வெறும் 39 ஆயிரம் தான் விலை! இந்த வண்டிகளை ஓட்ட லைசென்ஸ் கூட வேணாம்!

இந்தியாவில் மோட்டார் வாகன சட்டம் 1988 ம் ஆண்டு அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின் தற்போதைய நடைமுறைப்படி குறைந்த வேகத்தில் இயங்கும் வாகனங்களுக்கு பதிவு மற்றும் அதை ஓட்ட ஓட்டுநர் உரிமம் தேவையில்லை. இந்த வாகனங்களுக்கு இந்தியாவில் அதிக அளவில் டிமாண்ட் இருக்கிறது. இந்த வாகனங்கள் குறித்த விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.

இந்தாண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் செக்மெண்ட் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. ஓலா எலெக்ட்ரிக் அதிக அளவிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகிறது. இது போக பஜாஜ் சேத்தக் இவி, டிவிஎஸ் ஐக்யூக், ஏத்தர் எனர்ஜி உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க குறைந்த விலை வாகனங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது.

Low Speed Electric Scooters

ஓலா கிக்: ஓலா நிறுவனத்தின் கிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ39,999 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறுகிய தூரம் பயணிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ரிமூவபிள் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது முறை சார்ஜ் செய்தால் 112 கி.மீ தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டது.

லோகியா ஓமா ஸ்டார்: லோகியா நிறுவனத்தின் ஓமா ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ41,444 என்ற விலையில் விற்பனையாகி வருகுிறது. இதில் பிஎல்டிசி ஹப் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜில் 70 கி.மீ இயங்கும். முழுமையாக சார்ஜ் ஏற 4.5 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை இதற்கு எடுத்துக்கொள்ளும்.

Low Speed Electric Scooters

கோமகி எக்ஸ்ஜிடி கேஎம்: கோமகி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ42,500 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த ஸ்கூட்டர் அதிகபட்சம் 60 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இது சிங்கிள் சார்ஜில் 130-150 கி.மீ ரேஞ்சை வழங்கும் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டரை ஒமு முறை சார்ஜ் செய்தால் 4-5 மணி நேரம் வரை எடுத்துக்கொள்ளும்.

ஆம்பியர் ரியோ எலைட்: ஆம்பியர் நிறுவனத்தின் ரியோ எலைட் ஸ்கூட்டர் ரூ42,999 என்ற விலையி்ல விற்பனையாகி வருகிறது. இந்த ஸ்கூட்டர் 25 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜில் 55-60கி.மீ பயணிக்கும் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டர் மொத்தமே 70 கிலோ எடை கொண்டது தான்.

Low Speed Electric Scooters

ஓலா எஸ் 1 இசட்: ஓலா நிறுவனம் தனது எஸ் 1 இசட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ59,999 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த ஸ்கூட்டரில் 1.5 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக்கப் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் 75 கி.மீ ரேஞ்சை வழங்கும் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக 0-40கி.மீ வேகத்தை வெறும் 4.8 நொடியில் பிக்கப் செய்துவிடும் திறன் கொண்டது.

ஓகினவா ஆர்30: ஓகினவா நிறுவனம் தனது ஆர் 30 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெறும் 61,998 என்ற விலையில் விற்பனை செய்து வரகுிறது இந்த ஸ்கூட்டர் 25 கி.மீ வேகத்தில் பயணிக்கம் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜில் 60 கி.மீ பயணிக்கும் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டர் மொத்தமே 150 கிலோ எடை கொண்டது. இதில் பல்வேறு அம்சங்கள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குறைந்த வேகத்தில் இயங்கும் எ எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பதிவெண் தேவையில்லை. இதனால் இந்த வாகனங்களில் பயணிக்கும் போது ஹெல்மெட் போட தேவையில்லை. இவ்வளவு ஏன் இதை ஓட்ட லைசென்ஸ் கூட தேவையில்லை. இந்த வாகனங்கள் தற்போது கிராமப்புற பகுதிகளில் பிரபலமாகி வருகிறது.பலர் இந்த வாகனத்தை வாங்கி வருகின்றனர். விரைவில் இந்த செக்மெண்டில் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, May 31, 2025, 22:54 [IST]
English summary
Low speed electric scooters in india no rc dl required
மேலும்... #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X