ராயல் என்ஃபீல்டுக்கு சரியான போட்டி... ஹார்லி-டேவிட்சன் மொத்த மார்க்கெட்டையும் திரும்பி பார்க்க வெச்சிடுச்சு!
புதிய ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440டி (Harley-Davidson X440T), மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் மெருகூட்டப்பட்ட தோற்றத்துடன் இந்திய சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350) பைக்கிற்கு நேரடிப் போட்டியாக, ரெட்ரோ மோட்டார்சைக்கிள் பிரிவில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த இரண்டு ரெட்ரோ பைக்குகளின் முழுமையான ஒப்பீட்டை தான் இங்கு பார்க்க போகிறோம்.
என்ஜின் ஒப்பீடு: ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440டி அதன் 440சிசி ஏர்/ஆயில்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் மூலம் 6,000 ஆர்பிஎம்-இல் 27 பிஎச்பி பவரையும், 4,000 ஆர்பிஎம்-இல் 38 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. அதே நேரத்தில், ராயல் என்பீல்டு கிளாசிக் 350 ஆனது அதன் 349சிசி ஏர்/ஆயில்-கூல்டு என்ஜின் மூலம் 6,100 ஆர்பிஎம்-இல் 20.2 பிஎச்பி பவரையும், 4,000 ஆர்பிஎம்-இல் 27 என்எம் டார்க் திறனையும் அளிக்கிறது.

| Specification | Harley X440T | Classic 350 |
|---|---|---|
| Engine | 440cc | 349cc |
| Power | 27 BHP at 6,000 rpm | 20.2 BHP at 6,100 rpm |
| Torque | 38 Nm at 4,000 rpm | 27 Nm at 4,000 rpm |
| Gearbox | 6 Speed | 5 Speed |
| Cooling system | Air/Oil cooled | Air/Oil Cooled |
| No of cylinders | Single | Single |
என்ஜின் உடன் இணைக்கப்படும் ஹார்லி-டேவிட்சனின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ், ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸை விட மேம்பட்ட செயல்திறனை வழங்குகிறது. கிளாசிக் 350 ஒரு க்ரூஸர்-வகை மோட்டார்சைக்கிளாக இருந்தாலும், எக்ஸ்440டி பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்றது. இது ஸ்போர்ட்டியாகவும் அல்லது நெடுஞ்சாலை பயணங்களுக்கு க்ரூஸராகவும் செயல்பட முடியும்.
பரிமாணங்கள் ஒப்பீடு: புதிய ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440டி பைக் ஆனது ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை விட சற்று பெரியது. எக்ஸ்440டி 2156 மிமீ நீளத்தையும், 818 மிமீ அகலத்தையும் கொண்டுள்ளது. கிளாசிக் 350 ஆனது 2145 மிமீ நீளமும், 785 மிமீ அகலமும் கொண்டது.
| Specification | Harley X440T | Classic 350 |
|---|---|---|
| Engine | 440cc | 349cc |
| Power | 27 BHP at 6,000 rpm | 20.2 BHP at 6,100 rpm |
| Torque | 38 Nm at 4,000 rpm | 27 Nm at 4,000 rpm |
| Gearbox | 6 Speed | 5 Speed |
| Cooling system | Air/Oil cooled | Air/Oil Cooled |
| No of cylinders | Single | Single |
| Length | 2156 mm | 2145 mm |
| Width | 818 mm | 785 mm |
| Height | - | 1090 mm |
| Wheelbase | 1418 mm | 1390 mm |
| Ground Clearance | 170 mm | 170 mm |
| Seat Height | 805 mm | 805 mm |
| Kerb Weight | 192 Kg | 195 Kg |
| Fuel Capacity | 13.5 Litres | 13 Litres |

எடை அடிப்படையில், கிளாசிக் 350 (195 கிலோ) பைக் ஆனது எக்ஸ்440டி (192 கிலோ) பைக்கை விட சற்றே கனமானது. இந்த இரண்டு பைக்குகளிலும் கிரவுண்ட் கிளியரன்ஸ் (170 மிமீ) மற்றும் தரையில் இருந்து டிரைவர் சீட் உயரம் (805 மிமீ) போன்றவை ஒரே மாதிரியாக உள்ளன. எக்ஸ்440டி பைக்கின் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 13.5 லிட்டர், கிளாசிக் 350-இன் கொள்ளளவு 13 லிட்டர் ஆகும்.
பாதுகாப்பு & மெக்கானிக்கல் அம்சங்கள்: இரண்டு பைக்குகளும் டூயல்-சேனல் ஏபிஎஸ், டிஸ்க் பிரேக்குகள் மற்றும் அலாய் சக்கரங்கள் போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் விற்பனை செய்யப்படுகின்றன. எக்ஸ்440டி 43மிமீ கயாபா (KYB) USD ஃபோர்க்ஸ் முன்புற சஸ்பென்ஷனையும், பின்புறத்தில் 7-ஸ்டெப்பில் சரிசெய்யக்கூடிய இரட்டை ஷாக் அப்சார்பர்களையும் கொண்டுள்ளது.
| Specification | Harley X440T | Classic 350 |
|---|---|---|
| Chassis | - | Twin Downtube Spine Frame |
| Front Suspension | 43mm KYB USD Forks | 41mm Telescopic Fork |
| Rear Suspension | Twin Shock with 7-step adjust | Twin Shock Absorbers with 6-step adjust |
| Brakes | 320/240mm Disc Brakes | 300/270mm Disc brakes |
| Tyres | 100/90-18, 140/70-17 (Tubeless) | 100/90-19, 120/80-18 (Tube, Tubeless Tyres) |
| Wheels | 28/17 inch Alloy wheels | 19/18 inch Spokes and Alloys |
| ABS | Dual Channel | Dual Channel |
மறுப்பக்கம், கிளாசிக் 350 ஆனது 41மிமீ டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் 6-ஸ்டெப்பில் சரிசெய்யக்கூடிய இரட்டை ஷாக் அப்சார்பர்களை சஸ்பென்ஷன்களாக பயன்படுத்துகிறது. பழமையான ரெட்ரோ தோற்றத்தை விரும்புவோருக்காக கிளாசிக் 350 பைக் ஸ்போக் சக்கரங்கள் மற்றும் ட்யூப் டயர்கள் ஆப்ஷன் உடன் கிடைக்கிறது.
தொழிற்நுட்ப அம்சங்கள்: ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440டி, ரைடு மோட்கள் (சாலை, மழை), டிராக்ஷன் கண்ட்ரோல், அவசரகால பிரேக்கிங் அலர்ட் மற்றும் 3.5 அங்குல TFT டிஸ்ப்ளே போன்ற பிரீமியம் அம்சங்களுடன் வருகிறது. இந்த டிஸ்ப்ளே ப்ளூடூத் மூலம் மொபைல் போன் அழைப்புகள் & குறுஞ்செய்திகள் குறித்த எச்சரிக்கைகள், பாடல்களை கண்ட்ரோல் செய்வது மற்றும் பயணத்திற்கான வழிக்காட்டுதலை (Navigation) வழங்குகிறது.
| Feature/Specification | Harley X440T | Classic 350 |
|---|---|---|
| Mirrors | Bar end Mirrors | Standard Mirrors |
| Ride Modes | Road, Rain | - |
| Safety Alerts | Panic Braking Alert | - |
| Traction Control | Yes | - |
| Headlamps & Lighting | LED headlamps with Multi Projectors, Signature DRLs, LED indicator and Tail lamps | LED headlamps and Pilot Lamps, LED indicators |
| Display | 3.5-inch TFT Display | Semi-digital cluster with connectivity, Navigation and Gear Indicator |
| Connectivity & Alerts | Music control, Navigation, Call alert and Message alerts | Connectivity, Navigation, Call alert and Message alerts (via app) |
| Charging Port | 2A Quick Charge 3.0 | USB Charging Port |
| Levers | - | Adjustable Clutch and Brake Levers |
ராயல் என்பீல்டு கிளாசிக் 350, எல்இடி ஹெட்லேம்ப்கள், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், அட்ஜஸ்டபிள் கிளட்ச் மற்றும் பிரேக் லீவர்கள் போன்ற அத்தியாவசிய அம்சங்களில் கவனம் செலுத்துகிறது. இது செமி-டிஜிட்டல் கிளஸ்டர், இணைப்பு வசதி, நேவிகேஷன் மற்றும் கியர் இண்டிகேட்டர் ஆகியவற்றை கொண்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440டி பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.79 லட்சம் ஆகும். ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.24 லட்சம் முதல் தொடங்குகிறது. இந்தியாவில், ராயல் என்பீல்டு கிளாசிக் 350 அதன் பல தசாப்த கால பாரம்பரியம் மற்றும் மலிவு விலை காரணமாக பலருக்கு முதல் தேர்வாக உள்ளது.
இருப்பினும், அதிக செயல்திறன், மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் நவீன எர்கோனோமிக்ஸ் ஆகியவற்றை விரும்பும் ஓட்டுநர்களுக்கு எக்ஸ்440டி ஒரு சிறந்த தேர்வாகும். கிளாசிக் 350 ஆனது ராயல் என்பீல்டின் பாரம்பரியத்தையும் பெருமையையும் விரும்பும் உரிமையாளர்களுக்கான காலத்தால் அழியாத ஒரு தயாரிப்பாகும். இந்த இரண்டில் உங்களது சாய்ஸ் எது என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications








