இந்த பைக்கை மட்டும் வாங்கிட்டீங்கனா ஏரியாவில் எல்லார் பார்வையும் உங்க மீதுதான்... விலையை மட்டும் பார்க்காதீங்க

கேடிஎம் (KTM), ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த உலகளவில் பிரபலமான பிரிமீயம் தரத்திலான ஸ்போர்ட்ஸ் பைக் உற்பத்தி நிறுவனம். இந்தியாவில் பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டுவரும் கேடிஎம் அதன் 3 புதிய அட்வென்ச்சர் பைக்குகள் (Adventure Bikes)-ஐ விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. 250 அட்வென்ச்சர், 390 அட்வென்ச்சர் மற்றும் 390 அட்வென்ச்சர் எக்ஸ் என்பன அந்த 3 பைக்குகள் ஆகும். அவற்றை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

250 அட்வென்ச்சர்: இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலை குறைவான கேடிஎம் அட்வென்ச்சர் பைக். வழக்கத்தை காட்டிலும் குறைவான எடையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக்கை கரடு முரடான பாதைகளிலும் கண்ட்ரோல் செய்வது எளியது என கேடிஎம் தெரிவித்துள்ளது. இதற்காக நீளமான டிராவலை கொண்ட சஸ்பென்ஷன் செட்-அப் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளது.

ktm launches new adventure bikes

புதிய 250 அட்வென்ச்சர் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.2,59,850 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆஃப்-ரோடு பயணங்களுக்காக 227மிமீ-இல் அதிக கிரவுண்ட் கிளியரென்ஸ் மற்றும் தரையில் இருந்து 825மிமீ உயரத்தில் இருக்கையை கொண்ட 250 அட்வென்ச்சர் பைக்கில் ரைடு-பை-வயர், ஆஃப்-ரோடு ஏபிஎஸ் மற்றும் குயிக்‌ஷிஃப்டர்+ உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

390 அட்வென்ச்சர்: அடிக்கடி ஆஃப்-ரோடு பயணங்களை மேற்கொள்பவராக இருந்தால், உங்களுக்கு இந்த புதிய 390 அட்வென்ச்சர் பைக் ஆனது ஏற்றதாக இருக்கும். இந்த பைக்கில் வழங்கப்படும் 21-இன்ச் முன் சக்கரத்திலும், 17-இன்ச் பின் சக்கரத்திலும் ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மேலும், இந்த பைக்கில் வழங்கப்பட்டிருப்பவை ஸ்போக் சக்கரங்கள் ஆகும்.

ktm launches new adventure bikes

முற்றிலும் புதிய சேசிஸில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக்கிலும் நீளமான டிராவல் உடன் முழுவதுமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன் செட்-அப் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்தியாவில் 390சிசி பைக்குகளிலேயே முதல்முறையாக க்ரூஸ் கண்ட்ரோல் வசதி இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. புதிய 390 அட்வென்ச்சர் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3,67,699 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

390 அட்வென்ச்சர் எக்ஸ்: கேடிஎம் நிறுவனத்தின் பவர்ஃபுல்லான 390சிசி அட்வென்ச்சர் பைக்கை குறைந்த விலையில் வாங்க நினைப்பவர்களுக்கு 390 அட்வென்ச்சர் எக்ஸ் ஆனது சிறந்த தேர்வாகும். ஏனெனில், இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.2,91,140 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த பைக்கையும் ஆஃப்-ரோடு பயணங்களுக்கு தாராளமாக கொண்டு செல்லலாம்.

ktm launches new adventure bikes

ஆனால், வழக்கமான பயன்பாட்டிற்கே இந்த பைக் பிரதானமாக பயன்படுத்த ஏற்றது. ஸ்போக் சக்கரங்களுக்கு பதிலாக கேஸ்ட் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. கிரவுண்ட் கிளியரென்ஸிலும், தரையில் இருந்து ரைடர் இருக்கையின் உயரத்திலும் 250 அட்வென்ச்சர் பைக்கை 390 அட்வென்ச்சர் எக்ஸ் பைக் ஒத்ததாக காணப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கடந்த சில வருடங்களாக அட்வென்ச்சர் ரக பைக்குகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கு கேடிஎம் நிறுவனமும் ஒரு காரணம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியாவில் அட்வென்ச்சர் பைக் பிரியர்களை தொடர்ந்து கவரும் முயற்சியாகவே இந்த புதிய அட்வென்ச்சர் பைக்குகளை கேடிஎம் இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 5, 2025, 22:30 [IST]
English summary
Ktm india launches new adventure bikes price features all details here
மேலும்... #ktm #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X