போகும் பாதை கற்கள் நிறஞ்சதா இருந்தாலும் இந்த ஸ்கூட்டர் ரொம்ப சாதாரணமா போய்ட்டு வந்திரும்.. ரைடு ரிவியூ விடியோ!

பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் நியூமரஸ் மோட்டார்ஸ் (Numeros Motors) நிறுவனம், டிப்ளோஸ் ப்ரோ (Diplos Pro) ஸ்கூட்டர் மாடலைத் தொடர்ந்து, இந்த மாடலின் மற்றுமொரு வெர்ஷனை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. டிப்ளோஸ் மேக்ஸ் (Diplos Max)-தான் அந்த வெர்ஷன் ஆகும். இது தினசரி பயன்பாட்டிற்கு உகந்த வெர்ஷன் என்பது கவனிக்கத்தகுந்தது. கிராமம் மற்றும் நகரம் என அனைத்திற்கும் உகந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இதனை டிப்ளோஸ் மோட்டார்ஸ் தயார் செய்திருக்கின்றது. மிக முக்கியமாக கரடு-முரடான பாதையாக இருந்தாலும் எளிதில் சமாளிக்கும் திறனுடன் இதனை தயார் செய்திருக்கின்றனர்.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே சமீபத்தில் பெங்களூருவில் வைத்து ரைடு ரிவியூ செய்து பார்க்கும் வாய்ப்பு நமகு டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு கிடைத்தது. அப்போது இந்த வாகனம் பற்றிய சுவாரஷ்யமான விபரங்களை நாங்கள் அறிந்துக் கொண்டோம். அதையே இங்கே வீடியோவாக வழங்கி உள்ளோம். வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

மாறுபட்ட மற்றும் மிகவும் எளிமையான தோற்றத்தில் டிப்ளோஸ் மேக்ஸ் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இதில், கழட்டி மாட்டும் வசதிக் கொண்ட பேட்டரி பேக்கே வழங்கப்பட்டு இருக்கின்றது. அதேவேளையில், இருக்கைக்கு அடியில் பெரிய அளவில் ஸ்டோரேஜ் வசதி வழங்கப்படவில்லை. இது சற்றே கவலையளிக்கும் தகவல் ஆகும்.

Numeros motors diplos max review video in tamil

3.7 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த பேட்டரி பேக்கை பாதுகாப்பாக கழட்டுவதற்காக கில் சுவிட்ச் வழங்கப்பட்டு இருக்கின்றது. எலெக்ட்ரிக் மோட்டாரை பொருத்த வரை 3.58 பிஎச்பி (2.67 kW) மற்றும் 138 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்ட ஹப் வகை மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 9, 2025, 10:45 [IST]
English summary
Numeros motors diplos max electric scooter review video in tamil
மேலும்... #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+