வித்ததே 312 யூனிட்டுதான் இதையே இவ்ளோ பெருசா பேசுறாங்களா.. யாருங்க அந்த நிறுவனம்?
இந்த பிப்ரவரி மாதம் நிறைவுற இன்னும் ஒரு சில மணி நேரங்களே உள்ளன. இந்த மாதிரியான சூழலில் வாகன உற்பத்தியாளர்கள் சிலர் 2025 பிப்ரவரி மாத விற்பனை விபரங்களை வெளியிட தொடங்கி இருக்கின்றனர். அந்தவகையில், ஒடைசி எலெக்ட்ரிக் (Odysse Electric) நிறுவனம் அதன் விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது. அது வெளியிட்டு இருக்கும் தகவலின்படி 2025 பிப்ரவரி மாதத்தில் மொத்தமாக 312 யூனிட்டுகள் வாகனங்களை அது விற்பனைச் செய்திருப்பது தெரிய வந்திருக்கின்றது.
மேலும், இதனை அந்நிறுவனம் பெருமையாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றது. ஏனெனில் இது முந்தைய மாதத்தைக் காட்டிலும் 10 சதவீதம் அதிகம் விற்பனை எண்ணிக்கை ஆகும். மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனமே ஒடைசி எலெக்ட்ரிக். இந்த நிறுவனம் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் கால்தடம் பதித்து இருக்கின்றது.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவின் 17 மாநிலங்களின், 150 நகரங்களில் ஷோரூம் அமைத்து அது செயல்பட்டு வருகின்றது. இவ்வாறு தன்னுடைய விற்பனையகங்களை பரந்து விரிந்திருக்கச் செய்திருக்கின்ற போதிலும் அதற்குக் கணிசமான வரவேற்பே நாட்டில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அது 312 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைச் செய்திருப்பது உள்ளது.
இருப்பினும் நிறுவனத்திற்கு மகிழ்ச்சியை வழங்கும் விதமாக முந்தைய மாதத்தைக் காட்டிலும் பிப்ரவரி மாதத்தில் 10 சதவீதம் அதிக விற்பனை கிடைத்திருக்கின்றது. இந்த நிறுவனம் சமீபத்திலேயே ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கால்தடம் பதித்தது. இதுதவிர, பீஹார், ராஜஸ்தான் மற்றும் உபி ஆகிய மாநிலங்களிலும் கால்தடம் பதிப்பதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றது.
இந்த நிறுவனத்தின் ஷோரூம்கள் தமிழகத்திலும் செயல்பட்டு வருகின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த நிறுவனத்தின்கீழ் எலெக்ட்ரிக் பைக், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் எலெக்ட்ரிக் மொபட் வகை வாகனங்களே விற்பனைக்குக் கிடைக்கின்றன. மொத்தமாக 10 எலெக்ட்ரிக் இரண்டு வாகன மாடல்களை அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டு உள்ளது.
இதில் வர்த்தக பயன்பாட்டிற்கான எலெக்ட்ரிக் டூ-வீலரும் அடங்கும். ட்ராட் (Trot) எனும் மொபட் வகை எலெக்ட்ரிக் இரண்டு சக்கர வாகனத்தையே அது வர்த்தக பிரிவிற்காக விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. முன்னால், பின்னால் மற்றும் கால் வைக்கும் இடம் என அனைத்து பகுதிகளிலும் சரக்கை ஏற்றிச் செல்வதற்காக மிகப் பெரிய இடம் இந்த வாகனத்தில் வழங்கப்பட்டு இருக்கும்.
இதில் 250 கிலோ வரையிலான எடையுள்ள பொருட்களை ஏற்றிச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், வேடர் மற்றும் இவோகிஸ் எனும் இரண்டு எலெக்ட்ரிக் பைக்குகளையும் அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. மற்ற அனைத்தும் ஸ்கூட்டர்களாகும். அதாவது, ஏழு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஒடைசி எனும் ஒரு பிராண்டு மின்சார இரண்டு சக்கர வாகனங்களை விற்பனைச் செய்துக் கொண்டிருப்பதே பலருக்கும் தெரியாத ஒன்றாக இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் மிகவும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. இது இப்போது விற்பனையகங்களை விரிவாக்கம் செய்யும் பணியில் களமிறங்கி இருப்பதால் வரும் நாட்களில் மேலும் மிகப் பெரிய வளர்ச்சியைக் காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








