ரீ-சேல் மதிப்பு அதிகமா கிடைக்கும் என்றாலே பாதி கவலை இல்லை!! 10 வருடங்களுக்கு பைக்கை அடித்து துவைக்கலாம்!

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்தின் புனே தொழிற்சாலையில் தான் கேடிஎம் (KTM) மற்றும் டிரையம்ப் (Triumph) பைக்குகள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். புனேவில் சாகான் என்கிற பகுதியில் பஜாஜ் ஆட்டோவிற்கு சொந்தமான பிரம்மாண்டமான தொழிற்சாலை உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் கேடிஎம் மற்றும் டிரையம்ப் பைக்குகள் தான் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன. அதேநேரம், சில பைக்குகளை நேரடியாக ஆஸ்திரியா நாட்டில் உற்பத்தி செய்து, அங்கிருந்து கொண்டுவந்து இந்தியாவில் விற்பனை செய்கின்றனர்.

இவ்வாறு இந்தியாவில் விற்கப்படும் கேடிஎம் மற்றும் டிரையம்ப் பைக்குகளுள் சப்-500சிசி பைக்குகளும் உள்ளன. அதாவது, 500சிசி என்ஜினை காட்டிலும் சற்று சிறியதான 400சிசி என்ஜின் உடன் இந்த நிறுவனங்களில் இருந்து கேடிஎம் 390 ட்யூக் (Duke) மற்றும் மூன்று டிரையம்ப் 400சிசி பைக்குகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன.

longer warranty scheme for bikes

டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் அந்த மூன்று 400சிசி பைக்குகளாவன, ஸ்பீடு 400 (Speed 400), ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் (Scrambler 400X) மற்றும் ஸ்பீடு டி4 (Speed T4) ஆகும். இந்த மூன்று டிரையம்ப் பைக்குகளும் ஒரே மாதிரியான பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டவைகளாக உள்ளன.

கேடிஎம் 390 ட்யூக் பைக் மற்றும் இந்த 400சிசி டிரையம்ப் பைக்குகளுக்கு முன்னதாக 2 வருடங்களுக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டு வந்தது. 2 வருடங்களை காட்டிலும் அதிக காலத்திற்கு வாரண்டியை எதிர்பார்ப்பவர்கள் கூடுதல் தொகையை செலுத்தி மேலும் 3 வருடங்களுக்கு உத்தரவாதத்தை நீட்டித்து, மொத்தமாக 5 வருடங்களான உத்தரவாதத்தை பெறக்கூடிய சூழல் இருந்தது.

longer warranty scheme for bikes

இது தற்போது அதிரடியாக 10 வருடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமான திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த கூடுதல் உத்தரவாத திட்டம் ஆனது ஜூன் 30ஆம் தேதி வரையில் மட்டுமே அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தை பெற, நீங்கள் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும் என அவசியமில்லை.

வழக்கமான, உத்தரவாத நீட்டிப்பு கட்டணத்தை செலுத்தி இதனை பெறலாம். ஏற்கனவே கேடிஎம் 390 ட்யூக் அல்லது மேற்கூறப்பட்ட டிரையம்ப் 400சிசி பைக்குகளை வாங்கி 5 வருட உத்தரவாத காலத்தை அனுபவித்து வருகிறீர்கள் என்றாலும், அதனை 10 வருட உத்தரவாதமாக மாற்றிக் கொள்ள முடியும் என கேடிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும்.

longer warranty scheme for bikes

இந்த பைக்குகளில் கேடிஎம் 390 ட்யூக் ஆனது இந்திய மார்க்கெட்டில் பிரபலமானதாக உள்ளது. விற்பனையில் இந்த கேடிஎம் பைக்கிற்கு போட்டியாக உள்ள ஏப்ரிலியா டூனோ 457 (Aprilia Tuono 457) பைக்கிற்கு 4 வருடங்களுக்கான உத்தரவாதம் மட்டுமே வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, விலையிலும் கேடிஎம் 390 ட்யூக் ஆனது விலை குறைவானதாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு மார்க்கெட்டில் போட்டியாக உள்ள மற்ற பைக்குகளை காட்டிலும் ஸ்பெஷலானதாக இந்த கேடிஎம் மற்றும் டிரையம்ப் பைக்குகள் தெரிவதற்கு புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள 10-வருட உத்தரவாத கால நீட்டிப்பு உதவியாக இருக்கும். மேலும், ஏற்கனவே வாங்கப்பட்ட இந்த கேடிஎம் & டிரையம்ப் பைக்குகளுக்கும் 10 வருட உத்தரவாதத்தை கஸ்டமர்கள் பெற முடியும் என்பதால், பைக்கை செகண்ட்-ஹேண்டில் விற்கும்போது பைக்கிற்கு நல்ல மதிப்பு கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, June 6, 2025, 12:54 [IST]
English summary
Longer warranty scheme for ktm 390 duke and triumph 400cc bikes
மேலும்... #ktm #triumph motorcycles #warranty #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X