போலீஸ் புடிச்சாலும் இந்த ஸ்கூட்டரை ஓட்ட லைசன்ஸ் காட்ட தேவையில்ல!! மணிக்கு 25கிமீ வேகத்தை தாண்டாது!

ஒடிசி எலக்ட்ரிக் வாகனங்கள் (Odysse Electric Vehicles), இந்தியாவில் நீண்ட வருடங்களாக எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்துவரும் நிறுவனங்களுள் ஒன்று. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒடிசி எலக்ட்ரிக் வாகனங்கள் நிறுவனத்தில் இருந்து ஏகப்பட்ட எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் பல்வேறு விதமான உடலமைப்புகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) மட்டுமின்றி, எலக்ட்ரிக் பைக்குகள் (Electric Bikes) மாடல்களும் ஒடிசி நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன. இவ்வளவு ஏன், பொருட்களை மட்டுமே கொண்டு செல்லக்கூடிய ட்ராட் (Trot) என்கிற மினி எலக்ட்ரிக் பைக்கும் கூட ஒடிசி நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படுகிறது.

odysse racer neo electric scooter

இந்த நிலையில், ஒடிசி எலக்ட்ரிக் வாகனங்கள் நிறுவனத்தில் இருந்து புதியதாக 'ரேசர் நியோ' (Racer Neo) என்கிற மெதுவாக இயங்கக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யபட்டுள்ளது. ஒடிசி நிறுவனத்தில் இருந்து ஏற்கனவே ரேசர் என்கிற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது ஒடிசி ரேசர் ஸ்கூட்டரின் அப்டேட் வெர்சன் ஆகும்.

ரூ.52 ஆயிரம் என்கிற குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பினும், இந்த புதிய ஒடிசி எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சிறப்பான தொழிற்நுட்ப அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், ஹேண்டில்பாருக்கு மத்தியில் எல்இடி தரத்தில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் சாவியில்லாமல் ஸ்கூட்டரை ஸ்டார்ட்/ ஸ்டாப் செய்யும் வசதிகளை சொல்லலாம்.

இவை மட்டுமின்றி, க்ரூஸ் கண்ட்ரோல் (Cruise Control) மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் (USB Charging) வசதிகளும் கூட ஒடிசி ரேசர் நியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன. சிட்டி, ரிவர்ஸ் மற்றும் பார்க்கிங் என மூன்று விதமான ரைடிங் மோட்கள் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ளன. இவற்றை தேவைக்கேற்ப தேர்வு செய்து பயன்படுத்தலாம்.

புதிய ரேசர் நியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை கிராபேன் பேட்டரி அல்லது லித்தியம்-இரும்பு பேட்டரி உடன் வாங்கும் ஆப்ஷனை ஒடிசி எலக்ட்ரிக் நிறுவனம் வழங்குகிறது. மேலும், இதில் கிராபேன் பேட்டரியை 60 வோல்ட் 32 ஆம்பியர் திறன் உடன் அல்லது 60 வோல்ட் 45 ஆம்பியர் திறன் உடன் வாங்கலாம்.

இந்த பேட்டரிகளை முழுமையாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 90கிமீ-இல் இருந்து 115கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். இந்த பேட்டரிகளை முழுமையாக சார்ஜ் நிரப்ப 4இல் இருந்து 8 மணிநேரங்கள் தேவைப்படும். பேட்டரி ஆனது இந்த ஸ்கூட்டரில் 250 வாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடு மணிக்கு 25கிமீ மட்டுமே ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடு 25km/h மட்டுமே என்பதால், ஒடிசி ரேசர் நியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்ட டிரைவிங் லைசன்ஸ் எதுவும் தேவையில்லை. ஒடிசி எலக்ட்ரிக் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 150க்கும் மேற்பட்ட டீலர்ஷிப் ஷோரூம்கள் உள்ளன. நம் சென்னையிலும் ஆவடி பகுதியில் இதன் டீலர்ஷிப் ஷோரூம் உள்ளது. ஷோரூமில் மட்டுமின்றி, விருப்பப்படுபவர்கள் புதிய ரேசர் நியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒடிசி எலக்ட்ரிக்கின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்திலும் புக் செய்யலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, July 12, 2025, 5:00 [IST]
English summary
Odysse electric launches racer neo electric scooter in india check price features all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+