ஒரே மாதத்தில் 3.8 லட்சம் பேர் வாங்கிய ஹீரோ பைக்! தீபாவளி இல்லைனாலும் இதுதான் நடந்திருக்கும்!

2025 செப்டம்பர் மாதத்தில் இருசக்கர வாகன விற்பனை பண்டிகைக்கால தேவை மற்றும் புதிய தயாரிப்பு அறிமுகங்களால் உத்வேகம் பெற்று சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன்படி, கடந்த மாதத்தில் இருசக்கர வாகனங்கள் விற்பனையும் மிகவும் சாதகமாக முடிவடைந்துள்ளது. பண்டிகைக்கால தேவை மற்றும் ஜிஎஸ்டி வரி குறைப்பு ஆகியவை விற்பனையை அதிகரித்ததோடு, புதிய தயாரிப்பு வெளியீடுகளும் இந்த வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தன.

நாட்டின் முதல் 10 சிறந்த 2-வீலர் மாடல்களின் விற்பனையை ஆய்வு செய்ததில், 2025 செப்டம்பரில் ஆண்டுக்கு ஆண்டு 6.30% உயர்வுடன் 14,62,687 இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதத்தில் விற்பனையான 13,76,024 இருசக்கர வாகனங்களை விட இது 86,663 யூனிட்கள் அதிகம் ஆகும்.

two-wheelers sales report of september 2025

2025 ஆகஸ்ட்டில் விற்பனையான 12,50,328 யூனிட்களுடன் ஒப்பிடுகையிலும், இது கணிசமான வளர்ச்சியை காட்டுகிறது. கடந்த செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வந்த புதிய ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்களின்படி, 350சிசி-க்கு குறைவான இருசக்கர வாகனங்களுக்கான வரி விகிதம் 28%-இல் இருந்து 18% ஆகக் குறைக்கப்பட்டது. அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களில் பெரும்பாலானவை இந்த பிரிவின் கீழ் வருகின்றன.

2025 செப்டம்பரில் அதிகம் விற்பனையான முதல் 10 இருசக்கர வாகனங்கள் என்று பார்த்தால், ஹீரோ ஸ்பிளெண்டர் 26.14% சந்தைப் பங்கு உடன் 3,82,383 யூனிட்கள் விற்பனையுடன் இந்த பிரிவில் தனது ஆதிக்கத்தைத் தொடர்கிறது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் விற்பனையான 3,75,886 யூனிட்களுடன் ஒப்பிடுகையில், இது 6,497 யூனிட்கள் அல்லது 1.73% விற்பனை அதிகரிப்பைக் குறிக்கிறது.

two-wheelers sales report of september 2025

சமீபத்தில், ஹீரோ நிறுவனம் 12.5 கோடி இருசக்கர வாகனங்கள் விற்பனை மைல்கல்லை எட்டியதைக் கொண்டாடியது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஸ்பிளெண்டர்+, பேஷன்+ மற்றும் விடா விஎக்ஸ்2 ஆகியவற்றின் சிறப்பு பதிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு அடுத்து இந்த வரிசையில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ள ஹோண்டா ஆக்டிவா, 2024 செப்டம்பரில் விற்பனையான 2,62,316 யூனிட்களுடன் ஒப்பிடுகையில், 9.38% சரிவுடன் 2,37,716 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு விற்பனையில் சரிவைச் சந்தித்துள்ளது.

எந்த அளவிற்கு என்றால், 24,600 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஸ்கூட்டர் பிரிவில் அதிகரித்து வரும் போட்டியாளர்கள் மற்றும் புதிய போட்டியாளர்களின் அறிமுகம் இந்த சரிவுக்குக் காரணமாக இருக்கலாம். மூன்றாம் இடத்தில் ஹோண்டா ஷைன் 1,85,059 யூனிட்கள் விற்பனையுடன் உள்ளது.

two-wheelers sales report of september 2025

2024 செப்டம்பரில் விற்பனையான 1,81,835 ஷைன் பைக்குகளுடன் ஒப்பிடுகையில், விற்பனை 1.77%, 3,224 யூனிட்கள் அதிகரித்துள்ளது. பஜாஜ் பல்சர் 1,55,798 யூனிட்கள் விற்பனையுடன் கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. 2024 செப்டம்பரில் விற்பனையான 1,39,128 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் இது 11.98% அதிகமாகும். இது 16,670 யூனிட்கள் அதிகரிப்பைக் குறிக்கிறது.

அடுத்ததாக, டிவிஎஸ் ஜூபிடர் குறிப்பிடத்தக்க ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2024 செப்டம்பரை விட இதன் விற்பனை 38.07% அதிகரித்து 1,42,116 யூனிட்களை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் விற்பனையான 1,02,934 யூனிட்களை விட அதிகம் ஆகும். ஹீரோ எச்.எஃப் டீலக்ஸ் விற்பனை 3.70% அதிகரித்து 1,18,043 யூனிட்களாக உயர்ந்துள்ளது.

two-wheelers sales report of september 2025

2024 செப்டம்பரில் விற்பனையான 1,13,827 எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகளுடன் ஒப்பிடுகையில், இது 4,216 யூனிட்கள் அதிகமாகும். இந்த பட்டியலில் 7வது இடத்தை பிடித்துள்ள, சுஸுகி ஆக்சஸ் ஸ்கூட்டரும் கடந்த மாதத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் விற்பனை 34.48% அதிகரித்து 72,238 யூனிட்களை எட்டியுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் விற்பனையான 53,715 ஆக்ஸஸ் ஸ்கூட்டர்களை விட இது அதிகமாகும். பஜாஜ் பிளாட்டினா 62,260 யூனிட்கள் விற்பனையுடன் கஸ்டமர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது 25.09% ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியைக் குறிக்கிறது, ஏனெனில் 2024 செப்டம்பரில் 49,774 பிளாட்டினா பைக்குகள் மட்டுமே விற்பனையாகி இருந்தன.

two-wheelers sales report of september 2025

மினி மோட்டார்சைக்கிள் பிரிவில் ஒரே போட்டியாளரான டிவிஎஸ் எக்ஸ்எல், கடந்த மாதம் 2.22% சரிவுடன் 53,748 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 54,969 யூனிட்கள் விற்பனையாகி இருந்தன. பத்தாவது இடத்தில் அப்பாச்சி 53,326 யூனிட்கள் விற்பனையுடன் இடம்பிடித்துள்ளது. இது 2024 செப்டம்பரில் விற்பனையான 41,640 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் 28.06% ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியைக் குறிக்கிறது.

No Top 10 2Ws Sep-25 Sep-24 Diff Growth % YoY % Share Sep 25
1 Splendor 3,82,383 3,75,886 6,497 1.73 26.14
2 Activa 2,37,716 2,62,316 -24,600 -9.38 16.25
3 Shine 1,85,059 1,81,835 3,224 1.77 12.65
4 Pulsar 1,55,798 1,39,128 16,670 11.98 10.65
5 Jupiter 1,42,116 1,02,934 39,182 38.07 9.72
6 HF Deluxe 1,18,043 1,13,827 4,216 3.70 8.07
7 Access 72,238 53,715 18,523 34.48 4.94
8 Platina 62,260 49,774 12,486 25.09 4.26
9 TVS XL 53,748 54,969 -1,221 -2.22 3.67
10 Apache 53,326 41,640 11,686 28.06 3.65
- Total 14,62,687 13,76,024 86,663 6.30 100.00

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த செப்டம்பர் மாதத்தில் பெரும்பாலான 2-வீலர்களின் விற்பனை அதிகரித்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த ஜிஎஸ்டி 2.0 திருத்தம் மற்றும் தீபாவளி பண்டிகை கால தேவை இதற்கு முக்கிய காரணங்கள் ஆகும். இருப்பினும், அதேநேரம், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் விற்பனை மட்டும் 2024 செப்டம்பரை விட கடந்த செப்டம்பரில் குறைந்திருப்பது கவனத்தை ஈர்க்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, October 24, 2025, 10:59 [IST]
English summary
Most sold two wheelers of september 2025 hero splendor honda activa and shine
மேலும்... #hero splendor #bike sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X