பெரிய சூட்கேஸையே உள்ள வைக்கலாம் போல! அதிக ஸ்டோரேஜ் வசதியுடன் விற்பனையாகும் இவி ஸ்கூட்டர்கள் இதான்!

இந்தியாவில் ஸ்கூட்டர் வாங்கும் பலர் அதன் பிராக்டிக்கல் அம்சங்களுக்காகவே அதிகம் அதை தேர்வு செய்கிறார்கள். அதிகமான பொருட்களை பாதுகாப்பாக கொண்டு செல்ல முடியும் என்பதே ஸ்கூட்டர்களின் முக்கியமான அம்சமாக இருக்கிறது.இந்நிலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மக்கள் மத்தியில் சமீப காலமாக பிரபலமாகி வரும் நிலையில் அதிக ஸ்டேரேஜ் வசதி கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பட்டியலை இங்கே காணலாம்.

ஓலா எஸ்1 - ஜென் 3- 34 லிட்டர்

ஓலா நிறுவனம் தனது ஜென்2 அப்டேட்டிலேயே எஸ்1 ரக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் உள்ள ஸ்டோரேஜ் வசதியை 34 லிட்டராக அதிகரித்து விட்டது. இதையே தனது ஜென்3 மாடலிலும் பின்பற்றுகிறது. ஆனால் ஜென் 1மாடலில் இது 36 லிட்டராக இருந்தது. அடுத்த அப்டேட்டில் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ola s1 pro
ஓலா நிறுவனம் எஸ்1 ஸ்கூட்டர்கள் பல்வேறு விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. இந்த ஸ்கூட்டர்கள் ரூ66,999 முதல் ரூ1.48 லட்சம் வரையிலான விலையில் விற்பனையாகி வரகிறுது. ஒவ்வொரு ஸ்கூட்டரம் ஒவ்வொர விதமான வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களை அதிகம் கவரை இதை உருவாக்கியுள்ளது.

ஏத்தர் ரிஸ்டா - 34 லிட்டர்

ஏத்தர் நிறுவனத்தின் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓலா ஜென் 2 போல அதே கொள்ளளவு கொண்டதாக இருக்கிறது. ஆனால் ஓலா ஸ்கூட்டரில் ஒரு முழு ஃபேஸ் ஹெல்மெட்டை வைத்து ஸ்கூட்டர் சீட்டை மூட முடியாது. ஆனால் ஏத்தர் ரிஸ்டாவின் ஸ்டோரேஜ் வசதி அதிக ஆழம் கொண்டதாக இருக்கும். அதனால் அதில் பெரிய ஹெல்மெட்டை வைத்து கூட லாக் செய்ய முடியும்.

ather rizta

ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொருத்தவரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 159 கி.மீ வரை ரேஞ்ச் தரும் என தெரவிக்கப்பட்டுள்ளது இந்த ஸ்கூட்டரின் பேட்டரிக்கு 8 ஆண்டுகள் வரை வாரண்டி கிடைக்கும். இந்த ஸ்கூட்டர் ரூ99,999 முதல் ரூ1,14,500 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

பஜாஜ் சேத்தக் -35 லிட்டர்

பஜாஜ் நிறுவனம் சமீபத்தில் தான் சேத்தக் 3001 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்கூட்டர் இதற்கு முன்பு அந்நிறுவனம் விற்பனை செய்த 2903 என்ற வேரியன்டிற்கு பதிலாக வந்துள்ளது. இந்த ஸ்கூட்டரில் 35 லிட்டர் ஸ்டோரேஜ் வசதி இருக்கிறது. தற்போது சேத்தக் சிரீஸில் 3001,3501,3502, மற்றும் 3503 ஆகிய வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது.

bajaj chetak

இந்த ஸ்கூட்டர் மார்கெட்டில் ரூ1.09 லட்சம் முதல் ரூ1.44 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த ஸ்கூட்டர் பல்வேறு விதமான வேரியன்ட்களில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டரின் விற்பனையும் சிறப்பாக இருக்கிறது. ஓலாவிற்கு போட்டியாக இந்த ஸ்கூட்டரின் விற்பனை இருக்கிறது.

கைனெடிக் டிஎக்ஸ் - 37 லிட்டர்

கைனெடிக் வாட்ஸ் அண்ட் வேல்ட்ஸ் நிறுவனம் சார்பில் கைனெடிக் டிஎக்ஸ் என்ற பழைய பெட்ரோல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெயரில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்கூட்டரில் 37 லிட்டர் ஸ்டோரேஜ் வசதி இருக்கிறது.

இந்த ஸ்கூட்டரில் சீட்டிற்கு அடியில் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட், சிறுசிறு பெருட்களை வைக்கும் கம்பார்ட்மென்ட் என பல வசதிகள் உள்ளன. இந்த ஸ்கூட்டர் டிஎக்ஸ் மற்றும் டிஎக்ஸ் + ஆகிய வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. இந்த ஸ்கூட்டர் தற்போது தான் அறிமுகமாகியுள்ளது. சாலைக்கு வர சிறிது காலம் எடுக்கும்.

river indie

ரிவர் இண்டி - 43 லிட்டர்

இருப்பதிலேயே அதிகமாக ரிவர் இண்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் தான் 43 லிட்டர் ஸ்டோரேஜ் வசதி இருக்கிறது. பெங்களூருவை மையமாக கொண்டு இந்த ஸ்கூட்டர் இயங்கி வருகிறது. இந்த ஸ்கூட்டரில் தான் முதன் முறையாக டாப் பாக்ஸ் ஸ்டேரேஜ் வசதி இருக்கிறது. இது ஸ்டோரேஜ் கொள்ளளவை அதிகரிக்க உதவுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டூவீலரில் அதிக ஸ்டோரேஜ் மிக அவசிய தேவையாக இருக்கிறது. இந்நிலையில் இ்நத ஸ்கூட்டர்கள் அதிக ஸ்டோரேஜ் வசதியை வழங்குவதால் மக்களுக்கு இந்த ஸ்கூட்டர்கள் மீது அதிக விருப்பம் ஏற்படுகிறது. இதனால் இதன் விற்பனையும் அதிகமாகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 29, 2025, 10:55 [IST]
English summary
Largest boot ev scooters top 5 storage capacity picks
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X