காரை காட்சிப்படுத்த போறாங்களா!.. ஓலா எலெக்ட்ரிக் என்ன பிளான் இருக்குனே தெரியல.. சர்ப்ரைஸ் நிறைய காத்திருக்கு!!

'பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025' (Bharat Mobility Global Expo 2025) தொடங்க இன்னும் ஒரு சில தினங்களே உள்ளன. இந்தியாவில் நடைபெற இருக்கும் இந்த உலக புகழ்பெற்ற வாகன கண்காட்சியில் ஓலா எலெக்ட்ரிக் (Ola Electirc) நிறுவனமும் கலந்துக் கொள்ள இருப்பதாக உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து, அது தன்னுடய தயாரிப்புகள் சிலவற்றை காட்சிப்படுத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகின்றது. நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மிக மிக மலிவு விலையில் இரண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களைக் காட்சிப்படுத்தியது.

அவற்றை இந்த வாகன கண்காட்சியில் வைத்து நிறுவனம் காட்சிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர, இன்னும் சில புதுமுக வாகனங்களையும் அது வெளியீடு செய்யலாம் என்கிற எதிர்பார்ப்பு அநேகர் மத்தியில் எழும்பி இருக்கின்றது. சில மாதங்களுக்கு முன்னர் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் எலெக்ட்ரிக் கார் மாடலுக்கு பேடண்ட் உரிமத்தைப் பெற்றதாக தகவல்கள் வெளியாகின.

Ola electric at bharat mobility global expo 2025

இதுமட்டுமில்லைங்க, நிறுவனம் அதன் சார்பில் சில டீசர் படங்களையும் வெளியீடு செய்திருந்தது. 2022 ஆம் ஆண்டில் இருந்தே இந்த பணியில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. ஆகையால், இந்த நிறுவனம் அதன் மின்சார கார் மாடலையும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் வைத்துக் காட்சிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ வார்த்தைகளும் இதுவரை ஓலா எலெக்ட்ரிக் இடமிருந்து வெளியாகவில்லை. ஆட்டோ எக்ஸ்போவில் சர்ப்ரைஸாகவே அது தன்னுடைய வாகனங்களை காட்சிப்படுத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிகின்றது. எனவே ஆட்டோ எக்ஸ்போவின்போதே அது என்ன மாதிரியான வாகனங்களை காட்சிப்படுத்த இருக்கின்றது என்பது தெரிய வரும்.

ஜனவரி 17 தொடங்கி ஜனவரி 22 வரையில் ஆட்டோ எக்ஸ்போ இந்தியாவில் நடைபெற இருக்கின்றது. ஓலா எலெக்ட்ரிக் மட்டுமல்ல ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, டிவிஎஸ் மோட்டார், ஹோண்டா மற்றும் சுஸுகி மோட்டார்சைக்கிள் உள்ளிட்ட நிறுவனங்களும் இந்த வாகன கண்காட்சியில் கலந்துக் கொண்டு தங்களின் புதுமுக தயாரிப்புகளை காட்சிப்படுத்தல் மற்றும் வெளியீடு செய்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட இருக்கின்றன.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அதன் சார்பில் எஸ்1 இசட் (S1 Z) மற்றும் ஜிக் (Gig) ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களைக் கட்டாயம் காட்சிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்துடன், நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக் மாடல்களான ரோட்ஸ்டர் (Roadster)-ம் காட்சிப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக, அனைவரின் எதிர்பார்ப்பில் நிறுவனத்தின் எஸ்1 இசட் மற்றும் ஜிக் ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களே இடம் பிடித்திருக்கின்றன. இவையே பிராண்டின் மிக மிக விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் ஆகும். எஸ்1 இசட் இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

எஸ்1 இசட் (S1 Z) மற்றும் எஸ்1 இசட் பிளஸ் (S1 Z+) ஆகியவையே அவை ஆகும். முதல் ஒன்றிற்கு ரூ. 59,999-ம், இரண்டாம் ஒன்றிற்கு ரூ. 64,999-ம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்றது. இதில் விலை குறைவாக கொண்டிருக்கும் வேரியண்ட் பயணிகளுக்கான தேர்வாகும். இரண்டு பேரால் அமர்ந்து பயணிக்க முடியும்.

அதிக விலையைக் கொண்டிருப்பது டெலிவரி சேவைக்கான ஆப்ஷன் ஆகும். இதற்காக பின் பக்கத்தில் கேரியர் வழங்கப்பட்டு இருக்கும். சரக்கு அல்லது பிற டெலிவரி பொருட்களை அதில் ஏற்றிக் கொள்ள முடியும். ஒற்றை மற்றும் இரண்டு என்கிற பேட்டரி பேக் ஆப்ஷன்களில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கிக் கொள்ள முடியும்.

மேலே பார்த்த விலைகள் சிங்கிள் பேட்டரி பேக்குடன் கிடைக்கும் ஆப்ஷன்களின் விலை ஆகும். இதற்கு அடுத்தபடியாக ஓலா எலெக்ட்ரிக்-இன் விலை குறைவான இ-ஸ்கூட்டர்களில் ஜிக் இடம் பிடித்திருக்கின்றது. சொல்லப்போனால் இதுவே பிராண்டின் மிக மிக விலை குறைவான இ-ஸ்கூட்டராக காட்சியளிக்கின்றது. இதுவும் இரண்டு விதமான தேர்வுகளிலேயே விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது.

ஜிக் (Gig) மற்றும் ஜிக் பிளஸ் (Gig+) ஆகியவையே அவை ஆகும். இரண்டும் டெலிவரி சேவைக்கான ஆப்ஷன் ஆகும். ஒன்றிற்கு ரூ. 39,999-ம், மற்றொன்றிற்கு ரூ. 49,999-ம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்றது. ஒற்றை பேட்டரி பேக்கைக் கொண்ட தேர்வின் விலையே இதுவும் ஆகும். மேலும், அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலாவின் இந்த இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் புக்கிங் பணிகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. இன்னும் டெலிவரி பணிகள் தொடங்கவில்லை. விரைவில் அதுவும் இந்தியாவில் தொடங்கிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே இவற்றின் பக்கம் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு ஓலா நிறுவனம் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்த திட்டமிட்டு இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 14, 2025, 5:00 [IST]
English summary
Ola electric to showcase innovations at bharat mobility global expo 2025
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+