சென்னை மக்களுக்கு குடுத்து வெச்சது அவ்வளவுதான்! ரூ.1.12 லட்சத்தில் எப்படி இவங்களால் ஸ்கூட்டர் கொடுக்க முடியுது

நியூமரோஸ் மோட்டார்ஸ் (Numeros Motors), எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பாகங்களை உற்பத்தி செய்வதில் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனம். இந்த நிறுவனத்தில் இருந்து புதியதாக 'டிப்ளோஸ் மேக்ஸ்' (Diplos Max) என்கிற பெயரில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதில் ஒரு சிறிய பிரச்சனை உள்ளது. அப்படி என்ன மாதிரியான பிரச்சனை அது என்பதையும், புதிய நியூமரோஸ் டிப்ளோஸ் மேக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கும் கஸ்டமர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக கடந்த சில வருடங்களில் பல்வேறு நிறுவனங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் இறங்கியுள்ளன. அத்தகைய இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுள் ஒன்றுதான், நியூமரோஸ் மோட்டார்ஸ் ஆகும்.

numeros motors launches diplos max

தற்சமயம் 14 நகரங்களில் மட்டுமே செயல்படும் சிறிய இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமாக விளங்கினாலும், அடுத்த 2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் குறைந்தது 170 டீலர்ஷிப் ஷோரூம்களை நாடு முழுவதும் கொண்டிருக்க வேண்டும் என்கிற இலக்குடன் நியூமரோஸ் மோட்டார்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில்தான், டிப்ளோஸ் மேக்ஸ் என்கிற புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை நியூமரோஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது பல்வேறு விதமான பயன்பாடுகளுக்கு பயன்படுத்தக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். அதாவது, சொந்த பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, டெலிவிரி சர்வீஸ் போன்ற கமர்ஷியல் பயன்பாடுகளுக்கும் டிப்ளோ மேக்ஸ் ஸ்கூட்டரை பயன்படுத்த முடியும்.

இதற்கேற்ப இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிக சுமைகளை எடுத்துக் கொண்டு, போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் ஓட்டுவதற்கு ஏற்ப ஒல்லியான உடலமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஸ்கூட்டரின் முன்பகுதி ஆனது பைக்குகளை போன்று ஸ்லிம்மாக உள்ளதை காணலாம். ஆதலால், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை கண்ட்ரோல் செய்வதும், ஹேண்ட்லிங் செய்வதும் எளியதாக இருக்கும்.

தனிநபர் பயன்பாட்டிற்கான எலக்ட்ரிக் ஸ்கூட்டரை நியூமரோஸ் நிறுவனம் அறிமுகம் செய்வது இதுவே முதல்முறை ஆகும். டபுள்-டிஸ்க் பிரேக்ஸ், அதி-செயல்திறன்மிக்க எல்இடி விளக்குகள் மற்றும் வாகன திருடுப்போவதை எச்சரிக்கும் வசதி, ஜியோஃபென்சிங் & ஸ்கூட்டர் இருக்கும் இடத்தை கண்டறியும் வசதி போன்ற அட்வான்ஸான ஸ்மார்ட் வசதிகளை டிப்ளோஸ் மேக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டுள்ளது.

ஏற்கனவே கூறியதுபோல், புதிய டிப்ளோஸ் மேக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதில் ஒரு சிறிய பிரச்சனை உள்ளது. அது என்னவென்றால், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போதைக்கு ஐதாராபாத்தில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐதாராபாத்தில் இந்த இ-ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 199 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதுவரையில் கமர்ஷியல் பயன்பாட்டிற்கான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே உற்பத்தி செய்துவந்த நியூமரோஸ் மோட்டார்ஸ் நிறுவனம், முதல்முறையாக தனிநபர் பயன்பாட்டிற்கான எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. ஐதாராபாத்தை தொடர்ந்து புதிய டிப்ளோஸ் மேக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் நம் சென்னையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என நம்புவோம்.

More from DriveSpark

Article Published On: Friday, February 28, 2025, 23:21 [IST]
English summary
Numeros motors launches diplos max electric scooter in hyderabad
மேலும்... #electric scooter #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+