பெட்ரோல் பைக்குகளுக்கு முடிவுக்கட்ட வரும் எலக்ட்ரிக் பைக்! மொத்த மார்க்கெட்டும் இதுக்கு தான் வெயிட்டிங்!
ஒபென் எலக்ட்ரிக் (Oben Electric), இந்தியாவில் எலக்ட்ரிக் பைக்குகளை (Electric Bikes) விற்பனை செய்யும் மிகவும் சில நிறுவனங்களுள் ஒன்று. ஒபென் எலக்ட்ரிக் நிறுவனத்தின் ரோர் (Rorr) எலக்ட்ரிக் பைக் மக்கள் மத்தியில் ஓரளவுக்கு கவனத்தை பெற்ற எலக்ட்ரிக் பைக்காக விளங்குகிறது. இதனாலேயே, புதிய எலக்ட்ரிக் பைக்குகளையும் ரோர் வரிசையிலேயே களமிறக்க ஒபென் எலக்ட்ரிக் நிறுவனம் விரும்புகிறது.
அந்த வகையில், இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக அடுத்த-தலைமுறை ரோர் இ.இசட் (EZ) எலக்ட்ரிக் பைக் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது புதிய ரோர் இ.இசட் எலக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதி குறித்த விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக ஒபென் எலக்ட்ரிக் நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், புதிய தலைமுறை ரோர் இ.இசட் எலக்ட்ரிக் பைக் வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி, செவ்வாய் கிழமையில் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-showroom Prices) அறிவிக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்பை விட கம்பீரமான டிசைனில் உருவாக்கப்பட்டு வரும் புதிய ஒபென் ரோர் இ.இசட் எலக்ட்ரிக் பைக்கில் அதற்கேற்ப அதிநவீன தொழிற்நுட்ப வசதிகள் வழங்கப்பட உள்ளதாகவும் ஒபென் எலக்ட்ரிக் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஒபென் எலக்ட்ரிக் நிறுவனம் ரோர் இ.இசட் எலக்ட்ரிக் பைக்கை கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மார்க்கெட்டில் அறிமுகம் செய்தது.
ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor) பைக்கை போன்று தினந்தோறும் பயன்படுத்துவதற்கு ஏற்ற எலக்ட்ரிக் பைக்காக விளங்கும் ரோர் இ.இசட், வழக்கமான பைக்கில் ஏற்படும் அதிர்வுகள் மற்றும் என்ஜின் வெப்பம் எதுவும் இல்லாமல் அமைதியானதாகவும், க்ளட்ச் & கியரை பயன்படுத்தாமல் ஓட்டக்கூடிய பைக்காகவும் விளங்குகிறது.
பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 175கிமீ தொலைவிற்கு இயங்கக்கூடிய இந்த எலக்ட்ரிக் பைக்கின் லித்தியம்-இரும்பு-பாஸ்பேட் பேட்டரியை வெறும் 45 நிமிடங்களில் 80% சார்ஜ் நிரப்பிவிடலாம் என்கிறது ஒபென் எலக்ட்ரிக் நிறுவனம். இந்த பைக்கின் பேட்டரி ஆனது வெப்பத்தில் இருந்து கூடுதலாக 50% பாதுகாப்பை அளிக்கக்கூடியதாக, இரட்டிப்பு ஆயுட்காலத்தை கொண்டதாக உள்ளது.
அதிகப்பட்சமாக மணிக்கு 95கிமீ வேகத்தில் இயங்கக்கூடியதாக தற்போதைய ஒபென் ரோர் இ.இசட் எலக்ட்ரிக் பைக் இருக்கும் நிலையில், புதிய ரோர் இ.இசட் எலக்ட்ரிக் பைக் இந்த அம்சங்கள் அனைத்திலும் மேம்பட்டதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். 2020 ஆகஸ்ட்டில் மார்க்கெட்டில் நுழைந்த ஒபென் எலக்ட்ரிக் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலக்ட்ரிக் 2-வீலர்களை வாங்குபவர்களில் பெரும்பாலானவர்களின் தேர்வு தற்போதைக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களாகவே உள்ளன என்றாலும், இந்த விகிதத்தை ஒபென் எலக்ட்ரிக் போன்ற நிறுவனங்கள் தங்களது எலக்ட்ரிக் பைக்குகள் மூலமாக கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வருகின்றன. அந்த வகையில், புதிய தலைமுறை ரோர் இ.இசட் எலக்ட்ரிக் பைக் மார்க்கெட்டில் கவனிக்கத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என கணிக்கிறோம்.


Click it and Unblock the Notifications








