புக் பண்ணிவிட்டால், வீட்டிற்கே ஹோம் டெலிவிரி! ஷோரூமுக்கு போகுறது எல்லாம் அந்த காலம்!

இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் (Electric Motorcycle) உற்பத்தியாளரான ஓபன் எலக்ட்ரிக் (Oben Electric) தனது ரோர் இ.இசட் சிக்மா (Rorr EZ Sigma) மற்றும் ரோர் இ.இசட் (Rorr EZ) எலெக்ட்ரிக் பைக்குகளை ஃபிளிப்கார்ட் (Flipkart) ஆன்லைன் விற்பனை தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு, ஓபன் நிறுவனத்தின் டிஜிட்டல் ரீடெயில் (Retail) விரிவாக்கப் பயணத்தில் ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

நகர்ப்புறப் பயணங்களுக்கான வசதியான, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் விருப்பமான எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கு ஒபன் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை புதிய தேர்வுகளை வழங்கும் விதமாக அமைந்துள்ளது. இதன் மூலமாக ஓபன் எலக்ட்ரிக் தனது தயாரிப்புகளை அதிக வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்ல முடிகிறது.

oben rorr ez sigma now available on flipkart

ஓபன் எலக்ட்ரிக்கின் புதிய மேம்படுத்தப்பட்ட வன்பொருள் மற்றும் மென்பொருளுடன் வரும் ரோர் இஇசட் சிக்மா, பிளிப்கார்ட்டில் ரூ.1.29 லட்சம் என்கிற அறிமுக விலையில் கிடைக்கிறது. இதில் ரூ.17,000 தள்ளுபடியும் அடங்கும். தினசரி பயணங்களுக்கு ஏற்ற ரோர் இஇசட் ரூ.1.19 லட்சம் ஆரம்ப விலையில் ரூ.20,000 சலுகையுடன் வருகிறது.

மேம்பட்ட செயல்பாடு மற்றும் மலிவான விலை ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ரோர் இஇசட் எலெக்ட்ரிக் பைக்குகள் இந்தியாவில் அன்றாட பயன்பாட்டிற்கான பிரீமியம் தரத்திலான எலெக்ட்ரிக் பைக்குகள் பிரிவில் ஓபன் எலக்ட்ரிக்கின் நிலையை உறுதிப்படுத்துகின்றன. மார்க்கெட்டில் சமீபத்தில் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரோர் இஇசட் சிக்மா எலெக்ட்ரிக் பைக் ஆனது பிரபலமான ரோர் இஇசட்-இன் வலிமையான அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டது ஆகும்.

oben rorr ez sigma now available on flipkart

இது 3.4 kWh மற்றும் 4.4 kWh பேட்டரி ஆப்ஷன்கள் உடன் வருகிறது. இது 175கிமீ வரை ரேஞ்ச் வரம்பை வழங்குகிறது. 3.3 வினாடிகளில் 0-40 கிமீ/மணி வேகத்தை எட்டிவிடக் கூடிய இந்த எலெக்ட்ரிக் பைக் அதிகபட்சமாக மணிக்கு 95 கிமீ வேகத்தில் இயங்கக்கூடியது ஆகும். மேலும், ஈக்கோ, சிட்டி மற்றும் ஹவோக் என மூன்று ரைடிங் மோட்கள் (Riding Modes)-ஐ கொண்டுள்ளது.

ஓபன் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற லித்தியம்-இரும்பு-பாஸ்பேட் பேட்டரி தொழில்நுட்பத்தால் இயக்கும் இந்த எலெக்ட்ரிக் பைக் 50% அதிக வெப்ப எதிர்ப்பையும், இரு மடங்கு ஆயுட்காலத்தையும் வழங்குகிறது. இது இந்தியாவின் பல்வேறு காலநிலைகளிலும் பைக்கின் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது. ரோர் இஇசட் சிக்மாவின் முக்கிய அம்சங்களில் எளிதான ரிவர்ஸ் மோட், நாவிகேஷன் மற்றும் நிகழ்நேர எச்சரிக்கைகளுடன் கூடிய 5-இன்ச் வண்ண டிஎஃப்டி டிஸ்ப்ளேவை சொல்லலாம்.

மேலும், சிறந்த சவுகரியத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட இருக்கை மற்றும் புதிய 'எலக்ட்ரிக் ரெட்' வண்ணம் ஆகியவையும் இந்த எலெக்ட்ரிக் பைக்கின் அம்சங்களுள் அடங்கும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வளர்க்க, ஓபன் எலெக்ட்ரிக் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு 8 ஆண்டுகள் அல்லது 80,000கிமீ பேட்டரி உத்தரவாதத்தை முழு மாற்றத்தக்க தன்மையுடன் வழங்குகிறது.

oben rorr ez sigma now available on flipkart

மேலும், 5 வருட டேட்டா இணைப்பு மற்றும் ஓபன் செயலிக்கான வாழ்நாள் அணுகலையும் வழங்குகிறது. தற்சமயம், ​​ஓபன் எலக்ட்ரிக் நிறுவனம் பெங்களூரு, டெல்லி, புனே, ஜெய்ப்பூர், அமிர்தசரஸ், ஹைதராபாத் மற்றும் லக்னோ போன்ற நகரங்களில் இந்தியா முழுவதும் 50க்கும் அதிகமான ஷோரூம்களை கொண்டுள்ளது.

இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 100+ நகரங்களில் 150+ ஷோரூம்களாக இதை விரிவாக்கத் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ஷோரூமிலும் ஓபனின் தனியுரிம தொழில்நுட்பங்களில் பயிற்சி பெற்ற பிளாட்டினம்-சான்றளிக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பிரத்யேக சேவை மையங்கள் உள்ளன. முன்னதாக ஷோரூம்களிலும், அமேசான் ஆன்லைன் தளத்திலும் கிடைத்து வந்த ஓபன் ரோர் இஇசட் எலெக்ட்ரிக் பைக்குகள் இனி ஃபிளிப்கார்ட்டிலும் கிடைக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசானில் ரோர் இஇசட் சிக்மா மற்றும் ரோர் இஇசட் இப்போது கிடைப்பதால், இந்தியாவின் நகர்ப்புறப் பயணத்தை ஓபன் எலெக்ட்ரிக் நிறுவனத்தால் மறுவரையறை செய்வதற்கும், எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை இந்தியா முழுவதும் உள்ள பயணிகளுக்கு விருப்பமான தேர்வாக மாற்றுவதற்கும் தனது இலக்கை எட்ட முடியும் என கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Monday, September 22, 2025, 14:49 [IST]
English summary
Oben rorr ez sigma electric bikes now available on flipkart also check all details here
மேலும்... #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X