சொன்னதே கம்மி விலை அதுலேயும் ரூ.15,000 குறைச்சுட்டாங்களா! நம்ப முடியாத கம்மி விலையில் ஓலா இ-பைக் அறிமுகம்!
ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் அதன் விலை குறைவான எலெக்ட்ரிக் பைக் (Electric Bike)கை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. நிறுவனம் சென்ற ஆண்டின் மத்தியில் ரோட்ஸ்டர் (Roadster) எனும் இ-பைக் மாடலை அறிமுகப்படுத்தியது. விலைகள், சிறப்பம்சங்கள் மற்றும் வேரியண்ட் என அனைத்து விபரங்களையும் அன்றைய நாளிலேயே அது அறிவித்திருந்திருந்தது. இத்தோடு ரிசர்வேஷன் பணிகளையும் அது அப்போது தொடங்கியது. ஆனால், இன்று வரை அதன் டெலிவரி பணிகள் தொடங்கப்படவில்லை.
இந்த நிலையிலேயே இன்று (பிப்ரவரி 05) மீண்டும் ஒரு முறை ஓலா நிறுவனம் ரோட்ஸ்டர் மின்சார பைக்கை நாட்டில் அறிமுகம் செய்திருக்கின்றது. ரோட்ஸ்டர் இ-பைக்கின் விலை குறைவான தேர்வான ரோட்ஸ்டர் எக்ஸ் (Roadster X) வேரியண்டையே அது முழுமையாக வெளியீடு செய்திருக்கின்றது.

இது ரோட்ஸ்டர் எக்ஸ் (Roadster X) மற்றும் ரோட்ஸ்டர் எக்ஸ் பிளஸ் (Roadster X+) என்கிற ஆப்ஷன்களில் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும். ரோட்ஸ்டர் எக்ஸ் தேர்வை 2.5 kWh, 3.5 kWh மற்றும் 4.5 kWh ஆகிய மூன்று விதமான பேட்டரி பேக் தேர்வுகளில் வாங்கிக் கொள்ள முடியும்.
இதேபோல், ரோட்ஸ்டர் எக்ஸ் பிளஸ்ஸிலும் இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. 4.5 kWh மற்றும் 9.1 kWh ஆகியவையே அந்த பேட்டரி பேக் தேர்வுகளில் ஆகும். இந்த பைக்கிற்கு ஆரம்ப விலையாக ரூ. 89,999 நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

ரோட்ஸ்டர் எக்ஸ் 2.5 kWh-இன் விலையே இது ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது. இதன் அதிகபட்ச விலையே ரூ. 1.69 லட்சம் மட்டுமே ஆகும். ரோட்ஸ்டர் எக்ஸ் பிளஸ் 9.1 kWh ஆப்ஷனுக்கே இந்த உச்சபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது. ஆனால், நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் இந்த விலையில் ரோட்ஸ்டர் எக்ஸ்-ஸை ஓலா எலெக்ட்ரிக் விற்பனைச் செய்யப்போவதில்லை என அறிவித்திருக்கின்றது. இந்த விலையில் இருந்து ரூ. 15 ஆயிரம் வரை குறைத்தே இந்த மின்சார பைக்கை அது விற்பனைச் செய்ய இருக்கின்றது.

அறிமுகத்தை முன்னிட்டே இந்த சிறப்பு சலுகை விலையில் விற்பனைச் செய்ய அது முன் வந்திருக்கின்றது. ஆகையால், அடுத்த சில வாரங்களிலேயே இந்த பைக்கின் விலை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போதும், ரோட்ஸ்டர் எக்ஸ்-க்கான புக்கிங் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வருகின்ற மார்ச் மாதத்தின் மத்தியில் இதன் டெலிவரி பணிகளைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஃபிளாட் கேபிள் டெக்னாலஜி, பிரேக் -பை- வயர் தொழில்நுட்பம், 4.3 அங்குல வண்ண எல்இடி திரை, எல்இடி லைட்டுகள், மோட்டார்சைக்கிள் கன்ட்ரோல் யூனிட், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ரிவர்ஸ் மோட் என ஏகப்பட்ட அட்வான்ஸ்டு அம்சங்களை இந்த பைக்கில் ஓலா வழங்கி இருக்கின்றது.
இதேபோல், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 118 கிமீட்டராக இருக்கின்றது. ரேஞ்ச் திறன் மட்டும் பேட்டரி பேக் தேர்விற்கு ஏற்ப மாறுபடும். அந்தவகையில், இதன் சின்ன பேட்டரி பேக் தேர்வு ஓர் முழு சார்ஜில் 252 கிமீ ரேஞ்சையும், பெரிய பேட்டரி பேக் தேர்வு 501 கிமீ ரேஞ்சையும் வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மிகவும் குறைவான விலையில் ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் பைக் விற்பனைக்கு வந்திருப்பதால் அதற்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, இதன் வருகை ஹீரோ ஸ்பிளெண்டர் மற்றும் பஜாஜ் பிளாட்டினா போன்ற பெட்ரோலில் (ஐசிஇ) இயங்கும் பைக்குகளுக்கும் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









