சூப்பர் பைக் மாதிரி இருக்கு.. இவ்ளோ கம்மி விலையில விற்பனைக்கு வந்திருக்கா!.. நம்ப முடியாத கம்மி விலை!..
சூப்பர் பைக்கிற்கு இணையான ஸ்போர்ட்டி லுக்கில் தயார் செய்திருக்கும் பைக்கை பிரபல மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஒடைசி (Odysse), இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இவோக்கிஸ் லைட் (Evoqis Lite) எனும் மின்சாரத்தில் இயங்கும் பைக் மாடலையே அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 1.18 லட்சம் என்கிற விலையிலேயே இந்த எலெக்ட்ரிக் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.
இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். விலை குறைவாக இருந்தாலும் சிறப்பம்சங்களை இந்த பைக்கில் வாரி வழங்க ஒடைசி தவறவில்லை. வெளிப்படையான கண்ணாடி, முன் பக்க அலங்கார மாஸ்க்கில் பொருத்தப்பட்ட நிலையில் பின்பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடி, கிளிப் ஆன் ஹேண்டில்பார் உள்ளிட்டவற்றையே அது இவோக்கிஸ் லைட்-இல் வழங்கி இருக்கின்றது.

இதுமட்டுமல்ல யமஹா ஆர்15 (Yamaha R15) பைக்கில் இருப்பதைப் போல இரண்டு துண்டாக பிரிக்கப்பட்ட இருக்கை மற்றும் கவர்ச்சியான வால் பகுதி உள்ளிட்டவற்றையும் இந்த பைக்கில் ஒடைசி வழங்கி இருக்கின்றது. ஆகையால், கவர்ச்சியான தோற்றத்திற்கும் பஞ்சமில்லாத மின்சார பைக்காக இவோக்கிஸ் லைட் காட்சியளிக்கின்றது.
இதுமட்டுமல்ல, ஸ்பீடு மற்றும் ரேஞ்ச் தருவதிலும் இந்த இ-பைக்கை மிக சிறந்ததாக ஒடைசி தயார் செய்திருக்கின்றது. அந்தவகையில், இவோக்கிஸ் லைட் மின்சாரை பைக்கில் அதிகபட்சமாக மணிக்கு 75 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 90 கிமீ ரேஞ்சை தரக் கூடிய பேட்டரி பேக்கையே ஒடைசி வழங்கி இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

மேலே பார்த்த அம்சங்கள் மட்டுமல்ல இன்னும் பல அம்சங்களை இந்த மின்சார பைக்கில் வழங்கி இருக்கின்றது, ஒடைசி. அந்தவகையில், திருட்டைத் தவிர்க்கும் தொழில்நுட்பம், சாவியே இல்லாமல் பைக்கை ஸ்டார்ட் செய்யும் வசதி, மோட்டாரை கட்-ஆஃப் செய்யும் சுவிட்ச், பன்முக ரைடிங் மோட்கள் உள்ளிட்டவற்றையும் ஒடைசி நிறுவனம் இவோக்கிஸ் லைட் மின்சார பைக்கில் வழங்கி இருக்கின்றது.
ஆகையால், அதிக தொழில்நுட்ப அம்சங்களை விரும்புவோரின் கவனத்தை இந்த இ-பைக் கவரும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, பன்முக ஆடம்பர அம்சங்களைத் தாங்கிய இந்த எலெக்ட்ரிக் பைக்கையே வெறும் ரூ. 1.18 லட்சம் என்கிற விலையில் ஒடைசி விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது அநேகரின் பார்வையை இதன் பக்கம் திருப்பும் வகையில் அமைந்திருக்கின்றது.
இதன் ஸ்டைல் யமஹா ஆர்15 பைக்கை மட்டுமல்ல கவாஸாகி நிஞ்சா 300 (Kawasaki Ninja 300) பைக் மாடலையும் பிரதிபலிக்கும் வகையிலேயே இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், இளசுகள் மத்தியில் இந்த அசத்தலான மின்சார பைக்கிற்கு தரமான வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் பைக்கிற்கும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை தங்கள் பக்கம் ஈர்க்கும் பொருட்டே ஒடைசி நிறுவனம் இவோக்கிஸ் லைட் வெர்ஷனை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதன் விலை யாரும் எதிர்பார்த்திராத வகையில் குறைவாக இருப்பதால் நல்ல வரவேற்பையே பெறும் என நாங்கள் நம்புகின்றோம்.


Click it and Unblock the Notifications








