தெருக்குள்ள போனாலே எல்லாரும் திரும்பி பாப்பாங்க! இந்த வண்டில அப்படி என்ன இருக்குது?

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது அப்பாச்சி சிரீஸின் 20ம் ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் 20வது வருட அனிவெர்சரி எடிசனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி அப்பாச்சி ஆர்டிஆர் 160,180,200 மற்றும் அப்பாச்சி ஆர்ஆர் 310, ஆர்டிஆர் 310 ஆகிய வாகனங்களின் லிமிடெட் எடிசன்கள் அறிமுகுமாகியுள்ளது. இது மட்டுமல்ல அப்பாச்சி ஆர்டிஆர் 160 மற்றும் 200 4வி பைக்குகளின் அப்டேட் வெர்ஷனும் வெளியாகியுள்ளது.

முதலில் அப்பாச்சி 20வது வருட கொண்டாட்டத்தை பொருத்தவரை கடந்த 20 ஆண்டுகளில் 65 லட்சம் வாகனங்களை உலகளவில் விற்பவனை செய்துள்ளது. இதை கொண்டாடும் வகையில் கருப்பு நிற டுயல் டோன் மற்றும் சாம்பியன் கோல்டு லிவரி கலரில் டுயல் டோன் அலாய் வீல்களுடன் கருப்பு, கோல்டு நிற யூஎஸ்பி சார்ஜர்களும் 20 ஆண்டு லேகோவுடன் இந்த எடிசன் கொண்டு வரப்பட்டுள்ளது.

TVS Apache RTR 160 amp amp 200 4V

அடுத்தாக அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி மற்றும் ஆர்டிஆர் 200 4வி ஆகிய வாகனங்களில் புதிய கிளாஸ் டி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் சிக்னேச்சர் எல்இடி டிஆர்எல்களுடன் வழங்கப்ப்டடுள்ளது. இதில் 5 இன்ச் டிஎஃப்டி கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, வாய்ஸ் அசிஸ்ட், டிராக்ஷன் கண்ட்ரோல், ஸ்லிப்பர் கிளட்ச் உடன் வருகிறது. இதில் ரேஸிங் ரெட்,மெரைன் ப்ளூ, மெட்டலிக் பிளாக் ஆகிய நிறங்களில் இந்த பைக் கிடைக்கிறது.

ஆர்டிஆர் 200 4வி பைக் மேட் பிளாக் மற்றும் கிராணைட் கிரே ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. காஸ்மெட்டிக் மற்றும் டெக்னாலஜி சேர்க்கை இதில் அதிகமாக உள்ளது. இதில் 160 சிசி ஏர்/ ஆயில் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பெர்ஃபார்மென்ஸ் மற்றும் அளவுகள் பழைய பைக்கில் இருந்த அதே தான். இந்த பைக்கில் கூடுதலாக 3 ரைடு மோடுகள் உள்ளன. டுயல் சேல் ஏபிஎஸ், டர்ன் பை டர்ன் நேவிகேஷன், அட்ஜெட்ஸ்ட் செய்யக்கூடிய பிரேக் மற்றும் கிளட்ச் ஆகிய அம்சங்கள் உள்ளன.

TVS Apache RTR 160 amp amp 200 4V

அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் பிளாக் எடிசன் ரூ1,28,490 என்ற விலையில் விற்பனையாகி வருகுிறது. இதில் டாப் வேரியன்டான டிஎஃப்டி +புரோஜெக்டர் ஹெட்லைட் வேரியன்ட் ரூ1,47,990 என்ற விலையில் விற்பனைக்கு வருகிறுது. ஆர்டிஆர் 200 4வி இன்ஜினை பொருத்தவரை யூஎஸ்டி+ எல்சிடி வேரியன்ட் ரூ1,53,990 என்ற விலையிலும் டாப் வேரியன்ட் டிஎஃப்டி+ புரோஜெக்டர் ஹெட்லைட் வேரியன்ட் ரூ1,59,980 என்ற விலையிலும் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

ஸ்பெஷல் எடிசன் விலை விபரங்களை பொருத்தவரை ஆர்டிஆர் 160 பைக் ரூ1,37,990 என்ற விலையிலும் ஆர்டிஆர் 180 பைக் ரூ1,39,990 என்ற விலையிகலும் ஆர்டிஆர் 160 4வி பைக்கை பொருத்தவரை ரூ1,50,990 என்ற விலையிலும், ஆர்டிஆர் 200 4வி பைக்கை பொருத்தவரை ரூ1,62,990 என்ற விலையிலும், பிரிமியம் பைக்குகளான அப்பாச்சி ஆர்டிஆர் 310 மற்றும் ஆர்ஆர் 310 பைக்குகளை பொருத்தவரை முறையே ரூ3,11,000 மற்றும் ரூ3,37.000 என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

TVS Apache RTR 160 amp amp 200 4V

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160மற்றும் 200 4வி பைக் மக்கள் அதிகம் எதிர்பார்த்த பைக்காக இருக்கிறது. பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் இதன் விற்பனை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். அதே நேரம் அனிவெர்சரி எடிசனும் இதற்கு ஈடு வழங்கும் வகையில் செயல்படும் என எதிர்பார்க்கலாம். இந்த வாகனம் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Saturday, September 6, 2025, 18:15 [IST]
English summary
New tvs apache rtr 160 200 4v launched in india from rs 1 28 lakh
மேலும்... #tvs #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X