எத்தனை பேரு புலம்பலோ.. இப்படி ஒரு அடியை வாங்கியிருக்கு ஓலா.. எழுந்து நிக்க ரொம்ப காலம் எடுத்துக்கும் போல!
ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் மின்சார இரண்டு சக்கர வாகன விற்பனையில் மிகப் பெரிய அடியை வாங்கி இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்து வந்த காலம் மாறி தற்போது மிகப் பெரிய விற்பனை வீழ்ச்சியை அது சந்தித்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாகவே 2025 பிப்ரவரி மாத விற்பனை புள்ளி விபரம் அமைந்திருக்கின்றது. நிறுவனத்தின் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் மொத்தமாகவே 8,647 யூனிட்டுகள் வரை மட்டுமே விற்பனையாகி இருக்கின்றன.
இதுவே சென்ற பிப்ரவரி மாத விற்பனை புள்ளி விபரம் ஆகும். அதேவேளையில், 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பார்த்தோமேயானால் இதே நிறுவனத்தின் தாயரிப்புகள் 33,906 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றன. பிப்ரவரி மாதத்தில் மட்டுமல்ல சென்ற ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் இதுபோன்றே மாபெரும் எண்ணிக்கையில் ஓலா எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகின.

இதை வைத்து பார்க்கையில் சென்ற ஆண்டு பிப்ரவரி மாதத்தைக் காட்டிலும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நிறுவனம் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் 74.5 சதவீதம் குறைவாக விற்பனையாகி இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இதுமட்டுமல்ல விற்பனையில் அதளபாதாளத்தில் நிறுவனத்தின் டூ-வீலர்கள் வீழ்ந்திருப்பதும் தெரிய வந்திருக்கின்றது.
இதுமட்டுமில்லைங்க ஜனவரி 2025-ஐக் காட்டிலும் இது மிகப் பெரிய விற்பனை வீழ்ச்சியாக உள்ளது. 2025 ஜனவரியில்கூட ஓலா எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் 24,376 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருந்தன என்பது கவனிக்கத்தகுந்தது. எனவே மாபெரும் விற்பனை வீழ்ச்சியை நோக்கி இந்த நிறுவனம் பயணித்துக் கொண்டிருப்பது தற்போது உறுதியாகி இருக்கின்றது.
நிறுவனத்தின் இந்த வீழ்ச்சிக்கு பலரின் புலம்பலே காரணம் என கூறப்படுகின்றது. நிறுவனத்தின் தயாரிப்புகள் சில கடந்த நாட்களில் ஓட்டை-ஒடைசலுடன் டெலிவரி வழங்கப்பட்டு இருக்கின்றன. அதுமட்டுமல்ல சிலவற்றில் தயாரிப்பு பிரச்சினையும் காணப்பட்டு இருக்கின்றன. இவ்வாறு பல டெலிவரிகள் கடந்த நாட்களில் செய்யப்பட்டு செய்யப்பட்டு இருக்கின்றன.
இதுமட்டுமல்ல, ஒரு சில ஓலா எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் குறைவான ரேஞ்சை வழங்குவது மற்றும் திடீர் பிரேக் டவுன் போன்ற பிரச்னையையும் சந்தித்து இருக்கின்றன. இதுபோன்ற சர்ச்சைகளின் காரணத்தினாலேயே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மின்சார வாகன விற்பனை மிகப் பெரிய அளவில் அடி வாங்கி இருக்கும் என யூகிக்க முடிகின்றது.
இந்த விற்பனை பின்தங்கல் பிரச்னையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் வரும் நாட்களிலும் சிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போதைய விற்பனைச் சரிவைக் காரணம் காட்டி ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் சிலரை பணியில் இருந்து அகற்றும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. ஆயிரக்கணக்கானோரை வேலையில் இருந்து அகற்றிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மின்சார இரண்டு சக்கர வாகனங்கள் ஆஹா-ஓஹோ என விற்பனையாகிக் கொண்டிருந்த காலம் மாறி தற்போது மாபெரும் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. இது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு மட்டுமல்ல ஓலா எலெக்ட்ரிக் டூ-வீலர் காதலர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








