இது ஸ்கூட்டரா இல்ல பைக்கா..! ரெண்டு மாதிரியுமே தெரியுது.. இவ்ளோ கம்மி விலைக்கு விற்பனைக்கு வந்திருக்கா!
நியூமரஸ் மோட்டார்ஸ் (Numeros Motors) அதன் டிப்ளோஸ் மேக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Diplos Max) மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. யாரும் எதிர்பார்த்திராத குறைவான விலையிலேயே இந்த இ-ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றனர். ரூ. 86,999 என்கிற விலையே அதற்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. பிரதமரின் 'இ-டிரைவ் ஸ்கீம்' திட்டத்தின்கீழ் கிடைக்கக் கூடிய விலையே இதுவாகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவின் முதல் கிராஸோவர் ரக பைக்-ஸ்கூட்டர் மாடல் இதுவாகும்.
தலைநகர் டெல்லியில் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025) நடைபெற்று வருகின்றது. இங்கு வைத்தே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நியூமரஸ் மோட்டார்ஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதன் வாயிலாக அதிகப்படியான பார்வையாளர்களையும், மின்சார இரண்டு சக்கர வாகன காதலர்களையும் ஒரே நேரத்தில் இந்த நிறுவனம் கவர்ந்திருக்கின்றது.

அதாவது, பைக் மற்றும் ஸ்கூட்டர் இரண்டின் கலவையாகவும் காட்சியளிக்கக் கூடிய ஓர் ஸ்கூட்டர் மாடலே இதுவாகும். தோற்றத்தில் மட்டுமல்ல பயன்பாட்டிலும் தனித்துவமான ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலே இதுவாகும். எந்த மாதிரியான சாலையாக இருந்தாலும் இது சமாளித்துவிடும். சமீபத்தில், நாங்கள் ரைடு ரிவியூ செய்து பார்த்தோம்.
அப்போது, பாறைகள் நிறைந்த சாலையைகூட அது அசால்டாக கடந்து எங்களை ஆச்சரியப்படுத்தியது. இத்தகைய இ-ஸ்கூட்டரையே ரூ. 87 ஆயிரத்திற்கு விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றனர். இதை முழுமையாக சார்ஜ் செய்ய வெறும் 3-4 மணி நேரங்களே போதுமானது. இவ்வளவு நேரம் செலவிட்டு முழுமையாக சார்ஜ் செய்தால் 140 கிமீ தூரம் வரை இதில் பயணிக்க முடியும்.
இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 63 கிமீ ஆகும். இதில் பாதுகாப்பான பயணத்தை வழங்குவதற்காக இரண்டு டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. உயர் செயல்திறன் கொண்ட எல்இடி லைட், திருட்டை தவிர்க்கும் தொழில்நுட்பம், ஜியோ ஃபென்சிங் மற்றும் வாகனத்தை டிராக் செய்யும் வசதி உள்ளிட்டவற்றையும் இதில் நியூமரஸ் மோட்டார்ஸ் வழங்கி இருக்கின்றது.
இதுதவிர, உறுதியான சேஸிஸைக் கொண்டே இந்த ஸ்கூட்டரை நிறுவனம் கட்டி இருக்கின்றது. தொடர்ந்து, நீண்ட நாள் உழைக்கும் திறன் பேட்டரி மற்றும் மோட்டார் ஆகியவற்றையே இந்த ஸ்கூட்டரில் வழங்கி இருக்கின்றனர். இத்துடனேயே முற்றிலும் மாறுபட்ட லுக் இந்த ஸ்கூட்டருக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.
வட்ட வடிவ ஹெட்லைட், சிறிய துண்டு போன்ற எல்இடி டிஆர்எல், இரட்டை துண்டு அமைப்புடைய இருக்கை, ஸ்வாப்பபிள் பேட்டரி பேக் ஆகியவற்றையே டிப்ளோஸ் மேக்ஸ்-இல் வழங்கி இருக்கின்றனர். எனவே இதற்கு வித்தியாசன உருவ அமைப்பை விரும்பும் இரண்டு சக்கர வாகன காதலர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, இப்போது பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சூப்பரான டிமாண்ட் கிடைக்கத் தொடங்கி உள்ளது. இந்த மாதிரியான சூழலிலேயே தனித்துவமான தோற்றம் கொண்ட நியூமரஸ் டிப்ளோஸ் மேக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








