2இல் எதை வாங்குறது என்பதுதான் பெரிய குழப்பமே... டிவிஎஸ் தரமான தயாரிப்பு மூலம் மார்க்கெட்டை அதிர வெச்சிடுச்சு!

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனத்தில் இருந்து 3வது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) 'ஆர்பிட்டர்' (Orbiter) என்கிற பெயரில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். விற்பனையில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஏத்தர் எனர்ஜி (Ather Energy) நிறுவனத்தின் ரிஸ்டா (Rizta) முக்கியமான போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

தோற்றம்: புதிய டிவிஎஸ் ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தனித்துவமான டிசைனில் பெட்டகம் வடிவிலான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதற்கேற்ப கவர்ச்சிகரமான பெயிண்ட் கலர் ஆப்ஷன்கள் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு உள்ளன. மறுப்பக்கம், ஏத்தர் ரிஸ்டா ஆனது பார்ப்பதற்கு வழக்கமான ஸ்கூட்டர்களை போலவே உள்ளது.

tvs orbiter vs ather rizta

ஏத்தர் நிறுவனம் ஸ்டைலிஷான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்வதில் நிபுணத்துவம் பெற்றது. ஆதலால், ஆர்பிட்டரில் இருந்து டிவிஎஸ் லோகோவை மட்டும் நீக்கிவிட்டால், பலர் இது ஏத்தர் தயாரிப்பு என்றே நினைப்பர். ஏனெனில், அந்த அளவிற்கு மிகவும் இளமையான தோற்றத்தை ஆர்பிட்டர் கொண்டுள்ளது.

தொழிற்நுட்ப அம்சங்கள்: ஆர்பிட்டர் மற்றும் ரிஸ்டா இரண்டுமே லேட்டஸ்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் என்பதால், இரண்டுமே தொழிற்நுட்ப வசதிகள் நிறைந்தவையாக உள்ளன. இரண்டிலும் வழங்கப்படும் அம்சங்கள் என்று பார்த்தால், முழு-எல்இடி விளக்குகள், மொபைல் போன் (Mobile Phone) சார்ஜிங்கிற்கு யுஎஸ்பி (USB) துளைகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இவற்றுடன், ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி (Bluetooth Connectivity) வசதியும் வழங்கப்படுவதால், பயணத்திற்கான வழிக்காட்டுதல், மொபைல் போன் & குறுஞ்செய்திகள் எச்சரிக்கைகள் உள்ளிட்டவற்றை திரையிலேயே காணலாம்.

இருப்பினும், ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 7 இன்ச்சில் டிஸ்பிளே வழங்கப்படுகிறது. கூகுள் மேப், அலெக்ஸா உள்ளிட்டவற்றை வழங்கக்கூடிய இத்தகைய திரை ரிஸ்டாவில் வழங்கப்படுவது இல்லை. மேலும், வாட்ஸ்-அப் (WhatsApp) வாயிலாக இருக்கும் இடத்தின் லொக்கேஷனையும் இந்த 7-இன்ச் திரை வழியாக மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ள முடியும்.

பேட்டரி & மோட்டார்: டிவிஎஸ் ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் மத்தியில் வழங்கப்பட்டுள்ள எலக்ட்ரிக் மோட்டாரில் 3.1kWh திறன் கொண்ட பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இந்த பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 158கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என்கிறது டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்.

ஏத்தர் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.7kWh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்படுகிறது. ரிஸ்டாவை 2.9kWh என்கிற சிறிய அளவிலான பேட்டரி உடனும் வாங்கலாம். இதில் 3.7kWh பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 159கிமீ தொலைவிற்கும், 2.9kWh பேட்டரியில் 123கிமீ தொலைவிற்கும் பயணிக்கலாம்.

விலை: புதிய ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை ரூ.99 ஆயிரத்து 900இல் இருந்து டிவிஎஸ் நிறுவனம் நிர்ணயித்துள்ளது. அதேநேரம், ஏத்தர் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 999இல் இருந்து உள்ளன. இந்த விலைகள் யாவும் மத்திய அரசின் பிரதமர் இ-டிரைவ் (PM-E Drive) திட்டத்தின் கீழ் கிடைக்கும் மானியம் கழிக்கப்பட்ட பின் நிர்ணயிக்கப்படும் விலைகள் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இப்போதுதான் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதால், வருகிற தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் முடியும் வரையில் ஆர்பிட்டரின் விலைகளை டிவிஎஸ் நிறுவனம் அதிகரிக்க வாய்ப்பில்லை. ஆதலால், குறைவான விலை டிவிஎஸ் ஆர்பிட்டர் ஸ்கூட்டருக்கு பெரிய அனுகூலமாக இருக்கும். இருப்பினும், எளிதில் அணுகக்கூடியதாக அருகில் ஷோரூம் (Showroom) மற்றும் சர்வீஸ் செண்டர்கள் (Service Centres)-ஐ பொறுத்து மேற்கூறப்பட்ட இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுள் ஒன்றை வாங்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 30, 2025, 13:20 [IST]
English summary
New tvs orbiter vs ather rizta electric scooters comparison check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+