இன்னும் 45 நாள்ல இந்த இ-பைக் சென்னைல விற்பனைக்கு வர போகுதா! அதிக மைலேஜ் தரும் டூ-வீலர் விற்பனை படுத்துக்கபோது!
இந்தியாவைச் சேர்ந்த முன்னணி மின்சார வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று தன்னுடைய இ-பைக்கை மேலும் 8 புதிய நகரங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்திலேயே இந்த நிறுவனம் அதன் இ-பைக்கை பெங்களூருவில் வெற்றிகரமாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. மேட்டர் ஏரா இ-பைக் (Matter Aera Electric Bike)கையே அது விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இப்போது இந்த மின்சார பைக்கிற்கான புக்கிங் பணிகளே பெங்களூருவில் தொடங்கி இருக்கின்றது.
ஃபிளிப்கார்ட் (Flipkart) ஆன்லைன் ஷாப்பிங் வாயிலாகவே புக்கிங்குகள் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே மேட்டர் ஏரா இ-பைக்கை மேலும் 8 புதிய நகரங்களில் விற்பனைக்கு அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் சென்னையும் அடங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இங்கு மட்டுமல்ல கோவை, புனே, டெல்லி, மும்பை, ஜெய்பூர், சூரத் மற்றும் ராஜ்புத் ஆகிய நகரங்களிலேயே அடுத்தக்கட்டமாக மேட்டர் ஏரா மின்சார பைக் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. பல்வேறு சிறப்பம்சங்களைத் தாங்கிய மேட்டார் ஏரா பைக்கிற்கு இந்தியாவில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிக் கொண்டிருக்கின்றது.
ஆனால், குறைவான நகரங்களில் அது மட்டுமே விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. இந்த குறையை போக்கும் பணியிலேயே மேட்டர் நிறுவனம் தற்போது களமிறங்கி இருக்கின்றது. மேட்டர் ஏரா ஓர் உலகின் முதல் ஹைப்பர் ஷிஃப்ட் கியர்பாக்ஸ் (HyperShift Geared Technology) வசதிக் கொண்ட மின்சார பைக்காகும்.

அதாவது, ஐசிஇ எஞ்சின் கொண்ட வாகனங்களில் காணப்படுவதைப் போலவே இதிலும் கியர்பாக்ஸ் இடம் பெற்றிருக்கும். 4 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனையே இதில் மேட்டர் வழங்கி இருக்கின்றது. இந்த கியர்பாக்ஸ் மூன்று விதமான ரைடிங் மோட் வசதியுடன் இணைக்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
இந்த அம்சத்தை வேறு எந்த இ-பைக்கிலும் பார்க்க முடியாது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த அம்சம் மட்டுமல்ல இன்னும் ஏராளமான வசதிகளை இது தன்னுள் தாங்கி இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. அந்தவகையில், 7 அங்குல ஸ்மார்ட் டச்ஸ்கிரீன் டேஷ்போர்டு, நேவிகேஷன், மியூசிக், ரைடு டேடா மற்றும் ஓடிஏ அப்டேட் உள்ளிட்ட வசதிகளுடன் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இதுமட்டுமல்ல மிக பெரிய பேட்டரி பேக்கையும் இது கொண்டிருக்கின்றது. 5kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் முழு சார்ஜில் 172 கிமீ வரையில் ரேஞ்ச் தரும். இதேபோல், இதில் அதிக ஆற்றலை உருவாக்கும் திறன் எலெக்ட்ரிக் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
2.8 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்ட இ-மோட்டாரே மேட்டர் ஏராவில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 105 கிமீ ஆகும். சென்னையில் இது இன்னும் விற்பனைக்கு வராத காரணத்தினால் இதன் உள்ளூர் விலை விபரம் பற்றிய துல்லியமாக கூற முடியவில்லை.
இருப்பினும், ஃபிளிப்கார்ட் தளத்தில் ஆராய்ந்து பார்த்ததில் இந்த பைக் ரூ. 1.83 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தே மற்ற மாநிலங்களில் விற்பனைக்குக் கிடைப்பது தெரிய வந்திருக்கின்றது. இதே விலையிலேயே சென்னை மற்றும் கோவையிலும் இந்த மின்சார பைக் விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னையில் இந்த இ-பைக் விற்பனைக்கு வரும்பட்சத்தில் நல்ல வரவேற்பு அதற்கு இங்கேக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இது விற்பனைக்கு வரும்பட்சத்திலேயே நிஜமாக என்ன மாதிரியான டிமாண்டைப் பெறும் என்பது தெரிய வரும். இதற்கு இன்னும் சில நாட்கள் நாம் காத்திருக்க வேண்டும். அதேவேளையில், 45 நாட்களுக்கும் உள்ளாக இது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









