பைக்கின் விலையே ரூ.1 லட்சம் தான், இதில் 35 ஆயிரம் ரூபாயை குறைச்சிட்டா... பெட்ரோல் பைக்குகளை வாங்கியது போதும்!
இந்தியாவின் முன்னணி மின்சார மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளரான ஓபன் எலெக்ட்ரிக் (Oben Electric) அதன் பிரத்யேக ரோர் இ.இசட் (Rorr EZ) மற்றும் ரோர் இ.இசட் சிக்மா (Rorr EZ Sigma) எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களுக்கான 'மெகா ஃபெஸ்டிவ் உத்சவ்' (Mega Festive Utsav) என்ற சிறப்பு சலுகைத் திட்டத்தை அறிவித்துள்ளது.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, நகர்ப்புறப் பயணிகளுக்கு உயர் ரக எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு ஒபென் எலெக்ட்ரிக் நிறுவனத்தால் கொண்டுவரப்பட்டுள்ள இந்த திட்டம் ஆனது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ஒபென் டீலர்ஷிப் ஷோரூம்களிலும் (Dealership Showrooms) கிடைக்கும்.

இத்திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு ரூ.35,000 வரையிலான சலுகைகள் கிடைக்கின்றன. இந்த சிறப்பு சலுகைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ரோர் இ.இசட் அல்லது ரோர் இ.இசட் சிக்மா எலெக்ட்ரிக் பைக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, விலையில் ரூ.20,000 குறைப்பு மற்றும் ரூ.10,000 வரை கூடுதல் பணம் தள்ளுபடி (Cashback) வழங்கப்பட உள்ளன.
மேலும், ஒபென் ரோர் இ.இசட் பைக்கை வாங்கும் ஒவ்வொரு அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் உறுதி செய்யப்பட்ட தங்க நாணயமும் வழங்கப்படும். இதுமட்டுமின்றி, ஒரு அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர் ஐபோன் வெல்லும் வாய்ப்பையும் பெறலாம். ஓபன் எலெக்ட்ரிக் நிறுவனர் மற்றும் சிஇஓ மதுமிதா அகர்வால் இது குறித்துக் கூறுகையில், "எங்கள் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை அனுபவிக்க, இந்த மெகா பண்டிகை கால சலுகை வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பையும் எளிமையையும் வழங்குகிறது.

ரோர் இ.இசட் பைக்குகள் ஆனது, நகர்ப்புறப் பயணத்திற்கு ஏற்ற செயல்திறன், நம்பகத்தன்மை மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தை வழங்குகிறது. இத்திட்டம் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை மேலும் அணுகக் கூடியதாக்குவதன் மூலம், எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் எங்கள் தொலைநோக்கு பார்வையை வலுப்படுத்துகிறது" என்றார்.
ரோர் இ.இசட் எலெக்ட்ரிக் பைக்குகளில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோர் இ.இசட் சிக்மா பைக் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வருகிறது. இதில் பொருத்தப்படும் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 175கிமீ வரையில் பயணிக்க முடியும். இந்த எலெக்ட்ரிக் பைக்கின் அதிகப்பட்ச வேகம் மணிக்கு 95கிமீ ஆகும்.
3.3 வினாடிகளில் மணிக்கு 0- 40 கிமீ வேகத்தை எட்டிவிடக்கூடிய ரோர் இ.இசட் எலெக்ட்ரிக் பைக்கில் ஈக்கோ, சிட்டி & ஹவோக் (Eco, City, Havoc) என 3 ரைடிங் மோட்கள் (Riding Modes), ரிவர்ஸில் இயங்கும் வசதி மற்றும் 5 அங்குல TFT வண்ணத் திரை ஆகியவை வழங்கப்படுகின்றன.

ஒட்டுமொத்தமாக ரோர் இ.இசட் எலெக்ட்ரிக் பைக்குகள் மூன்று பேட்டரி தேர்வுகளுடன் (2.6 kWh, 3.4 kWh, 4.4 kWh) எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை அன்றாட நடைமுறை வாழ்க்கைக்கும் பயன்படுத்தலாம் என்பதற்கு உதாரணங்களாக இருக்கின்றன. இது வாடிக்கையாளர்களின் தினசரி பயணத் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு வசதிகளையும் செயல்திறனையும் வழங்குகிறது.
ரோர் இ.இசட் எலெக்ட்ரிக் பைக்குகளின் விலைகள் ரூ.99,999 (எக்ஸ்-ஷோரூம்)-இல் தொடங்குகின்றன. பைக்கை வாங்க வாடிக்கையாளர்கள் தங்கள் அருகிலுள்ள ஷோரூம்களுக்குச் செல்லலாம் அல்லது அமேசான் (Amazon) வழியாகவும் ஆர்டர் செய்யலாம். ஓபன் எலெக்ட்ரிக், பெங்களூரு, டெல்லி, புனே, கொச்சி, ஜெய்ப்பூர், அமிர்தசரஸ், ஹைதராபாத், லக்னோ உள்ளிட்ட நகரங்களில் 50க்கும் மேற்பட்ட ஷோரூம்களைக் கொண்டுள்ளது.
இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 50க்கும் மேற்பட்ட நகரங்களில் 150க்கும் மேற்பட்ட ஷோரூம்களை கொண்டிருக்க வேண்டும் என்பதை ஒபென் எலெக்ட்ரிக் இலக்காக கொண்டுள்ளது. இது நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அணுகலை உறுதி செய்கிறது. 2020 ஆகஸ்ட் மாதத்தில் நிறுவப்பட்ட ஒபென் எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு பெங்களூருவில் 3.5 ஏக்கர் பரப்பளவில் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிறந்த பண்டிகை சலுகைகள், உறுதி செய்யப்பட்ட வெகுமதிகள் மற்றும் இந்தியப் பயணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட அதிநவீன மோட்டார்சைக்கிள்களுடன், இந்த பண்டிகைக் காலத்தை ரோர் இ.இசட் மற்றும் ரோர் இ.இசட் சிக்மா எலெக்ட்ரிக் பைக்குகள் மூலம் சிறப்பாகக் கொண்டாட ஓபன் எலெக்ட்ரிக் நிறுவனம் வாடிக்கையாளர்களை அழைக்கிறது.


Click it and Unblock the Notifications









