கோயம்புத்தூருக்கு பக்கத்துலயே தான் ஃபேக்ட்ரி இருக்கு... ஆனா டெலிவிரியை தொடங்க இத்தனை நாளாகி இருக்கு!
ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம், தனது 4680 பாரத் செல் (Bharat Cell) கொண்ட எஸ்1 புரோ+ (S1 Pro+) (5.2 kWh) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவிரிகளை தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் விரிவாக்கியுள்ளது. கோவை, கொச்சி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இதன் டெலிவிரிகள் புதியதாக தொடங்கப்பட்டு, பெங்களூருவிலும் தொடர்கிறது.
எஸ்1 புரோ+ (5.2 kWh) என்பது உள்நாட்டிலேயே ஓலா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 4680 பாரத் செல் பேட்டரி பேக்கைக் கொண்ட ஓலாவின் முதல் தயாரிப்பு ஆகும். இது மேம்பட்ட ரேஞ்ச், சிறந்த செயல்திறன் மற்றும் பாதுகாப்பை வழங்குகிறது. தனது வாகனங்களுக்கான செல் மற்றும் பேட்டரி பேக்குகளை தானே உற்பத்தி செய்வதன் மூலம், முழு உற்பத்தி செயல்முறையையும் கொண்ட இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் வாகன நிறுவனம் ஓலா எலக்ட்ரிக் ஆகும்.

எஸ்1 புரோ+ (5.2 kWh) ஸ்கூட்டர் 13 kW எலெக்ட்ரிக் மோட்டாரால் இயக்கப்படுகிறது; இது 2.1 வினாடிகளில் 0-40 கி.மீ வேகத்தை அடையும் திறன் கொண்டது. IDC (இந்தியன் டிரைவிங் சைக்கிள்) மற்றும் DIY (Do-It-Yourself) மோடுகளுடன் 320 கி.மீ தூரம் வரை செல்லும் திறனும் இதற்கு உண்டு.
ஹைப்பர், ஸ்போர்ட்ஸ், நார்மல், ஈக்கோ என நான்கு டிரைவிங் மோட்களுடன், முதல் முறையாக டூயல்-சேனல் ஏபிஎஸ் (Anti-lock Braking System) மற்றும் முன்/ பின் டிஸ்க் பிரேக்குகள் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. கூடுதல் குஷின் உடன் இரட்டை நிறத்திலான இருக்கை, ஸ்கூட்டரின் உடல் வண்ணத்தில் கண்ணாடிகள், புதிய வலிமையான அலுமினிய கிராப் ஹேண்டில்பார், சக்கர ரிம் டீக்கால்கள் போன்ற வசதிகளும் இதில் உள்ளன.

பேஷன் ரெட், போர்சலைன் ஒயிட், இண்டஸ்ட்ரியல் சில்வர், ஜெட் பிளாக், ஸ்டெல்லார் ப்ளூ, மிட்நைட் ப்ளூ உள்ளிட்ட கவர்ச்சிகரமான கலர் ஆப்ஷன்களிலும் எஸ்1 புரோ+ கிடைக்கிறது. பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் மார்க்கெட்டில் தற்போது எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் ரோட்ஸ்டர் எக்ஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களின் விரிவான வரிசையை வழங்குகிறது.
பிரீமியம் தரத்திலான எஸ்1 ஜென்-3 போர்ட்ஃபோலியோவில் எஸ்1 புரோ+ (5.2 kWh) ரூ.1,90,338 விலையிலும், எஸ்1 புரோ+ (4 kWh) ரூ.1,70,338 விலையிலும் கிடைக்கின்றன. மேலும், எஸ்1 புரோ (4 kWh) ரூ.1,44,999 விலையிலும், எஸ்1 புரோ (3 kWh) ரூ.1,24,999 விலையிலும் கிடைக்கின்றன. ஓலா நிறுவனத்தின் மாஸ் மார்க்கெட் ஸ்கூட்டர்கள் பிரிவில் ஜென்-3 எஸ்1 எக்ஸ்+ (4 kWh) ஸ்கூட்டர் ரூ.1,19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரம், ஜென்-3 எஸ்1 எக்ஸ் ஆனது 2 kWh பேட்டரி உடன் ரூ.84,999, 3 kWh பேட்டரி உடன் ரூ.98,999 மற்றும் 4 kWh பேட்டரி உடன் ரூ.1,14,999 விலைகளில் கிடைக்கிறது. ஓலா ரோட்ஸ்டர் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் வரிசையில் ரோட்ஸ்டர் எக்ஸ்+ (4.5 kWh) ரூ.1,29,999, ரோட்ஸ்டர் எக்ஸ் (2.5 kWh) ரூ.99,999, (3.5 kWh) ரூ.1,09,999, (4.5 kWh) ரூ.1,24,999 மற்றும் ரோட்ஸ்டர் எக்ஸ்+ (9.1 kWh) ரூ.1,89,999 விலைகளில் கிடைக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் வாகன (EV) உற்பத்தியாளராக வேகமாக வளர்ந்துவரும் ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் அதன் எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் அவற்றின் பேட்டரி செல்கள் உள்ளிட்ட உதிரிபாகங்களுக்கான தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தியை ஒருங்கிணைப்பதில் தொடர் ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுப்பிடிப்புகள் மூலம் நிபுணத்துவம் பெற்று வருகிறது.
தமிழ்நாட்டின் ஓசூரில் அமைந்துள்ள ஓலா எதிர்கால தொழிற்சாலையில், எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் முக்கிய உதிரிபாகங்களை தாண்டி தற்போது 4680 பாரத் செல் பேட்டரிகளை தன் கைப்பட உற்பத்தி செய்ய ஓலா எலெக்ட்ரிக் துவங்கியுள்ளது. இது நாட்டின் ஒருங்கிணைந்த இவி சுற்றுச்சூழல் அமைப்பைக் கட்டமைப்பதில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும். 4680 பாரத் செல் பேட்டரியை கொண்ட ஓலா எலெக்ட்ரிக் 2-வீலர்களின் டெலிவிரிகள் பல மாநிலங்களில் விரிவடைவதால், இந்த வாகனங்களை விரைவில் நாடு முழுவதும் கொண்டு செல்ல ஓலா தயாராகி வருகிறது.


Click it and Unblock the Notifications









