4 கிமீ-க்கு 1 ரூபா மட்டுமே செலவுனு சொன்னா யார்தான் வாங்காம இருப்பா? பெட்ரோல் பைக்குகளை ஓரங்கட்ட வேண்டியதுதான்!
மேட்டர் இவி (Matter EV), இந்தியாவில் செயல்படும் எலக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுள் ஒன்று. குறிப்பாக, எலக்ட்ரிக் பைக்குகளை (Electric Bikes) விற்பனை செய்யும் மிகவும் சில நிறுவனங்களுள் ஒன்றான மேட்டர் இவி, அமெரிக்காவை சேர்ந்த ஹெலேனா நிறுவனத்தின் உதவியுடன் செயல்படுகிறது. கேபிடல் 2பி (Capital 2B), ஜப்பான் ஏர்லைன்ஸ் (Japan Airlines), கனடாவை சேர்ந்த டிரான்ஸ்லிங்க் இன்னோவேஷன் ஃபண்ட், எஸ்பி இன்வெஸ்ட் போன்ற சர்வதேச நிறுவனங்கள் மேட்டர் இவி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன.
இதன் மூலமாக, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், கேரளா உள்பட 6 மாநிலங்களில் டீலர்ஷிப் நெட்வொர்க்கை விரிவுப்படுத்தி உள்ள மேட்டர் இவி, ஓர் குஜராத்தி ஆட்டோமொபைல் நிறுவனம் ஆகும். இத்தகைய மேட்டர் இவி நிறுவனத்தில் இருந்து தான் தற்போது புதியதாக 'ஏரா 5000+' (Aera 5000+) என்கிற பெயரில் புதிய எலக்ட்ரிக் பைக் (Electric Bike) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் எலக்ட்ரிக் பைக்குகளுக்கு மெல்ல மெல்ல மார்க்கெட் விரிவடைந்துக் கொண்டே வருகிறது. இதனை பயன்படுத்தி கொள்ளும் முயற்சியாக பல இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் எலக்ட்ரிக் பைக்குகள் விற்பனையில் இறங்கியுள்ள நிலையில், அந்த வரிசையில் மேட்டர் இவி நிறுவனமும் எலக்ட்ரிக் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில்தான், தனது மார்க்கெட்டை விரிவுப்படுத்தும் முயற்சியாக புதியதாக ஏரா 5000+ எலக்ட்ரிக் பைக்கை மேட்டர் இவி நிறுவனம் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஏரா 5000+ எலக்ட்ரிக் பைக்கின் மும்பை எக்ஸ்-ஷோரூம் விலையை (Ex-showroom Price) ரூ.1.93 லட்சமாக மேட்டர் இவி நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

இந்த புதிய எலக்ட்ரிக் பைக்கில் 5kWh திறன் கொண்ட பேட்டரி (Battery) பொருத்தப்பட்டுள்ளது. ஐபி67 சான்றளிக்கப்பட்ட இந்த பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலம் அதிகப்பட்சமாக 172கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். எலக்ட்ரிக் பைக்காக இருப்பினும், இதில் மோட்டாரின் வெப்பத்தை குளிர்விப்பதற்காக லிக்யுடு-கூல்டு சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், இந்த பைக்கில் 4-ஸ்பீடு ஹைப்பர் ஷிஃப்ட் மேனுவல் கியர்பாக்ஸ் (Hypershift Manual Gearbox) இணைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய 4-ஸ்பீடு ஹைப்பர் ஷிஃப்ட் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள முதல் எலக்ட்ரிக் பைக், ஏரோ 5000+ ஆகும். இந்த பைக்கில் ஹேண்டில்பாருக்கு மத்தியில் வழங்கப்பட்டுள்ள 7-இன்ச் டச் ஸ்க்ரீன் மூலம் பயணத்திற்கான நேவிகேஷன், இசை மற்றும் பயணம் குறித்த விபரங்களையும் வயர் இணைப்பு இல்லாமல் பெறலாம்.

0-இல் இருந்து 40kmph வேகத்தை வெறும் 2.8 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த எலக்ட்ரிக் பைக்கில் ஏபிஎஸ் உடன் ட்யூயல் டிஸ்க் பிரேக்குகள், டபுள் சஸ்பென்ஷன் மற்றும் பார்க் செய்வதற்கான உதவிகளையும் (Features) பெறலாம். சாவியில்லாமல் ஸ்டார்ட் செய்வதற்கு உதவியாக ஸ்மார்ட் சாவியை கொண்டுள்ள இந்த எலக்ட்ரிக் பைக்கில் ஒரு கிமீ பயணத்திற்கு வெறும் 25 பைசா மட்டுமே எரிபொருள் செலவாக செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலக்ட்ரிக் பைக்கில் மேனுவல் கியர்பாக்ஸ் என்பதே ஆச்சிரியமான விஷயம் எனும்போது, பிரத்யேகமான ஹைப்பர் ஷிஃப்ட் கியர்பாக்ஸ் ஆனது பெட்ரோல் என்ஜின் பைக்குகளை போல புதிய ஏரோ 5000+ எலக்ட்ரிக் பைக்கில் கியர்களை மாற்றுவதற்கு இலகுவானதாக இருக்கும். முதற்கட்டமாக மும்பையில் விற்பனைக்கு வந்துள்ள இந்த எலக்ட்ரிக் பைக் விரைவாகவே படிப்படியாக மற்ற நகரங்களுக்கும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.
Source: Times Drive (https://www.timesnownews.com/auto)


Click it and Unblock the Notifications









