அடி விழுந்தாலும் எங்க வேலையில இருந்து பின் வாங்க மாட்டோம்.. ஓலா செய்த வேலையால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!!

ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் கடந்த சில மாதங்களாகவே விற்பனையில் தொடர்ச்சியாக அடி வாங்கிக் கொண்டிருக்கின்றது. பஜாஜ் (Bajaj), டிவிஎஸ் (TVS) மற்றும் ஏத்தர் எனெர்ஜி (Ather Energy) இவர்கள் மூவரே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தை விற்பனையால் வீழ்த்திய வீரர்கள் ஆவர். ஆகையால், இந்தியாவின் முன்னணி மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களாக இவர்களே தற்போது உருவெடுத்து இருக்கின்றனர். இவர்களுக்கு அடுத்த இடத்திலேயே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் உள்ளது.

அதாவது, நான்காவது இடத்தை அது பிடித்திருக்கின்றது. இந்தியாவின் நம்பர் 1 மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக இருந்த ஓலா எலெக்ட்ரிக் இப்போது மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது. இதற்கு பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இவ்வாறு தொடர்ச்சியாக விற்பனையில் அடி வாங்கிக் கொண்டிருக்கின்ற போதிலும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அதன் அடுத்தக்கட்ட பணிகளை நிறுத்தாமல் செய்துக் கொண்டிருக்கின்றது.

Ola started gen 3 electric scooters delivery in india

சொல்லப்போனால் சந்தையை மீண்டும் ஆட்சிச் செய்வதற்கான பணியில் அது களமிறங்கி இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே சமீபத்தில் ஜென் 3 (Gen 3) வகை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த அறிமுகத்தைத் தொடர்ந்து புக்கிங் பணிகளையும், அடுத்ததாக உற்பத்தி பணிகளையும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் நாட்டில் தொடங்கியது.

இந்த பணிகளை அடுத்தே தற்போது டெலிவரி பணிகளையும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் நாட்டில் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஜென் 3 வகை ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி கொடுக்கும் படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி உள்ளன. இது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

Ola gen 3 s1 electric scooter

வாடிக்கையாளர்களைக் கவர எண்ணற்ற மாற்றங்களை இந்த ஜென் 3 வகை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஓலா எலெக்ட்ரிக் செய்திருக்கின்றது. குறிப்பாக, ஸ்கூட்டரின் முன் மற்றும் பின் பக்க ஃப்ரேமை அலுமினியத்தைக் கொண்டு அது தயார் செய்திருக்கின்றது. இதற்காக புதிய பிளாட்பாரத்தையே அது தயார் செய்திருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

மோட்டார், பேட்டரி மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஆகிய அனைத்தையும் ஒரே பெட்டிக்குள் கொண்டு வரக் கூடிய ஓர் பிளாட்பாரமே இந்த புதிய பிளாட்பாரம் ஆகும். இதுமட்டுமல்ல தன்னுடைய லேட்டஸ்ட் மற்றும் நிறுவனத்தின் சொந்த தயாரிப்பான '4680 பாரத் செல்'களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பேட்டரி பேக்கையே இதில் பயன்படுத்தி இருக்கின்றனர்.

எஸ்1 சீரிஸின் கீழ் விற்பனைக்குக் கிடைக்கும் அனைத்து இ-ஸ்கூட்டர் மாடல்களும் ஜென்3-க்கு அப்கிரேட் செய்யப்பட்டு இருக்கின்றன. எஸ்1 சீரிஸ்-இன்கீழ் எஸ்1 ப்ரோ (S1 Pro), எஸ்1 ப்ரோ பிளஸ் (S1 Pro+), எஸ்1 எக்ஸ் பிளஸ் (S1 X+) மற்றும் எஸ்1 எக்ஸ் (S1 X) ஆகிய மாடல்களே நாட்டில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இவற்றை பல்வேறு விதமான தேர்வுகளில் இந்தியர்களால் வாங்கிக் கொள்ள முடியும். அதாவது, வெவ்வேறு விதமான பேட்டரி பேக் மற்றும் சிறப்பம்சங்கள் ஆப்ஷன்களில் இதை வாங்கிக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் 2 kWh, 3 kWh, 4 kWh மற்றும் 5.3 kWh ஆகிய பேட்டரி பேக் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

ஓர் முழு சார்ஜில் 95 கிமீ முதல் 200 கிமீட்டர் வரையிலான ரேஞ்சை வழங்கும் திறன் கொண்ட பேட்டரி பேக்குகளே இவை ஆகும். இதேபோல், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 79,999 தொடங்கி 1.69 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் சந்தையில் தன்னுடைய ஆதிக்கத்தை மீண்டும் செலுத்தும் நோக்கிலேயே இந்த புதிய ஜென் 3 இ-ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதுதவிர, விரைவிலேயே தன்னுடைய இ-பைக்குகளின் டெலிவரி பணிகளையும் அது தொடங்க இருக்கின்றது. ஆகையால், அது விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

More from DriveSpark

Article Published On: Monday, March 24, 2025, 18:01 [IST]
English summary
Ola electric commences delivery of gen 3 scooters in india for ev enthusiasts
மேலும்... #ola #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+