8 ஆண்டு அல்லது 80,000கிமீ வாரண்டி குறைவான கட்டணத்தில் கிடைக்கும்.. பழைய கஸ்டமர்களாலும் இதை வாங்கிக்க முடியும்!

முன்னணி வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று தன்னுடைய தயாரிப்பின் பக்கம் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு 8 ஆண்டுகள் அல்லது 80 ஆயிரம் கிமீ வாரண்டி திட்டத்தை குறைவான கட்டணத்தில் வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது. ஓபென் எலெக்ட்ரிக் (Oben Electric), இதுவே அத்திட்டத்தை அறிவித்திருக்கும் பிராண்டு ஆகும். மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தியை மட்டுமே முக்கிய தயாரிப்பாகக் கொண்டு நாட்டில் இயங்கி வரும் ஓர் நிறுவனமே ஓபென் எலெக்ட்ரிக்.

இந்த நீண்ட கால வாரண்டி திட்டத்தை தன்னுடைய பழைய கஸ்டமர்களாலும் வாங்கிக் கொள்ள முடியும் என நிருவனம் தெரிவித்து இருக்கின்றது. இந்த நீண்ட கால வாரண்டி திட்டமானது நிறுவனத்தின் சொந்த தயாரிப்பான எல்எஃப்பி (Lithium Iron Phosphate) வகை பேட்டரி பேக்கிற்கானது ஆகும்.

Oben electric launches innovative battery warranty plan

இந்த பேட்டரி பேக்கையே அது தன்னுடைய ரோர் இஇசட் (Rorr EZ) இ-பைக் மாடலில் பயன்படுத்தி வருகின்றது. இந்த பைக்கை புதிதாக வாங்கும் அல்லது ஏற்கனவே பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களாலேயே நிறுவனம் அறிவித்து இருக்கும் பேட்டரி பேக் பாதுகாப்பு பிளானை வாங்கிக் கொள்ள முடியும்.

இந்தி பிளானிற்கு கட்டணமாக ரூ. 9,999 நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த குறைவான கட்டணத்திலேயே வருகின்ற மே மாதம் 1ஆம் தேதி முதல் இந்த திட்டத்தை வாடிக்கையாளர்களால் வாங்கிக் கொள்ள முடியும். புரொடக்ட் 8/80 (Protect 8/80) என்கிற பெயரிலேயே இந்த திட்டத்தை ஓபென் எலெக்ட்ரிக் நாட்டில் அறிமுகப்படுத்தி இருக்கின்றது.

Oben battery warranty plan

தினசரி பயன்பாட்டிற்கு உகந்த ஓர் இ-பைக்கே ஓபென் ரோர் ஆகும். இந்தியாவில் விற்பனையில் இருக்கும் ஹீரோ ஸ்பிளெண்டர், பஜாஜ் பிளாட்டினா போன்ற ஐசிஇ கம்யூட்டர் பைக்குகளுக்கு போட்டி அளிக்கும் நோக்கில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட மின்சார பைக்கே இதுவாகும். இந்தியாவில் இந்த வாகனம் ரூ. 74,999 என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த பைக்கில் மூன்று விதமான பேட்டரி பேக் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. 2.6 kWh, 3.4 kWh மற்றும் 4.4 kWh ஆகியவையே அவை ஆகும். இந்த பேட்டரி பேக்குகளுக்கே தற்போது 8 ஆண்டுகள் அல்லது 80 ஆயிரம் கிமீ வாரண்டியை ரூ. 9,999 கட்டணத்தில் வழங்க இருப்பதாக நிறுவனம் அறிவித்து இருக்கின்றது.

Oben rorr ez electric bike

இந்த பேட்டரி பேக்குகளின் மீது இருக்கும் அதீத நம்பிக்கையின் காரணத்தினாலேயே இத்தகை நீண்ட கால வாரண்டி திட்டத்தை குறைவான கட்டணத்தில் வழங்க ஓபென் எலெக்ட்ரிக் முன் வந்திருக்கின்றது. இந்த பேட்டரி பேக்குகள் 50 சதவீதம் வரை கூடுதலாக உயர் வெப்ப நிலையை சமாளிக்கும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது.

ஆகையால், இதில் தீ விபத்து ஏற்படும் என்கிற பேச்சுக்கே இடம் இருக்காது என்பது கவனிக்கத்தகுந்தது. இதுமட்டுமல்ல இந்த பேட்டரி பேக்குகள் அதிக வேகத்தில் சார்ஜாகும் திறன் கொண்டவையாகவும் காட்சியளிக்கின்றன. குறிப்பாக, ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும்பட்சத்தில் வெறும் 45 நிமிடங்களிலேயே பூஜ்ஜியம் சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜை ஏற்றிக் கொள்ள முடியும்.

ரேஞ்சைப் பொருத்த வரை முதல் இடத்தில் இருக்கும் சிறிய பேட்டரி பேக் ஆப்ஷனான 2.6 kWh, ஓர் முழு சார்ஜில் 110 கிமீ ரேஞ்சை தரும். இதற்கு அடுத்தபடியான இடத்தில் இருக்கும் 3.4 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் 150 கிமீ ரேஞ்சை தரும்.

இவை அனைத்தாக் காட்டிலும் அதிக ரேஞ்சைத் தரக் கூடியதாக 4.4 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் இருக்கின்றது. இது அதிகபட்சமாக ஓர் முழு சார்ஜில் 175 கிமீ ரேஞ்சை தரும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதன் பேட்டரி பேக் மட்டுமல்ல மின்சார மோட்டாரும் அதிக ஆற்றலை உருவாக்கக் கூடியதாகக் காட்சியளிக்கின்றது.

அந்தவகையில், அதிகபட்சமாக மணிக்கு 95 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட இ-மோட்டாரே ஓபென் ரோர் எலெக்ட்ரிக் பைக்கில் வழங்கி இருக்கின்றனர். இதுமட்டுமல்ல வெறும் 3.3 செகண்டுகளிலேயே அது பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தை எட்டிவிடும்.

சிறப்பம்சங்கள் விஷயத்திலும் இந்த எலெக்ட்ரிக் பைக் அசத்தலான டூ-வீலராகக் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், எல்இடி வண்ண திரை, ஜியோ ஃபென்சிங், திருட்டைத் தவிர்க்கும் தொழில்நுட்பம் போன்றவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த வாகனத்திற்கு நிறுவனம் வழக்கமாக 5 ஆண்டுகள் அல்லது 75 ஆயிரம் கிமீ வாரண்டியை வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையிலேயே கூடுதலாக பேட்டரி பேக்கிற்கான வாரண்டி திட்டத்தை கட்டணத்தின்கீழ் நிறுவனம் அறிவித்து இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இது நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சியில் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனத்தின் ரோட்ஸ்டர் (Roadster X) இ-பைக்கிற்கு மிகப் பெரிய சவாலாக ஓபென் ரோர் இஇசட் மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனமும் இந்த பைக்கை மிகவும் குறைவான விலையிலேயே விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. குறிப்பாக, ரோட்ஸ்டர் எக்ஸ், மிக மிகக் குறைவான விலையில், அதிக ஆடம்பர அம்சங்களுடன் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இதன் உற்பத்தி பணிகளைகூட சமீபத்திலேயே ஓலா நிறுவனம் தொடங்கியது.

ஆகையால், இன்னும் வெகு விரைவிலேயே இது அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கிடைக்கத் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரண்டு விதமான ஆப்ஷன்களில் ரோட்ஸ்டர் எக்ஸ் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. மிக முக்கியமாக இதனை ப்ரீ புக்கிங் செய்திருப்பவர்களுக்கு சீக்கிரமே டெலிவரி கொடுக்கவும் நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது.

ரோட்ஸ்டர் எக்ஸ் பைக் மாடலில் 2.5 kWh, 3.5 kWh, 4.5 kWh மற்றும் 9.1 kWh ஆகிய பேட்டரி பேக் ஆப்ஷன்கள் வழங்கப்படும் இருக்கின்றது. மேலும், ரூ. 74,999 என்கிற மிக மிக குறைவான வியைில் இருந்தே இது விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் எலெக்ட்ரிக் பைக் பிரிவில் மிகக் குறைவான ஆப்ஷன்களே கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டே நீண்ட கால வாரண்டி திட்டத்தை தற்போது ஓபென் எலெக்ட்ரிக் நிறுவனம் குறைவான கட்டணத்தில் வழங்க முன் வந்திருக்கின்றது. பழைய கஸ்டமர்களுக்கும் இந்த திட்டத்தை அது வழங்க இருப்பது பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 24, 2025, 15:59 [IST]
English summary
Oben electric unveils indias first affordable battery protection plan for electric motorcycles
மேலும்... #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X