சிங்கிள்-சார்ஜில் 156கிமீ பயணிக்கலாமா... இ-ஸ்கூட்டரின் விலையை பார்த்த உடனே எல்லாரும் புக்கிங்கை போட போறாங்க!
நியூமரோஸ் மோட்டார்ஸ் (Numeros Motors), இந்தியாவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம். எலக்ட்ரிக் வாகனங்களை மட்டுமின்றி, எலக்ட்ரிக் வாகனங்களுக்கான உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாகவும் நியூமரோஸ் மோட்டார்ஸ் விளங்குகிறது. இந்த நிலையில், இந்த நிறுவனத்தில் இருந்து புதியதாக ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
'டிப்ளோஸ் மேக்ஸ்+' (Diplos Max+) என்கிற பெயரில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை நியூமரோஸ் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது முன்பு விற்பனையில் இருந்த டிப்ளோஸ் மேக்ஸ் ஸ்கூட்டரின் அப்கிரேட் வெர்சன் ஆகும். அதாவது, தோற்றத்திலும் சரி, தொழிற்நுட்ப வசதிகளிலும் சரி பழைய டிப்ளோஸ் மேக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை காட்டிலும் புதிய மாடல் மேம்படுத்தப்பட்டதாக உள்ளது.

நியூமரோஸ் நிறுவனம் உருவாக்கியதிலேயே விலையுயர்ந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உருவாக்கும் பிளாட்ஃபாரமான டிப்ளோஸில் புதிய டிப்ளோஸ் மேக்ஸ்+ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய டிப்ளோஸ் மேக்ஸ் ஸ்கூட்டரில் கொண்டுவரப்பட்டுள்ள முக்கியமான அப்கிரேட் என்று பார்த்தால், அது ட்யூயல் லிக்யுடு இம்மெர்ஷன் கூலிங் பேட்டரி பேக் ஆகும்.
4kWh திறனில் இந்த பேட்டரி பேக் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஸ்கூட்டரின் பிக்-அப் மேம்பட்டு இருப்பதுடன், ஸ்கூட்டரின் ரேஞ்சும் 156கிமீ ஆக அதிகரித்துள்ளது. அதாவது, பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 156கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். மேலும், பேட்டரியின் உதவியுடன் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அதிகப்பட்சமாக மணிக்கு 70கிமீ வேகத்தில் பயணிக்கலாம்.

பிளேஸ் சிவப்பு, பியானோ கருப்பு மற்றும் வோல்ட் நீலம் என மூன்று விதமான கலர் ஆப்ஷன்களில் நியூமரோஸ் மோட்டார்ஸின் புதிய டிப்ளோஸ் மேக்ஸ்+ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கும். இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பெங்களூரு எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆனது ரூ.1,14,999 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
புதிய டிப்ளோஸ் மேக்ஸ்+ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமின்றி, நியூமரோஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அனைத்து டிப்ளோஸ் மேக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் அவற்றின் நம்பகத்தன்மை மற்றும் நீடித்து உழைக்கும் தன்மையின் மூலமாக இந்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிப்பில் புதிய டிரெண்டை செட் செய்துள்ளன. இதன் மூலமாக, எந்தவொரு பாதையிலும் இயங்கக் கூடியவைகளாக டிப்ளோஸ் மேக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விளங்குகின்றன.

இதனை வெளிக்காட்டும் வகையில், இந்தியா முழுவதும் சுமார் 1.4கிமீ தொலைவிற்கு பல டிப்ளோஸ் மேக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் நியூமரோஸ் மோட்டார்ஸ் நிறுவனம் சோதனை ஓட்டங்களை நிகழ்த்தி காட்டியுள்ளது. இத்தகைய டிப்ளோஸ் மேக்ஸ் ஸ்கூட்டர்கள் வரிசையில் புதியதாக இணைந்துள்ள டிப்ளோஸ் மேக்ஸ்+ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
இவை மட்டுமின்றி, ஸ்கூட்டரை யாரேனும் திருட முயற்சித்தால் அதுகுறித்து எச்சரிக்கும் வசதி, ஜியோஃபென்சிங் (Geofencing) மற்றும் வாகனத்தை மொபைல் போன் மூலமாக கண்காணிக்கும் வசதி உள்ளிட்ட அட்வான்ஸ்டு பாதுகாப்பு வசதிகளையும் புதிய டிப்ளோஸ் மேக்ஸ்+ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பெறலாம். இவற்றுடன், அதி-செயல்திறன்மிக்க எல்இடி விளக்குகளும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம் பெற்றுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2019இல் பெங்களூருவில் நிறுவப்பட்ட நியூமரோஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தற்சமயம் 14 நகரங்களில் ஷோரூம்களை கொண்டுள்ளது. அதில் ஒன்று, நம் சென்னையிலும் உள்ளது. ஆகையால், புதிய டிப்ளோஸ் மேக்ஸ்+ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க அருகில் ஏதேனும் நியூமரோஸ் டீலர்ஷிப் ஷோரூம் உள்ளதா என ஆராய்ந்து பார்க்கலாம். வருகிற 2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் குறைந்தது 50 நகரங்களில் 100 ஷோரூம்களை ஆவது கொண்டிருக்க வேண்டும் என்கிற இலட்சியத்துடன் நியூமரோஸ் மோட்டார்ஸ் உள்ளதால், இந்த நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தைரியமாக வாங்கலாம்.


Click it and Unblock the Notifications









