புதுமாப்பிள்ளை கணக்கா ரெடி பண்ணியிருக்காங்க.. தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட ஓலா இ-பைக்கா இது! டெலிவரிக்கு ரெடி!
ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரோட்ஸ்டர் (Roadster) எனும் பைக் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இது ஓர் ஸ்போர்ட்டி லுக் கொண்ட இ-பைக் மாடல் ஆகும். இந்தியாவில் ரோட்ஸ்டர் எக்ஸ் (Roadster X), ரோட்ஸ்டர் (Roadster) மற்றும் ரோட்ஸ்டர் ப்ரோ (Roadster Pro) ஆகிய மூன்று விதமான தேர்வுகளில் அது விற்பனைக்குக் கிடைக்கும். மூன்று வெவ்வேறு விதமான உருவ அமைப்பைக் கொண்டிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
குறிப்பாக, ரோட்ஸ்டர் எக்ஸ்-ஸே இதில் விலை குறைவான எலெக்ட்ரிக் பைக்காக காட்சியளிக்கின்றது. இதன் உற்பத்தி பணிகளையே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இப்போது தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்பட்ட ஓலா எலெக்ட்ரிக் பைக்குகள் உற்பத்தி ஆலையை விட்டு வெளியேற்றும் படங்கள் வெளியாகி உள்ளன.

அத்துடன் ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் பைக்கை நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளான பவிஷ் அகர்வால் உள்ளிட்டோர் ஓட்டி பார்க்கும் காட்சிகளும் வெளியாகி உள்ளன. ஓலாவின் ஒவ்வொரு முதல் தயாரிப்பையும் முதலில் ஓட்டி பார்க்கும் பழக்கம் கொண்டவார பவிஷ் அகர்வால் இருக்கின்றார். இதன் அடிப்படையிலேயே அவர் இப்போதும் ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் பைக்கை ஓட்டி பார்த்திருக்கின்றார்.
இந்தியாவில் ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் இரண்டு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். ரோட்ஸ்டர் எக்ஸ் (Roadster X) மற்றும் ரோட்ஸ்டர் எக்ஸ் பிளஸ் (Roadster X+)ஆகியவையே அவை ஆகும். முதல் ரூ. 74,999க்கும், இரண்டாவது ஒன்று ரூ. 1.04 லட்சத்திற்கும் விற்பனைக்குக் கிடைக்கும். இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும்.

இந்த பைக்குகளின் உற்பத்தி பணிகளை அதிரடியாக தொடங்கி இருக்கின்றது, ஓலா எலெக்ட்ரிக். ஆகையால், விரைவில் இந்த இ-பைக்கின் டெலிவரி பணிகள் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மையப் பகுதியில் பொருத்தப்பட்ட மோட்டார் (Mid Drive Motor), எம்சியூ இன்டெக்ரேசன் (MCU Integration) மற்றும் பிரேக் பை வயர் தொழில்நுட்பம் (Brake By Wire Technology) ஆகிய சிறப்புகளைக் கொண்ட ஓர் இ-பைக்கே இதுவாகும்.
இதுமட்டுமல்ல இந்த பைக்கில் ஐபி67 தர சான்று பெற்ற பேட்டரிகளே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஆகையால், மழை, தூசி உள்ளிட்டவற்றால் அது பாதிப்படையாது என தெரிகின்றது. இதேபோல், திறனை வெளிப்படுத்துவதிலும் இந்த இ-பைக் கை தேர்ந்ததாக இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 118 கிமீ ஆகும்.
இதற்காக 7 kW திறன் கொண்ட மோட்டாரே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. அதேநேரத்தில், ரோட்ஸ்டர் எக்ஸ் பிளஸ் தேர்வில் 11 kW திறன் கொண்ட இ-மோட்டாரே இடம் பெற்றிருக்கும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 125 கிமீ ஆகும். இதேபோல், இரண்டுகளிலும் வெவ்வேறு விதமான பேட்டரி பேக் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
அந்தவகையில் ரோட்ஸ்டர் எக்ஸ் வேரியண்டை 2.5 kWh, 3.5 kWh மற்றும் 4.5 kWh ஆகிய பேட்டரி பேக் தேர்வுகளும், ரோட்ஸ்டர் எக்ஸ் பிளஸ் வேரியண்டை 4.5 kWh மற்றும் 9.1 kWh ஆகிய பேட்டரி பேக் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன. இத்தகைய பன்முக வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கக் கூடிய ஓர் இ-பைக்கின் உற்பத்தி பணிகளையே ஓலா எலெக்ட்ரிக் தற்போது தொடங்கி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார டூ-வீலர்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், எலெக்ட்ரிக் பைக்குகளைக் காட்டிலும் இ-ஸ்கூட்டர்களே மிக தாராளமாக விற்பனைக்குக் கிடைக்கின்றன. இந்த குறையைப் போக்கும் விதமாக ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் மாடலின் உற்பத்தி பணிகளைத் தொடங்கி இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் உற்பத்தி ஆலை தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்திருக்கின்றது. இங்கேயே இ-பைக்கின் உற்பத்தி பணிகள் தொடங்கி இருக்கின்றன. இந்த பைக்கிற்கு நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளைப் போலவே நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









