தமிழர்களே பெங்களூருல யாராச்சும் வசிக்கிறீங்களா!.. சூப்பரான பைக் அங்கே விற்பனைக்கு அறிமுகமாகியிருக்கு..
பிரபல இரண்டு சக்கர உற்பத்தி நிறுவனம் ஒன்று பெங்களூருவில் தன்னுடைய புதுமுக பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேட்டர் (Matter), இதுவே அந்த நிறுவனம். மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தியை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கி வரும் ஓர் பிராண்டே இது ஆகும். இந்த நிறுவனம் தன்னுடைய ஏரா (Aera) எனும் இ-பைக் (Electric Bike) மாடலையே பெங்களூருவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கின்றது.
அறிமுக சிறப்பு சலுகையாக ரூ. 1.79 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். அதேவேளையில், இந்த விலையில் முதல் 500 பேரால் மட்டுமே மேட்டர் ஏரா இ-பைக்கை வாங்கிக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.

501 ஆவது நபரில் இருந்து இந்த பைக் ரூ. 1.88 லட்சம் என்கிற விலையிலேயே மேட்டர் விற்க இருக்கின்றது என்பதும் இங்கே கவனிக்கத்தகுந்தது. சலுகை விலை மட்டுமல்ல பேட்டரிக்கான லைஃப்டைம் வாரண்டி திட்டத்தையும் இலவசமாக வழங்க இருப்பதாக நிறுவனம் அறிவித்திருக்கின்றது. இதன் மதிப்பு மட்டுமே ரூ. 15 ஆயிரம் ஆகும்.
எனவே 24 ஆயிரம் ரூபாய் வரையிலான சிறப்பு சலுகையை மேட்டர் ஏராவை வாங்கும் வாடிக்கையாளர்களால் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், 500 பேருக்கு மட்டுமே இது பொருந்தும் என்பது கவனிக்கத்தகுந்தது. மேட்டர் நிறுவனம் தன்னுடைய அனுபவ மையம் (Experience Hub)ஐ விரைவில் பிடிஎம் லே-அவுட் பகுதியில் திறக்க இருக்கின்றது.

இது அதன் முதல் அனுபவ மையம் ஆகும். மேட்டர் ஏரா, இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக பிரீமியம் அம்சங்கள் நிறைந்த இ-பைக்குகளில் ஒன்றாகும். ஹைப்பர்ஷிஃப்ட் கியர்பாக்ஸ், 4 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதியுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், இந்த பைக்கை பயன்படுத்தும்போது பெட்ரோல் டூ-வீலரை ஓட்டும் ஃபீலே கட்டாயம் கிடைக்கும்.
இதுமட்டுமல்ல 3 விதமான ரைடிங் மோட்களையும் இந்த பைக்கில் வழங்கி இருக்கின்றனர். ஈகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் ஆகியவையே அவை ஆகும். இதுமட்டுமல்ல இதில் லிக்யூடு கூல்டு வகை மோட்டாரே வழங்கப்பட்டு இருக்கின்றது. இதற்கு பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்ட வெறும் 2.8 செகண்டுகளே போதுமானது ஆகும்.

இதைத்தொடர்ந்து, 172 கிமீ ரேஞ்சை வழங்கக் கூடிய 5 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கும் இந்த பைக்கில் வழங்கி இருக்கின்றனர். இத்துடன், டூயல் டிஸ்க் பிரேக், ஏபிஎஸ் போன்ற அம்சங்களையும் இந்த இ-பைக்கில் வழங்கி இருக்கின்றனர் என்பது கவனிக்கத்தகுந்தது. இதைத்தொடர்ந்து, சிறந்த ரைடிங் அனுபவத்திற்காக முன் பக்க வீலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பக்க வீலில் டூயல் ஷாக் சஸ்பென்ஷனையும் வழங்கி இருக்கின்றனர் என்பது கவனிக்கத்தகுந்தது.
கூடுதல் பிரீமியம் அம்சங்களாக ரிமோட் லாக், ஜியோ ஃபென்சிங், சர்வீஸ் அலர்ட் உள்ளிட்ட வசதிகளையும் இந்த பைக்கில் பெற்றுக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதுமட்டுமல்ல இந்த பைக்கை பயன்படுத்துவதனால் மிகப் பெரிய சிக்கனத்தைச் செய்துக் கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இதில் ஒரு கிமீ பயணிக்க வெறும் 25 பைசா மட்டுமே செலவாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிகம் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த இ-பைக்குகளில் ஒன்றாக மேட்டர் ஏரா உள்ளது. இதில் வழங்கப்பட்டு இருக்கும் அம்சங்கள் மட்டுமல்ல, அதன் லுக்கும் முற்றிலும் தனித்துவமானதாக இருக்கின்றது. இதையே பெங்களூருவில் விற்பனைக்கு வழங்கி இருக்கின்றனர். நம்ம ஆட்கள் யாராச்சும் பெங்களூருவில் டூ-வீலரை வாங்கும் பிளானில் இருந்தால் இதை உங்களுடைய லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications









