற்நுட்ப வசதிகளாக, 5-இன்ச் டிஎஃப்டி டேஷ் டிஸ்பிளே, மோட்டார்சைக்கிள் டிராக்‌ஷன் கண்ட்ரோல், லாஞ்ச் கண்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ், ரைடு-பை-வயர் டெக்னாலஜி, குயிக்‌ஷிஃப்டர், சூப்பர்மோட்டோ ஏபிஎஸ், டைப்-சி சார்ஜிங் பாயிண்ட் உள்ளிட்டவற்றை பெறும் 390 ட்யூக் பைக்கில் மழை, டிராக் மற்றும் சாலை என 3 விதமான ரைடிங் மோட்கள் கொடுக்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கேடிஎம் நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் பைக்குகளுள் 390 ட்யூக் ஒன்றாகும். இத்தகைய பைக்கை அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டிய கட்டாயம் கேடிஎம் நிறுவனத்துக்கு உள்ளது. கார்னரிங் ஏபிஎஸ்-ஐ தவிர்த்து பைக்கில் பெரியதாக எந்த மாற்றமும் கொண்டுவரப்படாததால், பைக்கின் விலையில் பெரியதாக அதிகரிப்பை எதிர்பார்க்க முடியாது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 11, 2025, 19:44 [IST]
English summary
Ktm 390 duke launch soon in india new features engine all details here
மேலும்... #ktm #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X