சினிமால டைம் டிராவல் பண்ணுற வண்டி மாதிரி இருக்குது! ஓலாவின் இந்த வண்டி எப்ப வருது தெரியுமா?
ஓலா நிறுவனம் தனது டைமண்ட்ஹெட் என்ற வித்தியாசமான பைக்கை களம் இறக்கப்போவது உறுதியாகியுள்ளது. இந்த பைக் வரும் 2027ம் ஆண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கின் விலை மற்றும் இதில் உள்ள அம்சங்களை பற்றி காரலாம் வாருங்கள்.
ஒலா நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளுக்க முன்னர் எலெக்ட்ரிக் பைக் துறையில் தனது காலடி தடத்தை எடுத்து வைக்கப்போவதாக அறிவித்து சில பைக்குகளை காட்சிப்படுத்தியது. அதில் ரோடுஸ்டர் பைக்குகள் எல்லாம் தயாரிப்பு வந்துவிட்டது. ஆனால் டைமண்ட் ஹெட்பைக் இது வரை தயாரிப்பிற்கு வரவில்லை.

இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்நிறுவனம் சங்கல்ப் என்ற நிகழ்ச்சியை பெங்களூருவில் நடந்ததியது. இந்த நிகழ்ச்சியில் இந்நிறுவனம் டைமண்ட்ஹெட் பைக்கின் புரோட்டோடைப் ஸ்டேஜிலிருந்து தற்போது எப்படி மாறியுள்ளது என்பதை வெளியிட்டுள்ளது. அப்பொழுது இந்த பைக் 2027ம் ஆண்டு விற்பனைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த டைமண்ட் ஹெட் ஓலா பைக் அந்நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் பைக்காக உருவாக்கப்படுகிறது. இதன் இன்ஜினியரிங், பெர்ஃபார்மென்ஸ், தொழிற்நுட்பம் எல்லாம் அந்த அளவிற்கு சிறப்பாக இதில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அடாப்டிவ் எர்கனோமிக்ஸ், ஆர்க்யூமென்டெட்டட் ரியாலிட்டி அடிப்படையிலான இன்டராக்ஷன்கள் ஆகியவை இதில் உட்புகுத்தப்படுகின்றன.

இந்த பைக்கில் மூவ் ஆப்ரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டாலும், குருடிரிம் சிலிக்கான் இன்டலிஜென்ஸ் இந்த பைக்கில் வழங்கப்படுகிறது. இதனால் இந்த பைக் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 2 நொடியில் பிக்கப் செய்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பைக் ரூ5 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பைக்கின் வடிவமைப்பு அக்ரஸிவாக இருக்கிறது. இந்த பைக்கில் அடாஸ் தொழிற்நுட்பம் பொருத்தப்படுகிறது. இதன் மூலம் இந்த பைக்கில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் டிப்பார்ச்சர் வார்னிங், முன்பக்க மோதுதல் அலர்ட், நீங்கள் பயணிக்கும் பாதைக்க ஏற்ப டிராக்ஷனை தேர்வு செய்யும் வழி முறை ஆகியன இதில் வழங்கப்பட்டுள்ளன. இதில் நீளவாக்கிலான எல்இடி லைட் பார், ஸ்லீக்கான பின்பக்க வடிவமைப்பு உள்ளிட்ட அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன.
இந்த பைக் விற்பனைக்கு வந்தால் நிச்சயம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக ஸ்போர்ட்ஸ் ரக பைக்கை விரும்புபவர்களுக்கு இந்த பைக் ஏற்றதாக இருக்கலாம். பலர் இந்த பைக்கை விரும்பி வாங்கினால் இந்தியாவும் வெளிநாடுகள் போல வளர்ச்சி பெற்ற தோற்றத்தை பெறும். இந்தியாவில் இப்படியான தயாரிப்புகள் வருவதை நாம் நிச்சயம் ஊக்குவிக்க வேண்டும். இது தான் இந்திய வளர்ச்சிக்கு மிக முக்கியமானது.

இந்த பைக் மார்கெட்டில் தற்போது விற்பனையாகி வரும் பிரிமியம் எலெக்ட்ரிக் பைக்கான அல்ராவைலட் பைக் உடன் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஓலா நிறுவனம் மூவ் ஓஎஸ் 6 சாஃப்ட்வேரை வெளியிடவும் திட்டமிட்டுள்ளது. இதில் பல ஏஐ அம்சங்கள் இடம் பெறம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓலா நிறுவனம் ஜென் 4 அப்டேட்டிலும் கவனம் செலுத்துகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா நிறுவனம் தற்போது விற்பனையில் சரிவை சந்தித்தாலும் அதை எதிர்கொள்ள புதிய தயாரிப்புகளை களம் இறக்குகிறது. இதனால் வீழ்ச்சியிலிருந்து இந்நிறுவனம் மீண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் விற்பனைக்கு வரும் போது மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தக்கூட வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









