8ம் ஒரே நாள்ல அறிமுகம் செஞ்சுட்டாங்க.. ஓலா இ-ஸ்கூட்டர் ரூ. 79,999ல் இருந்தே விற்பனைக்கு கிடைக்கும்..

முன்னணி மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஓலா எலெக்ட்ரிக், இந்தியாவில் எஸ்1 சீரிஸின்கீழ் விற்பனைக்குக் கிடைக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் மூன்றாம் தலைமுறை வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. மொத்தமாக 8 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அது அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த நிறுவனம் எஸ்1 சீரிஸ்-இன்கீழ் எஸ்1 ப்ரோ (S1 Pro), எஸ்1 ப்ரோ பிளஸ் (S1 Pro+), எஸ்1 எக்ஸ் பிளஸ் (S1 X+) மற்றும் எஸ்1 எக்ஸ் (S1 X) ஆகிய மாடல்களையே அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த மாடல்களின் மூன்றாம் தலைமுறை வெர்ஷனே தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.

எஸ்1 ப்ரோ பிளஸ்: இந்த மாடலை இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகளில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது, ஓலா. 5.3 kWh மற்றும் 4 kWh ஆகியவையே அவை ஆகும். இரண்டிலும் 13 kW திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

Ola electric launches new s1 gen 3 scooters

மோட்டார் ஒன்றாக இருந்தாலும், இதன் டாப் ஸ்பீடு பேட்டரி பேக்கை பொருத்து மாறுபடுகின்றது. அந்தவகையில், பெரிய பேட்டரி பேக்கில் அதன் டாப் ஸ்பீடு மணிக்கு 141 கிமீட்டராகவும், சிறிய பேட்டரி பேக் தேர்வில் டாப் ஸ்பீடு மணிக்கு 128 கிமீட்டராகவும் உள்ளது.

அதேவேளையில், 5.3 kWh வேரியண்டில் தன்னுடைய புதிய பேட்டரி பேக்கான 4680 பாரத் செல்களையே அது பயன்படுத்தி இருக்கின்றது. இதில் ஓர் முழு சார்ஜில் 320 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். அதேவேளையில், 4 kWh பேட்டரி பேக் தேர்வில் ஓர் முழு சார்ஜில் 242 கிமீ தூரம் வரை மட்டுமே பயணிக்க முடியும்.

Ola electric launches new s1 gen 3 scooters

நான்கு விதமான ரைடிங் மோட்கள், டூயல் ஏபிஎஸ் மற்றும் முன்-பின் வீல்களில் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, பயணி மற்றும் ரைடருக்கு அதிக சப்போர்ட்டை வழங்கக் கூடிய ஃபோம் இருக்கை, உடல் தோற்றத்திற்கு ஏற்ற கண்ணாடிகள், டை-காஸ்ட் அலுமினியத்தால் தயாரிக்கப்பட்ட கைப் பிடிகள் போன்ற சிறப்புகளையும் ஓலா எஸ் ப்ரோ பிளஸ் மாடலில் நம்மால் காண முடிகின்றது.

எஸ் ப்ரோ: இந்த மாடலில் 11 kW திறன் கொண்ட மிட்-டிரைவ் வகை மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. பேட்டரி பேக்கை பொருத்த வரை 4 kWh மற்றும் 3 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் ஆப்ஷன்களே வழங்கப்படுகின்றன. இதன் டாப் ஸ்பீடு பேட்டரி பேக்கை பொருத்து மாறுபடுகின்றது.

அந்தவகையில், சிறிய பேட்டரி பேக்கைக் கொண்ட தேர்வின் டாப் ஸ்பீடு மணிக்கு 117 கிமீட்டராகவும், பெரிய பேட்டரி பேக்கைக் கொண்ட தேர்வின் டாப் ஸ்பீடு மணிக்கு 125 கிமீ ஆகும். 3 kWh பேட்டரி பேக்கில் ஓர் முழு சார்ஜில் 176 கிமீ ரேஞ்சையும், 4 kWh பேட்டரி பேக்கில் ஓர் முழு சார்ஜில் 242 கிமீ ரேஞ்சையும் பெற்றுக் கொள்ள முடியும்.

எஸ்1 எக்ஸ் பிளஸ், எஸ்1 எக்ஸ்: பன்முக பேட்டரி பேக் ஆப்ஷன்களை இந்த மாடலில் ஓலா வழங்குகின்றது. ஓலா எஸ்1 எக்ஸ்-இல் மட்டுமே மூன்று விதமான ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. 2 kWh, 3 kWh மற்றும் 4 kWh ஆகிய பேட்டரி பேக் ஆப்ஷன்களே வழங்கப்படுகின்றன.

எஸ்1 எக்ஸ் பிளஸ் மாடலில் 4 kWh பேட்டரி பேக் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகின்றது. ஓர் முழு சார்ஜில் 95 கிமீ முதல் 193 கிமீ வரையில் ரேஞ்சை வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. 7 kW மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு பேட்டரி பேக்கிற்கு ஏற்ப மாறுபடும். 101 கிமீ, 115 கிமீ மற்றும் 123 கிமீ என்றே அது மாறுபடும்.

விலை விபரம்: ஓலா எஸ்1 எக்ஸ் ரூ. 79,999 தொடங்கி ரூ. 1,07,999 என்கிற விலையிலும், ஓலா எஸ்1 ப்ரோ ரூ. 1.14 லட்சம் என்கிற விலையில் தொடங்கி ரூ. 1.34 லட்சம் வரையிலான விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. எஸ்1 ப்ரோ பிளஸ் 1.54 லட்ச ரூபாய் தொடங்கி 1.69 லட்சம் ரூபாய் வரையிலான விலையே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு சந்தையில் தொடர்ச்சியாக போட்டி அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த போட்டியை சமாளிக்கும் பொருட்டே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தற்போது தன்னுடைய புதிய தலைமுறை எஸ்1 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்திருக்கின்றது. இவை நிறுவனத்தை விற்பனையில் தூக்கி நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, January 31, 2025, 13:38 [IST]
English summary
Ola electric unveils s1 gen 3 portfolio featuring eight new scooters across segments
மேலும்... #ola #electric bike #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+