புக் பண்ண ஒவ்வொருத்தரும் ஜாலியா வீட்டுக்கு ஓட்டினு போறாங்க! பேட்டரியில் இருந்து எல்லாமே மேட்-இன் ஓசூர்!

ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம், 5.2kWh பேட்டரி கொண்ட தனது எஸ்1 புரோ+ (S1 Pro+) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவிரியை இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இந்த வாகனத்தில், ஓலா நிறுவனத்தின் உள்நாட்டு தயாரிப்பான 4680 பாரத் செல் (Bharat Cell) பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிக தூரம் பயணம் செய்யும் திறன், சிறந்த செயல்பாடு மற்றும் மேம்பட்ட பாதுகாப்பை வழங்கக்கூடிய இந்த 4680 பாரத் செல் பேட்டரிகளை முழுக்க முழுக்க தனது தொழிற்சாலையிலேயே உற்பத்தி செய்து, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பொருத்த உள்ளதாக சில மாதங்களுக்கு முன் ஓலா நிறுவனம் அறிவித்தது.

அதனை தொடர்ந்து, 4680 பாரத் செல் பேட்டரிகள் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பொருத்தும் பணிகள் துவங்கப்பட்ட நிலையில், தற்போது அவ்வாறு பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்களை புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி (Delivery) கொடுக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. எஸ்1 புரோ+ (5.2kWh) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதன்மையான தயாரிப்பாகும்.

ola electric commences deliveries of its 4680 bharat cell powered vehicles

அதாவது, ஓலா நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலேயே விலைமிக்கது, எஸ்1 புரோ+ (5.2kWh) ஆகும். 4680 பாரத் செல் பேட்டரி பேக் மூலம், பேட்டரி பேக் மற்றும் செல் உற்பத்தி செயல்முறை முழுவதையும் சொந்தமாக வைத்திருக்கும் இந்தியாவின் முதல் இவி நிறுவனமாக ஓலா எலெக்ட்ரிக் விளங்குகிறது.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட AIS-156 திருத்தம்-4 தரநிலைகளின் கீழ், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 5.2kWh 4680 பாரத் செல் பேட்டரி பேக்கிற்கான ARAI சான்றிதழை அண்மையில் பெற்றதாக ஓலா எலெக்ட்ரிக் அறிவித்தது. எஸ்1 புரோ+ (5.2kWh) ஸ்கூட்டரில் 13kW எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

ola electric commences deliveries of its 4680 bharat cell powered vehicles

இது 0- 40 கிமீ வேகத்தை வெறும் 2.1 வினாடிகளில் அடைந்து, இணையற்ற செயல்திறனை வழங்குகிறது. பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 320கிமீ தூரத்திற்கு பயணிக்கக் கூடிய எஸ்1 புரோ+ (5.2kWh) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஹைப்பர், ஸ்போர்ட்ஸ், நார்மல் மற்றும் ஈக்கோ என நான்கு ரைடிங் மோட்கள் உள்ளன.

மேலும், டூயல்-சேனல் ஏபிஎஸ், முன் & பின் டிஸ்க் பிரேக்குகள் போன்ற பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. இரு வண்ணங்களில் இருக்கையை கொண்டுள்ள இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் விங் மிரர்கள் ஸ்கூட்டரின் உடல் நிறத்திலும், புதிய டை-காஸ்ட் அலுமினிய கைப்பிடியும் வழங்கப்பட்டுள்ளன. பேஷன் ரெட், போர்சலைன் ஒயிட், இண்டஸ்ட்ரியல் சில்வர், ஜெட் பிளாக், ஸ்டெல்லார் ப்ளூ, மிட்நைட் ப்ளூ போன்ற கலர் ஆப்ஷன்களில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கிறது.

ola electric commences deliveries of its 4680 bharat cell powered vehicles

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தற்போது பிரீமியம் விலையிலான எஸ்1 புரோ+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 5.2kWh மற்றும் 4kWh பேட்டரி ஆப்ஷன்களிலும், எஸ்1 புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 4kWh மற்றும் 3kWh பேட்டரி ஆப்ஷன்களிலும் விற்பனை செய்கிறது. தற்சமயம் இவை முறையே ரூ.1,90,338, ரூ.1,70,338, ரூ.1,44,999, மற்றும் ரூ.1,24,999 என்கிற எக்ஸ்-ஷோரூம் விலைகளில் கிடைக்கின்றன.

ஓலா நிறுவனத்தின் பட்ஜெட் விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களாக ஜென்-3 எஸ்1 எக்ஸ்+ (4kWh) மற்றும் ஜென்-3 எஸ்1 எக்ஸ் (2kWh, 3kWh, 4kWh) ஆகியவை முறையே ரூ.1,19,999, ரூ.84,999, ரூ.98,999 மற்றும் ரூ.1,14,999 விலைகளில் கிடைக்கின்றன. ஓலா நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வரிசையில் எஸ்1 புரோ ஸ்போர்ட் 5.2kWh மற்றும் 4kWh பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

ola electric commences deliveries of its 4680 bharat cell powered vehicles

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை இல்லாமல், ரோட்ஸ்டர் (Roadster) மற்றும் ரோட்ஸ்டர் எக்ஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களையும் வெவ்வேறு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் ஓலா நிறுவனம் விற்பனை செய்கிறது. இருப்பினும், தற்போது 4680 பாரத் செல் பேட்டரி கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவிரிகளை துவங்கியதுதான் இந்த நிறுவனத்தின் முக்கியமான சாதனையாக கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 5, 2025, 21:43 [IST]
English summary
Ola electric commences 4680 bharat cell powered s1 pro plus electric scooters deliveries
மேலும்... #ola #electric scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X