ஜிஎஸ்டியை குறைச்சது ஒன்னும் வேலைக்கு ஆகல... ஹோண்டா ஆக்டிவா விற்பனை இப்படி ஆகும்னு நெனைச்சு பார்க்கல!!

2025 செப்டம்பர் மாத நிலவரப்படி, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தேவை தொடர்ந்து வலுவாக உள்ளது. இருசக்கர வாகன விற்பனை கடந்த செப்டம்பர் மாதத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கடந்த மாத மோட்டார்சைக்கிள்கள் விற்பனை 2024 செப்டம்பரை விட 6.99% வளர்ச்சியைப் பெற்றுள்ளது போல், ஸ்கூட்டர்கள் விற்பனையும் 9.12% அதிகரித்துள்ளது.

இதில் ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) மற்றும் டிவிஎஸ் ஜூபிட்டர் (TVS Jupiter) ஸ்கூட்டர்கள் முக்கியப் பங்காற்றியுள்ளன. இந்த இரு ஸ்கூட்டர் மாடல்களும் மொத்த சந்தையில் 59% பங்கை கொண்டுள்ளன. 2025 செப்டம்பரில், முதல் 10 ஸ்கூட்டர்களின் விற்பனை 9.12% உயர்ந்து 6,44,976 யூனிட்டுகளாக பதிவாகியுள்ளது.

most selling scooters of september 2025

இது 2024 செப்டம்பரில் விற்கப்பட்ட 5,91,061 யூனிட்களுடன் ஒப்பிடும்போது, 53,915 யூனிட்கள் அதிகம் ஆகும். அதேபோல், 2024 ஆகஸ்ட் மாதத்தில் விற்கப்பட்ட 6,09,088 யூனிட்களுடன் ஒப்பிடுகையிலும் முதல் 10 ஸ்கூட்டர்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த லிஸ்ட்டில் முதலிடத்தை பிடித்துள்ள ஹோண்டா ஆக்டிவா கடந்த மாதம் 2,37,716 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

முதலிடத்தை பிடித்து இருப்பினும், இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாத ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை உடன் ஒப்பிடும்போது 9.38% சரிவைக் கண்டுள்ளது. ஏனெனில், 2024 செப்டம்பரில் 2,62,316 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனையாகி இருந்தன. கடந்த மாத விற்பனையில் ஆக்டிவா 36.86% சந்தை பங்கைக் கொண்டுள்ளது. அதாவது, இந்தியாவில் வாங்கப்படும் 3இல் ஒரு ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவா ஆகும்.

most selling scooters of september 2025

இந்தியாவில் 25 ஆண்டுகளைக் கொண்டாடும் விதமாக, 2025 ஆகஸ்ட்டில் ஆக்டிவா 110, ஆக்டிவா 125 மற்றும் எஸ்பி125 மாடல்களின் சிறப்பு ஆண்டுவிழா பதிப்புகளை ஹோண்டா அறிமுகப்படுத்தியது. ஹோண்டா ஆக்டிவாவுக்கு அடுத்தபடியாக, டிவிஎஸ் ஜூபிட்டர் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த மாதம் 1,42,116 யூனிட்கள் விற்பனையாகி, 2024 செப்டம்பரை விட 38.07% வளர்ச்சியை ஜூபிட்டர் பதிவு செய்துள்ளது.

2024 செப்டம்பரில் இது 1,02,934 யூனிட்களாக இருந்தது. இந்த வகையில், 39,182 யூனிட்கள் விற்பனையில் அதிகரிப்புடன் இந்த முதல் 10 ஸ்கூட்டர் பட்டியலில் ஜூபிட்டர் 22.03% சந்தை பங்கை பதிவு செய்துள்ளது. 3வது இடத்தில் உள்ள சுஸுகி ஆக்சஸ் ஸ்கூட்டரின் தேவை 2024 செப்டம்பரை காட்டிலும் கடந்த செப்டம்பரில் கணிசமாக அதிகரித்துள்ளது.

most selling scooters of september 2025

இதன் விற்பனை 34.48% அதிகரித்து 72,238 யூனிட்களை எட்டியுள்ளது. 2024 செப்டம்பரில் இது 53,715 யூனிட்களாக இருந்தது. ஆனால், இதற்கடுத்துள்ள டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டரின் தேவை கடந்த மாதத்தில் குறைந்துள்ளது. இதன் விற்பனை 13.56% குறைந்து 33,246 யூனிட்களாக பதிவாகி உள்ளது. அதுவே, 2024 செப்டம்பரில் 38,463 யூனிட்களாக பதிவாகி இருந்தது.

டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை 8.03% அதிகரித்து 30,820 யூனிட்களாக உயர்ந்துள்ளது. ஏனெனில், 2024 செப்டம்பரில் 28,529 ஐக்யூப் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. கடந்த செப்டம்பரில் இந்தியாவிலேயே அதிகம் விற்பனையான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக ஐக்யூப் மாறியுள்ளது. பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 30,558 யூனிட்கள் விற்பனையுடன் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.

most selling scooters of september 2025

இது 2024 செப்டம்பரில் விற்பனையான 28,517 யூனிட்களில் இருந்து 7.16% வளர்ச்சியைக் காட்டுகிறது. சேத்தக் கடந்த மாதத்தில் 4.74% சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது. இதற்கடுத்து 7வது இடத்தை பிடித்துள்ள சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் மற்றும் பர்க்மேன் ஸ்ட்ரீட் இஎக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

No Top 10 Scooters Sep-25 Sep-24 Diff Growth % YoY % Share Sep 25
1 Activa 2,37,716 2,62,316 -24,600 -9.38 36.86
2 Jupiter 1,42,116 1,02,934 39,182 38.07 22.03
3 Access 72,238 53,715 18,523 34.48 11.20
4 Ntorq 33,246 38,463 -5,217 -13.56 5.15
5 iQube 30,820 28,529 2,291 8.03 4.78
6 Chetak 30,558 28,517 2,041 7.16 4.74
7 Burgman 28,254 14,808 13,446 90.80 4.38
8 Ray 27,280 16,542 10,738 64.91 4.23
9 Dio 23,829 35,370 -11,541 -32.63 3.69
10 Rizta 18,919 9,867 9,052 91.74 2.93
- Total 6,44,976 5,91,061 53,915 9.12 100.00

இதன் விற்பனை 2024 செப்டம்பரை காட்டிலும் 90.80% அதிகரித்து 28,254 யூனிட்களாக பதிவாகி உள்ளது. இந்த லிஸ்ட்டில் இதற்கடுத்து 8வது, 9வது மற்றும் 10வது இடங்களில் முறையே யமஹா ரே இசட்.ஆர், ஹோண்டா டியோ மற்றும் ஏத்தர் ரிஸ்டா முறையே 27280, 23829 மற்றும் 18919 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

most selling scooters of september 2025

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா உள்பட உலகளவில் ஸ்கூட்டர்களுக்கான தேவை அதிகரித்து வருவதன் எதிரொலியாக கடந்த மாதத்தில் பல்வேறு ஸ்கூட்டர்களின் விற்பனை அதிகரித்து உள்ளது. இதற்கேற்ப, மத்திய அரசாங்கத்தின் ஜிஎஸ்டி 2.0 திருத்தம் மற்றும் பண்டிகை காலம் உள்ளிட்டவை ஸ்கூட்டர்களின் விற்பனையை ஒரேடியாக உயர்த்தி உள்ளன.

More from DriveSpark

Article Published On: Friday, October 24, 2025, 23:16 [IST]
English summary
Most sold scooters of september 2025 in india honda activa tvs jupiter and suzuki access
மேலும்... #bike sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X