கவாஸாகி பைக்னு நெனைச்சவங்க எல்லாம் ஒழுங்கா கைய தூக்கிடு! ரூ.2 லட்சத்தில் இவ்வளவு பவர்ஃபுல்லான பைக்கா!!

வெளிநாட்டில் இருந்து பைக்குகளை இந்தியாவில் விற்பனை செய்யும் நிறுவனங்களுள் ஒன்று, கீவே (Keeway) ஆகும். மோட்டோ வால்ட் (Moto Vault) நிறுவனத்தின் கீழ் செயல்படும் இந்த கீவே நிறுவனத்தில் இருந்து அசத்தலான தோற்றத்திலான பல்வேறு பைக்குகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் நிலையில், புதியதாக தற்போது 'ஆர்.ஆர்300' (RR300) என்கிற பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கீவே பிராண்டில் இருந்து ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வந்த 'கே300ஆர்' (K300R) பைக்கின் அப்டேட் வெர்சனாக புதிய ஆர்ஆர்300 பைக் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய பைக்கிற்கு ரூ.1.99 லட்சத்தை எக்ஸ்-ஷோரூம் விலையாக மோட்டோ வால்ட் நிறுவனம் நிர்ணயித்து உள்ளது.

keeway rr300 motorcycle

வெள்ளை, கருப்பு மற்றும் சிவப்பு என மூன்று விதமான கலர் ஆப்ஷன்களில் கிடைக்கவுள்ள புதிய கீவே ஆர்ஆர்300 பைக்கை விருப்பப்படுவோர் வெறும் ரூ.3,000 செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளலாம். புக் செய்தவர்களுக்கு இந்த பைக்கை டெலிவிரி கொடுக்கும் பணிகள் இந்த ஜூலை மாத இறுதியில் இருந்து பெனெல்லி-கீவே டீலர்ஷிப் ஷோரூம்களில் (Dealership Showrooms) துவங்கப்பட உள்ளது.

முழுவதும் பேனல்களால் நிரப்பப்பட்ட புதிய கீவே ஆர்ஆர்300 பைக்கில் 292சிசி சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கீவே கே300ஆர் பைக்கிலும் வழங்கப்பட்டு வந்த இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8,750 ஆர்பிஎம்-இல் 27.5 எச்பி மற்றும் 7,000 ஆர்பிஎம்-இல் 25 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இந்த என்ஜின் உடன் ஸ்லிப்பர் க்ளட்ச்சை கொண்ட 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. புதிய ஆர்ஆர்300 பைக்கின் அதிகப்பட்ச வேகம் மணிக்கு 139கிமீ ஆகும். வலிமையான டிரெல்லிஸ் ஃப்ரேமில் உருவாக்கப்பட்ட இந்த புதிய கீவே பைக்கின் முன்பக்கத்தில் எதிர்காற்றை தடுக்கும் விதமாக சிறிய அளவிலான விண்ட்ஸ்க்ரீன் வழங்கப்பட்டுள்ளது.

சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் 110மிமீ யுஎஸ்டி ஃபோர்க்குகளையும், பின்பக்கத்தில் மோனோஷாக்கையும் பெற்றுள்ள இந்த ஆர்ஆர்300 பைக்கில் 17 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. பிரேக்கிற்கு இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு இருப்பினும், முன் சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கின் டிராவல் ஆனது 292மிமீ-லும், பின் சக்கரத்தில் 220மிமீ-லும் வழங்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் பயணிகளின் கூடுதல் பாதுகாப்பிற்கு ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் (Dual-channel ABS)-ஐ கொண்டுள்ள புதிய கீவே ஆர்ஆர்300 பைக்கில் ஹேண்டில்பாருக்கு மத்தியில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், 12 லிட்டர்கள் கொள்ளளவில் பெட்ரோல் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் தரையில் இருந்து பைக்கின் அடிப்பகுதி (கிரவுண்ட் கிளியரென்ஸ்) ஆனது 135மிமீ உயரத்திலும், ரைடர் இருக்கை 780மிமீ உயரத்திலும் இடம்பெற்றுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய மோட்டார்சைக்கிள் மார்கெட்டில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க கீவே நிறுவனம் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகவே தற்போது ஆர்ஆர்300 பைக்கை மார்க்கெட்டில் களமிறக்கி உள்ளது. அசத்தலான தோற்றத்தில் பவர்ஃபுல்லான என்ஜினை கொண்டிருப்பினும், கீவே நிறுவனத்துக்கு இந்தியாவில் பெரிய அளவில் நெட்வொர்க் இல்லை என்பதால், புதிய ஆர்ஆர்300 பைக் மக்கள் மத்தியில் எந்த அளவிற்கு கவனத்தை பெறும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 17, 2025, 22:46 [IST]
English summary
Moto vault launches keeway rr300 motorcycle in india check price features all details here
மேலும்... #keeway #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+