இந்த விலையில் கொடுத்தால் யாருக்கா இருந்தாலும் வாங்க தோணும்! கேடிஎம்-க்கு ரொம்ப தாராள மனசுங்க
கேடிஎம் (KTM), இந்தியா உள்பட உலகின் முன்னணி பிரீமியம் தரத்திலான மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனம். கடந்த ஆண்டில் 3வது ஜென்ரேஷன் கேடிஎம் 390 ட்யூக் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை அறிமுகத்தின் போது ரூ.3.13 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த பைக்கின் புதிய விலையை கேடிஎம் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, கேடிஎம் 390 ட்யூக் பைக்கை இனி எந்த விலையில் வாங்கலாம் என்பதை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த கேடிஎம் நிறுவனம் இந்தியாவில் பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருவது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயமே. இந்தியாவில் கேடிஎம் பிராண்டில் இருந்து வாடிக்கையாளர்களை கவர்ந்த பைக்குகளுள் ஒன்று, 390 ட்யூக் ஆகும். இதனாலேயே இந்த பைக்கை அவ்வப்போது கேடிஎம் நிறுவனம் அப்டேட் செய்துவிடுகிறது.

இந்த வகையில் கடந்த 2024ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட 3ஆம் தலைமுறை கேடிஎம் 390 ட்யூக் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.3.13 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பைக்கை இந்த விலையில் வாங்க வேண்டாம்; அறிமுக சலுகையாக ரூ.18,000 பணம் தள்ளுபடி வழங்கப்படும் என கேடிஎம் அறிவித்தது.
இதனால், புதிய 390 ட்யூக் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.95 லட்சமாக குறைந்தது. இவ்வாறு புதியதாக மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படும் வாகனங்களை மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்துவதற்காக ஆரம்பத்தில் விலை குறைக்கப்படுவது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால், இவ்வாறு குறைக்கப்படும் விலைகள் சில மாதங்களுக்கு பின் அதிகரிக்கப்பட்டுவிடும்.
ஆனால், புதிய கேடிஎம் 390 ட்யூக் பைக்கின் விலை அறிமுகத்தில் இருந்து சலுகை விலை உடன் தான் இப்போதுவரையிலும் உள்ளது. சலுகை விலையை கடந்த டிசம்பர் 31ஆம் தேதியோடு கேடிஎம் நிறுத்திக் கொள்ளும் என எதிர்பார்த்தோம். ஆனால், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. இதன் காரணமாக, கேடிஎம் 390 ட்யூக் பைக்கின் விலை ரூ.3.13 லட்சமா அல்லது ரூ.2.95 லட்சமா என்கிற குழப்பம் மக்களிடையே உள்ளது.
இந்த நிலையில், பைக்கின் விலை ரூ.3.13 லட்சத்தில் இருந்து ரூ.18 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ.2.95 லட்சமாக நிர்ணயிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது, பைக்கின் விலை இதுதான் என்பதை கேடிஎம் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த பைக்கில் 399சிசி எல்சி4சி என்ஜின் பொருத்தப்படுகிறது.
இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 46 பிஎஸ் மற்றும் 39 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த நேக்டு-ஸ்ட்ரீட்ஃபைட்டர் ரக பைக்கில் முக்கிய தொழிற்நுட்ப அம்சங்களாக சூப்பர்மோட்டோ ஏபிஎஸ் மற்றும் கார்னரிங் ஏபிஎஸ் உள்ளிட்டவையும், ஸ்ட்ரீட் & மழை என 2 ரைட் மோட்கள் உடன் டிராக்ஷன் கண்ட்ரோலும் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.3 லட்சத்திற்குள் கேடிஎம் 390 ட்யூக் பைக் என்பது கவர்ச்சிக்கரமான விஷயமாக உள்ளது. இந்த தொகுப்பில் நாங்கள் குறிப்பிட்டுள்ளவை பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆன்-ரோடு விலை இன்னும் சில பத்தாயிரங்கள் அதிகமாக வரும். எப்படியோ, இந்த பைக்கின் விலை தொடர்பாக நிலவி வந்த குழப்பத்தை கேடிஎம் சரி செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








