பைக்கை ஓட்டி பார்த்த எங்களுக்கு அல்லு இல்ல... ஹீரோ கம்பெனியால் முடியாதது என்ன தான் இருக்கு?
ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் புதிய எக்ஸ்ட்ரீம் 250ஆர் பைக்கை சமீபத்தில் அறிமுகம் செய்தது. 2023ஆம் ஆண்டில் இத்தாலியில் கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தப்பட்ட 2.5ஆர் க்ஸ்டண்ட் (2.5R Xtunt) கான்செப்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக புதிய எக்ஸ்ட்ரீம் 250ஆர் பைக் விளங்குகிறது. இந்தியாவில் 250சிசி பைக்குகள் பிரிவில் ஏற்கனவே கேடிஎம் (KTM), பஜாஜ் (Bajaj), ஹஸ்க்வர்னா (Husqvarna) உள்ளிட்ட நிறுவனங்களின் ஆதிக்கம் இருக்கும் நிலையில், அந்த வரிசையில் ஹீரோ மோட்டோ நிறுவனமும் தன்னை புதிய எக்ஸ்ட்ரீம் 250ஆர் பைக் உடன் இணைத்துக் கொண்டுள்ளது.
ஹீரோ நிறுவனம் மிகுந்த நம்பிக்கை உடன் அறிமுகம் செய்துள்ள புதிய எக்ஸ்ட்ரிம் 250ஆர் பைக்கை நாங்கள் ராஜஸ்தானின் உதய்பூரில் ஓட்டி பார்த்தோம். அப்போது இந்த புதிய ஹீரோ பைக்கை பற்றி பல்வேறு விஷயங்கள் எங்களுக்கு தெரியவந்தன. அவற்றை விரிவான தமிழ் ரிவியூவாக கீழேயுள்ள வீடியோவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.
ஹீரோ மோட்டோகார்பில் இருந்து ஏற்கனவே எக்ஸ்ட்ரீம் 125ஆர் மற்றும் எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்குகள் விற்பனையில் இருக்கும் நிலையில், அந்த வரிசையில் புதியதாக எக்ஸ்ட்ரீம் 250ஆர் பைக் களமிறக்கப்பட்டுள்ளது. முந்தைய எக்ஸ்ட்ரீம் பைக்குகளை காட்டிலும் பவர்ஃபுல்லானதாகவும், செயல்திறன்மிக்கதாகவும் புதிய எக்ஸ்ட்ரீம் 250ஆர் விளங்குகிறது.

ரூ.1.80 லட்சம் என்கிற ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையில் கடந்த ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய ஹீரோ பைக்கில் 250சிசி, லிக்யுடு-கூல்டு, 4-வால்வு, DOHC, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 30 பிஎச்பி மற்றும் 25 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








