ஓலா எல்லாம் இந்த கம்பெனி கிட்ட இருந்து கத்துக்கணும்! எலக்ட்ரிக் பைக்கை சிலை மாதிரி செதுக்கி வெச்சி இருக்காங்க!
ஒபென் எலக்ட்ரிக் (Oben Electric) நிறுவனத்தில் இருந்து ஏற்கனவே அறிவிக்கப்படி, ரோர் இ.இசட் சிக்மா (Rorr EZ Sigma) என்கிற பெயரில் எலக்ட்ரிக் பைக் (Electric Car) இன்று (ஆகஸ்ட் 5) அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அசத்தலான தோற்றத்தில் மார்க்கெட்டிற்கு வந்துள்ள இந்த புதிய எலக்ட்ரிக் பைக்கை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
இந்தியாவில் எலக்ட்ரிக் பைக்குகளுக்கு தொடர்ந்து மெல்ல மெல்ல வரவேற்பும், தேவையும் அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து எலக்ட்ரிக் பைக்குகளை உருவாக்கி விற்பனைக்கு கொண்டுவரும் பணியில் கடந்த சில வருடங்களில் பல இவி ஸ்டார்ட்-அப் (EV Start-up) நிறுவனங்கள் இறங்கி உள்ளன. குறிப்பாக, பெங்களூருவை சேர்ந்த நிறுவனங்கள் அதிகமாக எலக்ட்ரிக் பைக்குகளை விற்பனை செய்வதில் இறங்குவதை பார்க்க முடிகிறது.

அல்ட்ராவொய்லெட் (Ultraviolette), ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) உள்ளிட்ட நிறுவனங்களை எல்லாம் இதற்கு உதாரணமாக சொல்லலாம். அந்த வகையில், பெங்களூருவை சேர்ந்த மற்றொரு எலக்ட்ரிக் பைக் நிறுவனமான ஒபென் எலக்ட்ரிக் அதன் மார்க்கெட்டை புதிய ரோர் இ.இசட் சிக்மா எலக்ட்ரிக் பைக் மூலம் விரிவுப்படுத்திக் கொண்டுள்ளது.
ஒபென் ரோர் ஆனது இந்தியாவில் முதல்முறையாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மிகவும் சில எலக்ட்ரிக் பைக்குகளுள் ஒன்றாகும். இதனாலேயே ரோர் எலக்ட்ரிக் பைக்கில் அவ்வப்போது புது, புது வேரியண்ட்களை கொண்டுவருவதை ஒபென் எலக்ட்ரிக் நிறுவனம் வாடிக்கையாக கொண்டுள்ளது. அந்த வகையில் அடுத்ததாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள ரோர் எலக்ட்ரிக் பைக் தான், ரோர் இ.இசட் சிக்மா எலக்ட்ரிக் பைக் ஆகும்.

3.4kWh அல்லது 4.4kWh திறன் கொண்ட பேட்டரி உடன் இந்த பைக்கை வாங்கலாம். இதில், 3.4kWh பேட்டரி உடன் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ரூ.1.27 லட்சம் மற்றும் 4.4kWh பேட்டரி உடன் ரூ.1.37 லட்சம் ஆகும். இது பைக்கிற்கான குறுகிய கால அறிமுக சலுகை விலை என ஒபென் எலக்ட்ரிக் நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது, இன்னும் சில வாரங்களில் இந்த விலைகள் ரூ.1.47 லட்சம் மற்றும் ரூ.1.55 லட்சம் என அதிகரிக்கப்பட உள்ளன.
புதிய ரோர் இ.இசட் சிக்மா பைக்கிற்கான முன்பதிவுகள் இப்போதில் இருந்தே துவங்கப்பட்டு விட்டது. டெலிவிரிகள் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதியில் இருந்து துவங்கப்பட உள்ளதாக ஒபென் எலக்ட்ரிக் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு முன் விற்பனையில் இருந்த முந்தைய ரோர் இ.இசட் எலக்ட்ரிக் பைக் உடன் ஒப்பிடுகையில், புதிய ரோர் இ.இசட் சிக்மா எலக்ட்ரிக் பைக் சில அப்கிரேட்களை கொண்டதாக உருவாக்கப்பட்டு உள்ளது.

அந்த அப்கிரேட்களுள் முக்கியமானது, பின்னோக்கி ரிவர்ஸில் இயங்கும் வசதி ஆகும். இதனுடன், பயணத்திற்கான வழிக்காட்டும் வசதி உடன் 5-இன்ச் டிஎஃப்டி வண்ண டிஸ்பிளேவும் புதியதாக ரோர் இ.இசட் சிக்மா எலக்ட்ரிக் பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. இந்த டிஎஃப்டி திரை ஆனது மொபைல் போனுக்கு வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் குறித்து எச்சரிக்கைகளை விடுவதுடன், பாடல்களையும் கண்ட்ரோல் செய்யக்கூடியவை வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், ரோர் இ.இசட் பைக்கின் வழக்கமான கலர் ஆப்ஷன்களுடன் புதியதாக எலக்ட்ரிக் சிவப்பு என்கிற கலர் ஆப்ஷனும் புதிய ரோர் இ.இசட் சிக்மா எலக்ட்ரிக் பைக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. பேட்டரி வேறுப்பட்டாலும், ரோர் இ.இசட் சிக்மா பைக்கின் இரு வேரியண்ட்களிலும் அதிகப்பட்சமாக மணிக்கு 95கிமீ வேகம் வரையில் செல்லலாம். மேலும், 0-இல் இருந்து இந்த எலக்ட்ரிக் பைக்கில் 40km/h வேகத்தை வெறும் 3.3 வினாடிகளில் எட்டிவிட முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மார்க்கெட்டில் வருடக்கணக்கில் விற்பனையில் இருப்பதினாலேயே ஒபென் ரோர் எலக்ட்ரிக் பைக்குகள் மக்கள் மத்தியில் ஓரளவிற்கு கவனத்தை ஈர்த்துள்ளன. அப்படியிருக்க, தற்போது புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரோர் இ.இசட் சிக்மா வேரியண்ட் இன்னும் அதிக கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கிறோம். ஏனெனில், அந்த அளவிற்கு அசத்தலான தோற்றத்தை இ.இசட் சிக்மா பைக் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications









