ஆர்வ மிகுதியில் ஓலா சிஇஓ லீக் செய்த முதல் பைக்கின் படங்கள் - எந்த ஷோரூமில் தேடினாலும் பார்க்க முடியாது

ஓலா எலக்ட்ரிக் (Ola Electric), இந்தியாவின் பிரபலமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) உற்பத்தி நிறுவனமாக விளங்குகிறது. தற்போதுவரையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் மட்டுமே ஈடுப்பட்டுவரும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், அடுத்ததாக எதிர்பார்த்ததை போல் எலகட்ரிக் பைக் (Electric Bike)-ஐ அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இந்த நிலையில், ஓலாவின் முதல் எலக்ட்ரிக் பைக்கின் படங்களை ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வால் (Bhavish Aggarwal) வெளியிட்டுள்ளார். அதனை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் குறுகிய காலத்தில் எலக்ட்ரிக் 2-வீலர்கள் விற்பனையில் முதலிடம் பிடித்த நிறுவனமாக ஓலா எலக்ட்ரிக் விளங்குகிறது. இன்னும் சொல்லப்போனால, பெட்ரோல் என்ஜின் 2-வீலர்களை கணக்கில் எடுத்தால் கூட இந்தியாவின் டாப்-10 2-வீலர் நிறுவனங்களுள் ஒன்றாக ஓலா எலக்ட்ரிக் உள்ளது.

ola electric bike images revealed

பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு தமிழ்நாட்டில் ஓசூரில் பிரம்மாண்டமான உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தான் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த தொழிற்சாலையில் ஓலா எலக்ட்ரிக் பைக் உற்பத்தியும் துவங்கியுள்ளது.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் ஏற்கனவே தான் யார் என்பதை காண்பித்துவிட்ட ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், தற்போது எலக்ட்ரிக் பைக்கை வடிவமைக்கும் பணிகளிலும் ஈடுப்பட்டு வருகிறது. இதனை வெளிக்காட்டும் வகையில், ஓலா தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட முதல் ஓலா எலக்ட்ரிக் பைக்கின் படங்களை நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வால் வெளியிட்டுள்ளார்.

பாவிஷ் அகர்வாலின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த படங்களில், பளிச்சிடும் மஞ்சள் நிறத்திலான ஓலா எலக்ட்ரிக் பைக்கை காண முடிகிறது. பைக்கின் ஹேண்டில்பாருக்கு கீழே, மஞ்சள் நிறத்தில் அம்புகுறி டிசைனில் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனாலேயே பாவிஷ் அகர்வால் தனது எக்ஸ் பதிவில், "விரைவில் இதனை ஓட்ட உள்ளேன்! அம்பு தலை @ஓலா எலக்ட்ரிக்" என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

ola electric bike images revealed

சிஇஓ பாவிஷ் அகர்வாலின் இந்த எக்ஸ் பதிவிற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளை கமெண்ட்களாக தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர், "இதனை சிவப்பு நிறத்தில் எதிர்பார்க்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். ஓலா தனது முதல் பைக்கிற்கு என்னென்ன கலர் ஆப்ஷன்களை வழங்க உள்ளது என்பது தற்போதைக்கு உறுதியாக தெரியவில்லை.

இந்த படங்களில் மஞ்சள் நிறத்தில் பைக் உள்ளதால், மஞ்சள் கலர் ஆப்ஷன் வழங்கப்படும் என்பதை மட்டும் உறுதியாக சொல்லலாம். இந்த படங்களில், பைக்கின் மீது ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் லோகோ உள்பட எதையும் பார்க்க முடியவில்லை. ஆதலால், இந்த எலக்ட்ரிக் பைக்கை வடிவமைக்கும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என்பதை அறிய முடிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலாவின் முதல் எலக்ட்ரிக் பைக்கை விரைவில் ஓட்ட உள்ளதாக பாவிஷ் அகர்வால் குறிப்பிட்டு உள்ளதால், விரைவில் இந்த பைக் உடனான அவரது பயணம் தொடர்பான படங்கள் அல்லது வீடியோவை எதிர்பார்க்கலாம். இந்த நேக்டு-ரக எலக்ட்ரிக் பைக் உடன் சேர்த்து மேலும் 2 எலக்ட்ரிக் பைக்குகளை ஒரே நேரத்தில் ஓலா எலக்ட்ரிக் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 29, 2025, 20:12 [IST]
English summary
Ola electric bike images revealed by ceo bhavish agarwal
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+