ஒரு கி.மீ பயணிக்க வெறும் 25 பைசா தான் செலவாகும்! மேட்டர் ஏரா கியர் எலெக்ட்ரிக் பைக் விலை இவ்வளவு தானா?
மேட்டர் நிறுவனம் இந்தியாவில் தனது கியர் வைத்த முதல் எலெக்ட்ரிக் பைக்காக ஏரா என்ற பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ1.93 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ள இந்த பைக் ஒரு முறை சார்ஜ் போட்டால் 173 கி.மீ வரை பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக குறைவான செலவில் இந்த பைக்கில் பயணிக்க முடியும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மேட்டர் நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் பைக்ககளை தயாரிக்கும் முக்கிய நிறுவனமாக இருக்கிறது.இந்நிறுவனம் தனது முதல் கியர் எலெக்ட்ரிக் பைக்கை தயாரித்துள்ளது. இந்தியாவில் எலெக்ட்ரிக் பைக் என்றால் கியர் இல்லாத சிவிடி கியர்பாக்ஸ்களுடனான பைக்தான் விற்பனையாகி வந்த நிலையில் மேட்டர் ஏரா பைக் 4 ஸ்பீடு மேனுவல் கியர் ஆப்ஷன் கொண்ட பைக்காக விற்பனைக்காக அறிமுகமாகியுள்ளது.

மேட்டர் ஏரா பைக் இந்தியாவில் ரூ1.93 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இந்திய மார்கெட்டில் அறிமுகமாகியுள்ளது. இந்த பைக் தற்போது டில்லியில் மட்டுமே கிடைக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. படிப்படியாக நாட்டின் மற்ற பகுதிகளிலும் இந்த பைக்கின் விற்பனை விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏரா பைக்கில் ஹைப்பர் ஸ்விஃப்ட் 4 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இது மேனுவல் கண்ட்ரோல், எலெக்ட்ரிக் ஃபெர்பார்மென்ஸ், கனெக்ட்டெட் சிஸ்டம் ஆகியவற்றை இணைத்து உரவாக்கிய புதிய தொழிற்நுட்பமாக வாகனத்தில் புகுத்தப்பட்டு எலெக்ட்ரிக் வாகன உலகில் புதிய செக்மெண்டையே உருவாக்கியுள்ளது. இந்த வாகனம் மேட்டர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் புக்கிங்கிற்கு கிடைக்கிறது.

இந்த பைக்கில் 5kWh அதிக பவர் கொண்ட பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது ஐபி 67 ரேட்டிங் சான்று பெற்றுள்ளது. இந்த பைக்கை ஒரு முறை சார்ஜ் செய்தால் 173 கி.மீ ஓடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பைக் 0-40 கி.மீ வேகத்தை வெறும் 2.8 நொடியில் பிக்கப் செய்து விடும் வகையில் உருவாக்கப்ப்டடுள்ளது. இந்த பைக்கில் லிக்யூட் கூல்டு சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய சாலைகள் மற்றும் கிளைமேட் கண்டிஷனிற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இதில் 7 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் டேஷ்போர்டு வழங்கப்பட்டுளு்ளது. இதில் நேவிகேஷன், ரைடு டேட்டா, மியூசிக் கண்ட்ரோல், ஓடிஏ அப்டேட் உள்ளிட்ட பல அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இ்நத பைக்கில் 2 வீல்களிலும் ஏபிஎஸ் உடன் பொருத்தப்பட்ட டிஸ்க் பிரேக் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதில் டுயல் சஸ்பென்சன் சிஸ்டத்துடன் பார்க் அசிஸ்ட் அம்சமும் உள்ளது.

இந்த பைக்கை டேட்டர்வெர்ஸ் ஆப் மூலம் இணைத்துக்கொள்ள முடியும். இதில் ரைடு குறித்த தகவல்கள், ரிமோட் லாக் மற்றும் அன்லாக், லைவ் லோகேஷன் டிராக்கிங், ஜியோ ஃபென்சிங், ஸ்மார்ட் கீ லெஸ் ரைடிங் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இந்த பைக்கில் ஒரு கி.மீ பயணிக்க வெறும் ரூ25 பைசா தான் செலவாகும். இந்த பைக்கை 3 ஆண்டுகள் தொடர்ந்து இயக்கினால் ரூ1 லட்சம் மிச்சமாகும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் உருவாக்கப்பட்டு முழுமையாக இந்தியாவிலேயே இந்த பைக் தயாரிக்கப்படுகிறது. இதனால் இந்த பைக் குறைவான விலையில் அதிக அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக் டூவீலர் செக்மெண்டில் மிப்பெரியபுரட்சியை செய்யும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









