எப்ப பேட்டரி பிரச்சனை பண்ணாலும் ஃப்ரீயா மாத்திடலாம்! இனி இந்த வண்டிய தான் எல்லாரும் வாங்க போறாங்க!

இந்தியா முழுவதும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. குறிப்பாக டூவீலர்களில் அிக மாக விற்பனை நடந்து வருகிறது. ஸ்கூட்டர் செக்மெண்டில் சிறப்பாக வாகனங்கள் விற்பனையாகி வரும் நிலையில் தற்போது எலெக்ட்ரிக் பைக்குகளின் விற்பனையும் அதிகரித்து வருகிறது. இருந்தாலும் மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவதில் இருக்கும் பெரிய தயக்கம் அதன் பேட்டரி ஆயுள் தான். பேட்டரி விரைவாக பாதிப்படைந்துவிட்டால் அதிகம் செலவாகும் என்ற பேச்சு மக்கள் மத்தியில் இருக்கிறது.

இந்த பிரச்சனைக்கு தீர்வு சொல்லும் வகையில் தற்போது மேட்டர் நிறுவனம் தங்கள் வாகனங்களுக்கு புதிய விஷயம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. மேட்டர் நிறுவனம் தனது ஏரா பைக்கிற்கான பேட்டரிக்கு தற்போது வாழ்நாள் வாரண்டியை வழங்குகிறது. இதனால் மக்கள் கவலையின்றி பேட்டரி பைக்குகளை வாங்கலாம் என தெரிவித்துள்ளது.

Matter Aera Battery Warranty

மேட்டர் நிறுவனம் சமீபத்தில் தான் தனது ஏரா பைக்கை அறிமுகப்படுத்தியது. இந்த பைக்கை தான் அந்நிறுவனம் வாழ் நாள் பேட்டரி வாரண்டிடன் விற்பனை செய்கிறது. தற்போது பெரும்பாலானா எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்கள் தங்கள் வாகன பேட்டரிக்கு 3 ஆண்டுகள் வாரண்டியை வழங்கி வருகிறது. சில நிறுவனங்கள் 8 ஆண்டுகள் வரை வாரண்டியை வழங்கி வருகின்றனர்.

மேட்டர் நிறுவம் மட்டும் இந்த வாரண்டியை வழங்குவதற்கு முக்கியமான காரணம் அந்நிறுவனம் தயாரிக்கும் எலெக்டரிக் வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் முழுவதும் அந்நிறுவனமே தயாரிக்கிறது. குறிப்பாக வாகனத்தில் பயன்படுத்தப்படும் பேட்டரி பேக், பேட்டரி மேனேஜ்மென்ட சிஸ்டம் எல்லாமே இந்நிறுவனமே தயாரிப்பதால் இந்த வாரண்டியை அந்நிறுவனத்தால் வழங்க முடிகிறது.

Matter Aera Battery Warranty

இது மட்டுமல்ல இந்நிறுவனம் சமீபத்தில் தனது வாகனத்தை அனைத்து விதமான சூழ்நிலைகளிலும் ஓட்டி பார்த்து சோதனை செய்தது. இந்த சோதனையில் வாகனத்தின் நம்பகதன்மை உறுதிபடுத்தப்பட்டது. இந்த வாகனத்தில் அந்நிறுவனம் தற்போது லிக்யூட் கூல்டு பேட்டரி தொழிற்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இது வாகனத்தின் வாழ்நாளை அதிகரிக்கிறது. இந்த தொழிற்நுட்பம் வாகனத்தின் வாழ்நாளை அதிகரிக்க பேட்டரி சூடாவதை குறைக்கிறது. குளிர்ந்த நிலையில் பேட்டரி செயல்படும் போது அதன் வாழ்நாள் அதிகரிக்கிறது.

இந்த பைக்கில் மொத்தம் 3 விதமான ரைடு மோடுகள் உள்ளன. இதில் சிட்டி,எக்கோ, மற்றும் ஸ்போர்ட் ஆகிய மோடுகள் உள்ளன. இந்த பைக்கின் பிக்கப் திறன் மிக சிறப்பாக இருக்கிறது. இந்த பைக் 0-40 கி.மீ வேகத்தை வெறும் 2.8 நொடியில் பிக்கப் செய்துவிடுகிறது. இந்த பைக்கை முழுமையாக சார்ஜ் ஏற்றினால் 125 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Matter Aera Battery Warranty

இந்த பைக்கின் விலையை பொருத்தவரை ரூ1.93 லட்சம் முதல் ரூ2.05 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது இந்த பைக் போட்டி நிறுவனங்கள் வெளியிடும் பெட்ரோல் பைக்கின் விலைக்கு நிகராகவே இருக்கிறது. இதனால் பெட்ரோல் பைக்கை வாங்குவதற்கும், இந்த எலெக்ட்ரிக் பைக்கை வாங்குவதற்கும் விலை பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. இதன் காரணமாக பலர் பெட்ரோல் பைக்கிற்கு பதில் இதை தேர்வு செய்ய தயாராக இருக்கின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் பைக்குகள் மீது மக்கள் மத்தியில் பெரிய கவலையான பேட்டரி பற்றி கவலையை குறைக்க பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். தற்போது மேட்டர் நிறுவனம் வழங்கியுள்ள வாழ்நாள் வாரண்டி நிச்சயம் அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும் என நம்பலாம். இதனால் அந்நிறுவனத்தின் விற்பனை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 27, 2025, 16:45 [IST]
English summary
Matter provides aera ev bike lifetime warranty on battery
மேலும்... #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X