லாபம் மட்டுமல்ல போட்ட முதலே வேண்டாம்னு நினைச்சுட்டாங்களோ.. இவ்ளோ ரூபாய தள்ளுபடி பண்ணதுக்கு அவங்களுக்கு விருதே

உலக புகழ்பெற்ற இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் மோட்டோ மோரினி (Moto Morini)-யும் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளில் ஒன்றாக சீஎம்மெஸ்ஸோ 650 (Seiemmezzo 650) உள்ளது. இது ஓர் ரெட்ரோ ஸ்ட்ரீட் வகை மோட்டார்சைக்கிள் ஆகும். இந்த பைக்கின் விலையையே மோட்டோ மோரினி நிறுவனம் தற்போது குறைத்திருக்கின்றது. ஆயிரம், ரெண்டாயிரம் அல்ல மொத்தமாக 2 லட்சம் ரூபாய் வரை இந்த பைக்கின் விலையில் அந்நிறுவனம் குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த மாபெரும் தள்ளுபடியால் தற்போது அந்த பைக்கின் விலை ரூ. 4.99 லட்சமாக குறைந்து இருக்கின்றது. ஆகையால், இந்த பைக்கை கனவு வாகனமாக நினைத்துக் கொண்டிருந்தவர்களால் தற்போது அதை வாங்கிக் கொள்வது கூடுதல் சுலபமாக மாறி இருக்கின்றது. விலை குறைப்பு காரணமாக பலர் இந்த பைக்கை வாங்க முன் வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Moto morini seiemmezzo 650 series price cuts

அதேவேளையில், நிறுவனத்தின் இந்த மாபெரும் தள்ளுபடி செயலால், அந்த நிறுவனத்திற்கு லாபம் மட்டும் அல்ல போட்ட முதலே வேண்டாம் போலிருக்கு என நினைக்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. விலைக்கு குறைப்பிற்கு பின்னால் வேறு ஏதாவது காரணம் இருக்குமோ என நீங்கள் சந்தேகிக்கலாம்.

குறிப்பாக, சிறப்புகள் குறைப்பு போன்ற எதையாவதை நிறுவனம் செய்திருக்குமோ என்றும்கூட நீங்கள் கேட்கலாம். ஆனால், இந்த மாதிரியான எந்த மாற்றத்தையும் அது செய்யவில்லை என தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோட்டார்சைக்கிளில் அதே 649 சிசி மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

Moto morini seiemmezzo 650 scrambler

இது ஓர் பாரல்லல் ட்வின் லிக்யூடு கூல்டு வகை மோட்டார் ஆகும். இந்த மோட்டார் அதிகபட்சமாக 54 பிஎச்பி மற்றும் 54 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த மோட்டாருடன் இணைக்கப்பட்டு இருக்கின்றது.

மோட்டோ மோரினி நிறுவனம் சீஎம்மெஸ்ஸோ 650 மாடலின் விலையை மட்டுமல்ல சீஎம்மெஸ்ஸோ 650 ஸ்கிராம்ப்ளர்-இன் விலையையும் குறைத்திருக்கின்றது. இதன் விலையில் ரூ. 1.90 லட்சம் குறைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த விலை குறைப்பால் தற்போது அந்த பைக் ரூ. 5.20 லட்சத்திற்கே கிடைக்கும் சூழல் உருவாகி இருக்கின்றது.

முன்னதாக இந்த வெர்ஷன் ரூ. 6.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தே விற்பனைச் செய்யப்பட்டன என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த வெர்ஷனிலும் அதே 649 சிசி மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. உருவம் குறிப்பிட்ட சில சிறப்பம்சங்களில் மட்டுமே இரண்டிற்கும் இடையில் கணிசமான அளவு வித்தியாசம் இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதேவேளையில், 5 அங்குல டிஎஃப்டி திரையை தாங்கி இருப்பது, டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தைத் தாங்கியிருப்பது உள்ளிட்டவற்றில் இரண்டும் ஒரே மாதிரியானதாகவே இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதுதவிர இந்த பைக்கில் சிறப்பான சஸ்பென்ஷன் செட்-அப் ஆகியவையே இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மோட்டோ மோரினி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு கணிசமான அளவிலேயே வரவேற்பானது கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே மாபெரும் விலை குறைப்பை நிறுவனம் செய்திருக்கின்றது. இதன் வாயிலாக நிறுவனத்தின் விற்பனை விகிதம் கணிசமாக வரும் நாட்களில் உயரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, February 21, 2025, 22:41 [IST]
English summary
Moto morini seiemmezzo 650 series price cut discounts on retro street and scrambler
மேலும்... #moto morini #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+