இப்ப தான் போட்டி சூடுப்பிடிக்குது... எந்த பைக்கை வாங்குறதுனு தெரியாம குழப்பமா இருக்கா?

யமஹா (Yamaha) நிறுவனம், எக்ஸ்.எஸ்.ஆர்155 (XSR 155) என்கிற தனது புதிய நியோ-ரெட்ரோ மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. நவீன வடிவமைப்பு அம்சங்களுடன் களமிறங்கப்பட்டுள்ள இந்த பைக், புகழ்பெற்ற ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350) பைக்கிற்கு கடுமையான போட்டியாளராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு நியோ-ரெட்ரோ பைக்குகளும் எவ்வாறு ஒன்றுக்கு ஒன்று வேறுபடுகின்றன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் விரிவாகக் பார்க்க போகிறோம்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு யமஹா இந்திய சந்தையில் புதிய தயாரிப்பை வெளியிட்டுள்ளது. இது பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த எக்ஸ்.எஸ்.ஆர்155 மோட்டார்சைக்கிள் ஆகும். யமஹா எக்ஸ்.எஸ்.ஆர்155 பைக்கின் முக்கிய போட்டியாளர்களில் ஒன்று, இந்திய சந்தையில் சில வருடங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டு பெரும் வெற்றியைப் பெற்ற ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 ஆகும்.

new yamaha xsr155 vs royal enfield hunter 350

வடிவமைப்பு: புதிய யமஹா எக்ஸ்.எஸ்.ஆர்155 ஆனது ஒரு நியோ-ரெட்ரோ ஸ்டைல் மோட்டார்சைக்கிள் ஆகும்; இது நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வந்துள்ளது. இதில் வட்ட வடிவ LED ஹெட்லேம்ப், LED பகல்நேர ரன்னிங் விளக்குகள், நீர்துளி வடிவ பெட்ரோல் டேங்க், ரிப்பட்-டைப் இருக்கை மற்றும் வட்ட வடிவ LED டெயில்லேம்ப் ஆகியவை உள்ளன. மேலும், இந்த பைக்கில் மெஷின்-கன் வடிவிலான எக்ஸாஸ்ட் குழாய் மற்றும் டூயல்-பர்பஸ் டயர்களும் உள்ளன. இவற்றுடன் எக்ஸ்.எஸ்.ஆர்155 பைக்கில் ஸ்கிராம்ப்ளர் மற்றும் கஃபே ரேசர் என இரண்டு ஆக்சஸரி கிட்களையும் யமஹா வழங்குகிறது.

new yamaha xsr155 vs royal enfield hunter 350

ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 ஆனது ஒரு நியோ ரோட்ஸ்டர் வகையைச் சேர்ந்த பைக் ஆகும். இதுவும், LED லைட்டிங் போன்ற சில நவீன அம்சங்களைக் கொண்டுள்ளது. கவர்ச்சிகரமான கலர் ஆப்ஷன்கள் உடன் விற்பனை செய்யப்படும் ஹண்டர் 350 பைக்கிலும் நீர்துளி வடிவ பெட்ரோல் டேங்க் உள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால், வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய ஏராளமான ஆக்சஸரி கிட்களும் இந்த பைக்குடன் கிடைக்கின்றன.

என்ஜின்: இரண்டு மோட்டார்சைக்கிள்களும் என்ஜின் சிஸ்டத்தில் அடிப்படையிலேயே முற்றிலும் மாறுபடுகின்றன. புதிய எக்ஸ்.எஸ்.ஆர்155 பைக் ஆனது யமஹா எம்டி-15 மற்றும் ஆர்-15 பைக்குகளில் உள்ள அதே 155 சிசி, லிக்யுடு-கூல்டு என்ஜினைப் பயன்படுத்துகிறது. இது அதிகபட்சமாக 18.4 பிஎச்பி பவரையும், 14.2 என்.எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்கிறது.

new yamaha xsr155 vs royal enfield hunter 350

6-ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப் & அசிஸ்ட் கிளட்ச் ஆகியவற்றுடன் இந்த என்ஜின் வழங்கப்படுகிறது. அதுவே, ஹண்டர் 350 பைக்கில் 349 சிசி, லாங்-ஸ்ட்ரோக், ஏர்-ஆயில் கூல்டு என்ஜினை ராயல் என்ஃபீல்டு வழங்குகிறது. இது அதிகப்பட்சமாக 20.2 bhp பவரையும், 27 என்.எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது.

விலை: புதிய யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் 155 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.55 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஆரம்பக்கால விலை என்பதால், பின்னர் உயரக்கூடும். மறுபுறம், ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.38 லட்சம் முதல் ரூ.1.67 லட்சம் வரையில் உள்ளன.

new yamaha xsr155 vs royal enfield hunter 350

டிரைவ்ஸ்பார்க் கருத்து: யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் 155 பைக்கை வாங்குவதா அல்லது ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கை வாங்குவதா என்பது வாடிக்கையாளர்களின் விருப்பத்தைப் பொறுத்தது ஆகும். குறைந்த ஆர்பிஎம் வேகத்தில் அதிக டார்க் திறனை வழங்கக்கூடிய என்ஜினை கொண்ட, ரெட்ரோ வடிவமைப்புடன் கூடிய கம்பீரமான எக்ஸாஸ்ட் சத்தம் வேண்டும் என்பவர்கள் ஹண்டர் 350-ஐ தேர்ந்தெடுக்கலாம். இன்னும் வேகமான என்ஜின் மற்றும் சிறந்த ஹேண்ட்லிங் உடன் ஜாலியான ரைடிங் அனுபவத்தை விரும்புபவர்களுக்கு யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் 155 சிறந்த தேர்வாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, November 14, 2025, 23:15 [IST]
English summary
New yamaha xsr155 vs royal enfield hunter 350 check full bike comparison here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X