ஓட்டுவதற்கு லைசன்ஸ் எல்லாம் தேவையில்ல... டிராஃபிக்கில் புகுந்து புகுந்து செல்ல சரியான இ-ஸ்கூட்டர்!!

ஒடிசி எலக்ட்ரிக் (Odysse Electric), மும்பையை சேர்ந்த எலக்ட்ரிக் 2-வீலர் (Electric 2-Wheeler) உற்பத்தி நிறுவனம். பல்வேறு விதமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை (Electric Scooters) விற்பனை செய்துவரும் ஒடிசி எலக்ட்ரிக் நிறுவனம், புதியதாக 'ஹைஃபை' (HyFy) என்கிற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றிய கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சமீப ஆண்டுகளில் பெரிய அளவிலான மார்க்கெட் உருவாகி உள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியாக பல இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் நாடு முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் தோன்றியுள்ளன. இந்த விஷயத்தில் நாட்டின் மென்பொருள் தலைநகரமான பெங்களூருவின் ஆதிக்கம் தான் அதிகமாக உள்ளது.

odysse hyfy electric scooter launched

அதேநேரம், மற்ற நகரங்களில் இருந்தும் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உருவெடுத்துள்ளன. அவ்வாறு மும்பையில் இருந்து தோன்றிய எலக்ட்ரிக் 2-வீலர் நிறுவனங்களுள் ஒன்று, ஒடிசி எலக்ட்ரிக் ஆகும். லைசன்ஸ் இல்லாமல் பயன்படுத்தக்கூடிய குறை-வேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் இருந்து, அதிவேகமாக இயங்கக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வரையில் ஒடிசி எலக்ட்ரிக் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், குறைவான வேகத்தில் இயங்கக்கூடிய மற்றொரு எலக்ட்ரிக் ஸ்கூட்டராக 'ஹைஃபை' மாடலை ஒடிசி எலக்ட்ரிக் நிறுவனம் மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் அதிகப்பட்ச வேகமே மணிக்கு 25கிமீ ஆகும். இதனால், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சாலையில் ஓட்ட ஓட்டுனர் உரிமம் தேவையில்லை. நகரத்திற்குள் ஓட்டுவதற்கு 20- 25km/h வேகமே போதுமானது என்பதால், ஹைஃபை ஆனது சிட்டி ரோடுகளுக்கான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என்றுதான் சொல்ல வேண்டும்.

odysse hyfy electric scooter launched

புதிய ஒடிசி ஹைஃபை எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.42,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 250 வாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இதில் பொருத்துவதற்கு 48 வோல்ட் அல்லது 60 வோல்ட் பேட்டரியை தேவைக்கு ஏற்ப தேர்வு செய்யலாம். இதில், 48 வோல்ட் பேட்டரி ஆனது ஸ்கூட்டரை அதிகப்பட்சமாக 70கிமீ தொலைவிற்கு இயக்கி செல்லக்கூடியது ஆகும்.

அதுவே, 60 வோல்ட் பேட்டரியை 100% சார்ஜில் இருந்து 0% சார்ஜ் வரையில் 89கிமீ தொலைவிற்கு கொண்டு செல்லலாம். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்ப நான்கில் இருந்து எட்டு மணிநேரம் வரையில் தேவைப்படும் என ஒடிசி எலக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சாவியில்லாமல் வெறும் பொத்தானை அழுத்துவதன் மூலமாக ஸ்டார்ட்/ ஸ்டாப் செய்யலாம்.

சிட்டி ரைடிங், ரிவர்ஸ் மற்றும் பார்க்கிங் உள்ளிட்ட ரைட் மோட்கள் (Ride Modes) உடன் உள்ள புதிய ஹைஃபை எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் தொழிற்நுட்ப அம்சங்களாக க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் முக்கியமான விபரங்களை ரைடருக்கு தெரிவிக்கக்கூடிய எல்இடி டிஜிட்டல் திரை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. பார்க்க அளவில் சிறியதாக இருப்பினும், இருக்கைக்கு அடியில் போதுமான அளவிற்கு இடவசதியை ஹைஃபை கொண்டுள்ளது.

ராயல் மேட் நீலம், பீங்கான் சில்வர், அரோரா மேட் கருப்பு, உமிழக்கூடிய சிவப்பு மற்றும் ஜேட் பச்சை என ஐந்து விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட உள்ள புதிய ஹைஃபை எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒடிசி எலக்ட்ரிக் நிறுவனத்தின் டீலர்ஷிப் ஷோரூம்களிலும், இணையத்தள பக்கத்திலும் வருகிற மே 10ஆம் முதல் புக் செய்யலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹைஃபை எலக்ட்ரிக் ஸ்கூட்டரை முதலாவதாக வாங்கும் கஸ்டமர்களுக்கு சிறப்பு சலுகைகள் கிடைக்கும் என ஒடிசி எலக்ட்ரிக் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், நகரத்திற்குள் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் பயன்படுத்துவதற்கு ஹைஃபை மிகவும் ஏற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கும். அதற்கேற்ப, ஒல்லியான உடலமைப்புடன் டிராஃபிக்கில் புகுந்து புகுந்து செல்லக்கூடியதாக ஹைஃபை வடிவமைக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 7, 2025, 19:07 [IST]
English summary
Odysse introduced hyfy electric scooter in india price features all details here
மேலும்... #electric scooter #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+