ஜிஎஸ்டியை குறைச்சி, பைக்குகள் விலை குறைச்ச செய்தி மட்டும்தான் வெளியே வருது! அதிகமானது வெளியே வரல!

உலகின் முன்னணி பிரீமியம் ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிள் பிராண்டான கேடிஎம் (KTM), தனது 390சிசி ரக பைக்குகளின் எக்ஸ்-ஷோரூம் விலைகளில் (Ex-Showroom Prices) எவ்வித மாற்றமும் இல்லை என அறிவித்துள்ளது. 350சிசி-க்கு மேலான மோட்டார்சைக்கிள்களுக்கு ஜிஎஸ்டி (GST) 40% ஆக உயர்த்தப்பட்ட போதிலும், இந்த விலையேற்றத்தின் சுமையை தானே ஏற்றுக்கொள்வதாக கேடிஎம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம், பண்டிகைக் காலத்தையொட்டி, 390 டியூக் (390 Duke), 390 அட்வென்ச்சர் (390 Adventure) மற்றும் ஆர்சி 390 (RC390) போன்ற பைக்குகளை வாங்கும் ஆர்வலர்கள், கூடுதல் செலவின்றி கேடிஎம் நிறுவனத்தின் ரேசிங் அனுபவத்தைத் தொடர்ந்து பெற முடியும். இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தியாகும்.

ktm india absorbs gst impact

கேடிஎம் நிறுவனத்தின் 350சிசி-க்கு குறைவான பைக்குகளான 160 டியூக், 200 டியூக், 250 டியூக் போன்ற கேடிஎம் பைக்குகளுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதன் பலன்கள் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப் படுகிறது. இதுகுறித்த விரிவான பதிவை ஏற்கனவே நமது செய்தித் தளத்தில் வெளியிட்டு உள்ளோம்.

ஜிஎஸ்டி குறைப்பினால் கொண்டுவரப்பட்டுள்ள விலை குறைப்புகளினால் கேடிஎம் நிறுவனத்தின் உயர் ரக எஞ்சினீயரிங் (Engineering) பைக்குகள் இன்னும் குறைந்த விலையில் கிடைக்கும். மத்திய அரசின் ஜிஎஸ்டி குறைப்பானது 350சிசி-க்கு கீழ் என்ஜினை பெறும் பைக்குகளுக்கு மட்டுமே. இன்னும் சொல்லப்போனால், 350சிசி-க்கு மேல் ஆற்றல்மிக்க என்ஜினை கொண்ட பைக்குகளுக்கான ஜிஎஸ்டி 40% ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

ktm india absorbs gst impact

இதனால், அத்தகைய பைக்குகளின் விலைகள் உயரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கேடிஎம் நிறுவனம் எந்தவொரு விலை அதிகரிப்பும் இல்லாமல் அதே விலையில் அவை விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு குறித்து பஜாஜ் ஆட்டோவின் ரோபைகிங் (Probiking) வணிகப் பிரிவின் தலைவர் மணிக் நாங்கியா கூறுகையில், "கேடிஎம் எப்போதுமே கட்டுப்படியாகக்கூடிய, செயல்திறன் மிக்க மோட்டார்சைக்கிள்களை வழங்குவதில் உறுதியாக இருந்துள்ளது.

எங்களை நம்பி ஐந்து லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவர்கள் செயல்திறன் மிக்க மோட்டார்சைக்கிள் டிரைவிங் ஆர்வத்தைப் பரப்பும் எங்கள் உண்மையான தூதுவர்கள். 390சிசி-க்கு மேலான பைக்குகளின் எக்ஸ்-ஷோரூம் விலையை மாற்றாமல், 160 டியூக், 200 டியூக், 250 டியூக் போன்ற பைக்குகளுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட பலன்களை வழங்குவதன் மூலம், மோட்டார்சைக்கிள் மீதான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.

ktm india absorbs gst impact

இந்தியாவின் பிரீமியம் மோட்டார்சைக்கிள் சந்தையில் கேடிஎம் ஒரு வலுவான இடத்தைப் பிடித்துள்ளது. அதன் செயல்திறன் மிக்க பைக்குகள் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளன. 'ரேசிங்கிற்குத் தயார்' என்ற அடையாளத்துடன், கேடிஎம் அதன் பைக்குகளில் இணையற்ற எஞ்சினீயரிங் மற்றும் மதிப்பை வழங்கி வருகிறது. இது ஸ்போர்ட்ஸ் பைக் அனுபவத்தை விரும்புபவர்களுக்கு விருப்பமான தேர்வாக உள்ளது.

எங்களது வாடிக்கையாளர்கள் மீது நாங்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை இது வெளிப்படுத்துகிறது" என்றார். இந்தியாவில் தற்சமயம் கேடிஎம் 390சிசி பைக்குகளின் சென்னை ஆன்-ரோடு விலைகள் (On-road Prices) ரூ.3.63 லட்சத்தில் (390 அட்வென்ச்சர் எக்ஸ்) இருந்து ரூ.4.34 லட்சம் (390 அட்வென்ச்சர்) வரையில் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 390 டியூக், ஆர்சி மற்றும் அட்வென்ச்சர் பைக்குகளின் எக்ஸ்-ஷோரூம் (Ex-Showroom) விலைகளில் எந்த மாற்றமும் இல்லாததால், கேடிஎம் பைக்குகள் தொடர்ந்து பைக் ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக உள்ளன. இந்த நடவடிக்கை, தங்களது வாடிக்கையாளர்களுக்கு மதிப்பை வழங்குவதில் கேடிஎம் கொண்டுள்ள கவனத்தையும், அதன் சிறப்பான எஞ்சினீயரிங் பாரம்பரியத்தையும், 'ரேசிங்கிற்குத் தயார்' என்ற அதன் வாக்குறுதியையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, September 25, 2025, 13:18 [IST]
English summary
Ktm india absorbs gst impact on its 390cc bikes prices check all details here
மேலும்... #ktm #bike price hike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X