ஓலா தலையில துண்டு விழாம இருந்தா சரி.. ஏற்கனவே விற்பனையில அடி மேல அடி விழுந்துட்டு இருக்கு! இதுல இது வேறையா!!!

ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric)-இன் தலையில் துண்டு விழும் அளவிற்கு அதன் விற்பனை மாபெரும் சரிவு பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலில் மேலும் இந்த நிறுவனத்தை பின் தங்கச் செய்யும் வகையில் ஓர் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக்கின் டெலிவரி பணிகள் குறிப்பிடப்பட்ட நாளில் தொடங்கப்படுவது கேள்விக் குறியாகி இருப்பதாகவே தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இது ஓலா எலெக்ட்ரிக் பைக்கை பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திடம் இந்தியர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக அதன் எலெக்ட்ரிக் பைக் மாடல் உள்ளது. ரோட்ஸ்டர் (Roadster), எனும் பெயரிலேயே தன்னுடைய இ-பைக்கை நிறுவனம் நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இது மொத்தமாக மூன்று விதமான ஆப்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

Ola electric bike deliveries may get delayed

ரோட்ஸ்டர் எக்ஸ் (Roadster X), ரோட்ஸ்டர் (Roadster) மற்றும் ரோட்ஸ்டர் ப்ரோ (Roadster Pro) ஆகியவையே அவை ஆகும். இந்த மூன்றில் முதலில் ரோட்ஸ்டர் எக்ஸ் பைக்கே விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மேலும், அது இரண்டு விதமான ஆப்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்ற பிப்ரவரி மாதம் நடைபெற்ற அறிமுக நிகழ்வின்போதே ஓலா எலெக்ட்ரிக் இதை தெரிவித்தது. ரோட்ஸ்டர் எக்ஸ் (Roadster X) மற்றும் ரோட்ஸ்டர் எக்ஸ் பிளஸ் (Roadster X+) ஆகியவையே அந்த ஆப்ஷன்கள் ஆகும். மேலும், இவற்றின் டெலிவரி பணிகள் வருகின்ற மார்ச் மாதத்தின் மத்தியில் தொடங்கவும் ஓலா எலெக்ட்ரிக் திட்டமிட்டது.

ஆனால், பல்வேறு சிக்கல்கள் காரணமாக இந்த மார்ச் மாதத்தில் ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் டெலிவரி இந்த மாதத்தில் தொடங்குவது தள்ளிப் போயிருக்கின்றது. இந்த இ-பைக்கின் பேட்டரி பேக், வெப்பத்தை மேனேஜ் செய்வது, பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டம் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் என பலவற்றில் பிரச்னை இருப்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது.

இதன் காரணத்தினாலேயே ரோட்ஸ்டர் எக்ஸ் டெலிவரி பணிகள் இந்த மாதம் தொடங்குவது சந்தேகமாகி உள்ளது. இது சிராக இன்னும் சில மாதங்கள் எடுத்துக் கொள்ளும் என கூறப்படுகின்றது. ஆகையால், இதன் டெலிவரி பணிகள் தொடங்கி மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் வரை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே விற்பனையில் மாபெரும் சரிவை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் சந்தித்துக் கொண்டிருக்கின்ற சூழலில் இந்த சிக்கலிலும் ஓலா எலெக்ட்ரிக் சிக்கி இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு வந்தால் கொஞ்சம் நிறுவனம் இந்த விற்பனை வீழ்ச்சியில் இருந்து மீளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் இந்த பைக்கிற்கு யாரும் நம்ப முடியாத மிகக் குறைவான விலையாக ரூ.89,999 நிர்ணயம் செய்யப்பட்டது. இத்தகைய மலிவு விலை இ-பைக்கின் டெலிவரியே தற்போது தள்ளி போயிருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு யாராவது சூன்யம் வைத்திருப்பார்களோ கேட்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது, தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்கள். விற்பனையில் கடந்த ஆண்டு பிப்ரவரியைக் காட்டிலும் இந்த ஆண்டு பிப்ரவரியில் 70 சதவீதத்திற்கும் அதிகமான விற்பனை வீழ்ச்சியையே ஓலா தற்போது சந்தித்து இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 6, 2025, 20:37 [IST]
English summary
Ola electric motorcycle deliveries delayed by homologation challenges and battery issues
மேலும்... #ola #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+