ஒருமுறை சார்ஜ் பண்ணிட்டா 109கிமீ-க்கு கவலையே வேண்டாம்! ரூ.499 இருந்தால் போதும் ஒன்றை சொந்தமாக்கிடலாம்!

இந்திய சந்தையில் நியூமரஸ் (Numeros) நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) ஆக 'என்-ஃபர்ஸ்ட்' (n-First)-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. முதல் 1,000 வாடிக்கையாளர்களுக்கு ரூ.64,999 (எக்ஸ்-ஷோரூம்) என்கிற அறிமுக விலையில் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்கூட்டருக்கான முன்பதிவுத் தொகை ரூ.499 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய என்-ஃபர்ஸ்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்-மேக்ஸ் (n-max), ஐ-மேக்ஸ் (i-max) மற்றும் ஐ-மேக்ஸ்+ (i-max+) என மூன்று வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் தனித்துவமான அம்சங்களையும், மாறுபட்ட ரேஞ்சையும் வழங்குகின்றன. இந்த புதிய ஸ்கூட்டரின் டெலிவரி (Delivery) 2026 ஜனவரி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

numeros n-first electric scooter launch

தோற்றத்தைப் பொறுத்தவரை, நியூமரஸ் என்-ஃபர்ஸ்ட் வழக்கமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் இருந்து வேறுபட்டு, ஒரு தனித்துவமான மற்றும் புதுமையான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக, ஓட்டுனர் கால் வைக்கும் ஸ்கூட்டரின் ஃபுட்போர்டு பகுதி சிறியதாக இருப்பதுடன், இருக்கைக்கு அடியில் உள்ள சேமிப்பு வசதி அதிகப் பயனுள்ளதாக இல்லை. ஓட்டுநரின் இருக்கைக்குக் கீழ் சார்ஜிங் கேபிளை வைக்க சிறிய பை உள்ளது.

பின் இருக்கைக்கு அடியில் பர்ஸ், போன் போன்ற சிறிய பொருட்களை வைக்க போதுமான இடமும், ஃபுட்போர்டில் ஒரு கூடுதல் ஸ்டோரேஜ் இடமும் உள்ளது. இந்த ஸ்கூட்டரின் அனைத்து மூன்று வேரியண்ட்களும் டிராஃபிக் ரெட் மற்றும் பியூர் ஒயிட் ஆகிய இரண்டு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கின்றன. இந்த மின்சார ஸ்கூட்டரின் மத்தியில் சங்கிலி மூலம் இயக்கப்படும், நிரந்தர காந்த மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

numeros n-first electric scooter launch

இந்த எலெக்ட்ரிக் மோட்டார் என்-ஃபர்ஸ்ட் ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட்டில் 2.5kW சக்தியையும், அடிப்படை மற்றும் மிட்-ஸ்பெக் வேரியண்ட்களில் 1.8kW சக்தியையும் வழங்குகிறது. உச்சபட்ச டார்க் திறனும், சாய்வு நிலைகளில் ஏறும் திறனும் இந்த ஸ்கூட்டரின் அனைத்து வேரியண்ட்களிலும் 34Nm மற்றும் 10 டிகிரி என ஒரே மாதிரியாக உள்ளன. புதிய என்-ஃபர்ஸ்ட் ஸ்கூட்டரின் ஐ-மேக்ஸ்+ வேரியண்ட்டின் உச்சப்பட்ச வேகம் 70kmph ஆகும்.

மற்ற இரு வேரியண்ட்களும் அதிகப்பட்சமாக 55kmph வரை செல்லும். இந்த இரு வேரியண்ட்களில் ஈக்கோ மற்றும் நார்மல் என இரண்டு டிரைவிங் மோட்கள் உள்ளன. அதுவே, ஐ-மேக்ஸ்+ வேரியண்ட்டில் கூடுதலாக ஸ்போர்ட் மோடும் கிடைக்கும். அடிப்படை என்-மேக்ஸ் மற்றும் மிட்-ஸ்பெக் ஐ-மேக்ஸ் வேரியண்ட்களில் 2.5kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கும்.

numeros n-first electric scooter launch

இது 91km ரேஞ்சை வழங்குகிறது. அதாவது, பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பி அதிகப்பட்சமாக 91கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். அதேநேரம், டாப்-ஸ்பெக் ஐ-மேக்ஸ்+ வேரியண்ட்டில் பெரிய அளவிலான 3kWh பேட்டரி கிடைக்கும். இது 109km ரேஞ்சை வழங்கக்கூடியது என அறிவிக்கப்பட்டுள்ளது. 480 வாட்ஸ் சார்ஜர் உடன் இந்த புதிய நியூமரஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கும்.

டாப் வேரியண்ட்டை முழுமையாக (0-100%) சார்ஜ் செய்ய 7-8 மணிநேரமும், மற்ற இரண்டிற்கும் 5-6 மணிநேரமும் தேவைப்படும். அனைத்து வேரியண்ட்களிலும் ஐபி67 தரநிலை கொண்ட லித்தியம்-இரும்பு பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இவற்றை தாண்டி, புதிய நியூமரஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சம் அதன் பெரிய 16-இன்ச் சக்கரங்கள் ஆகும். இவற்றில் யூரோகிரிப் ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

numeros n-first electric scooter launch

சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய இரட்டை ஷாக் அப்சார்பர்களும் வழங்கப்பட்டுள்ளன. இரண்டு சக்கரங்களிலும் ட்ரம் பிரேக்குகள் மற்றும் ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டம் (CBS) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் என்-மேக்ஸ் மற்றும் ஐ-மேக்ஸ் வேரியண்ட்களின் எடை 112 கிலோ மற்றும் ஐ-மேக்ஸ்+ வேரியண்ட்டின் எடை 117 கிலோ ஆகும். அனைத்து வேரியண்ட்களும் 159மிமீ-இல் நல்ல கிரவுண்ட் கிளியரன்ஸைக் கொண்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய நியூமரஸ் என்-ஃபர்ஸ்ட் ஸ்கூட்டர் அதன் குறைவான எடையிலும், போதுமான கிரவுண்ட் கிளியரென்ஸினாலும் எந்தவொரு பாதைக்கும் கொண்டு செல்லக்கூடியதாக உள்ளது. அதேபோல், ஸ்கூட்டரின் பெரிய சக்கரங்கள் மோசமான சாலைகளிலும் சிறந்த நிலைத்தன்மையையும், சௌகரியத்தையும் வழங்கும் என எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சிறிய ஃபுட்போர்டு மற்றும் அண்டர்-சீட் ஸ்டோரேஜ் பகுதி சிலருக்கு குறையாக தெரியலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 6, 2025, 18:10 [IST]
English summary
Numeros motors launches new n first electric scooter line up check price features all details
மேலும்... #electric scooter #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X